இழத்தலும் காத்தலும்
இன்றைய முதல் வாசகத்தில் (காண். இச 30:15-20), மோசே வழியாக ஆண்டவர், மனிதரின் விருப்புரிமை பற்றிப் பேசுகின்றார். மனிதர் முன்பாக வாழ்வும் நன்மையும் சாவும் தீமையும் வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கின்ற மோசே, வாழ்வைத் தேர்ந்துகொள்ளுமாறு அழைக்கிறார்.
வாழ்வைத் தேர்ந்துகொள்தல் என்றால் என்ன என்பதை விளக்கும் விதமாக அமைந்துள்ளது இன்றைய நற்செய்தி வாசகம்.
தன் பாடுகளையும் இறப்பையும் முன்னுரைக்கின்ற இயேசு, வாழ்வு மூன்று நிலைகளில் உள்ளது எனத் தன் சீடர்களுக்கு எடுத்துரைக்கின்றார்:
(அ) தன்னலம் துறத்தலில்
(ஆ) தன் சிலுவை ஏற்றலில்
(இ) உயிரை இழப்பதில்
இழத்தலின் வழியாகவே காத்தல் நடக்கிறது என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது.
நாம் எதைத் தெரிவு செய்தாலும் அதற்கான விளைவை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.
எளிய,உயரிய பதிவு...🤝
ReplyDeleteநன்றி🙏
துறத்தலா? ஏற்றலா? இழத்தலா?...... மூன்றுமே “ காத்தலு” க்குள்/ வாழ்வுக்குள் அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள்.... சொல்கிறது இன்றையப்பதிவு. வாழ்வா- சாவா? நன்மையா- தீமையா? என் தேர்வு எது? தொடங்கிவிட்டது தவக்காலம். நம் தேவை எதுவென்று யோசிப்போம்....இறைவனின் உதவியுடன்....
ReplyDeleteதந்தையின் இன்றையப்பதிவு எனக்கொன்றை சொல்லாமல் சொல்கிறது. “புயல் அடிக்கலாம்......காற்றும் வீசலாம்...ஏன் இடியும் இடிக்கலாம்.எதுவும் என்னைத் தாக்காது என் பணியின் முன்னால்”. நல்ல விஷயத்தை நமதாக்கிக்கொள்ள நாளென்ன? பொழுதென்ன? இன்றே தொடங்குவோம்.....தந்தைக்கு நன்றிகள்!!!