மிகுதியான சொற்களை
இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்கள் 'சொற்களை' மையமாக வைத்துச் சுழல்கின்றன. முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள், இறைவாக்கினர் எசாயா வழியாக, தன் வார்த்தையின் இயல்பைப் பற்றி எடுத்துரைக்கின்றார்.
இறைவனின் வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவரிடம் திரும்பிச் செல்வதில்லை.
நற்செய்தி வாசகத்தில், இறைவேண்டல் பற்றித் தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்ற இயேசு, மிகுதியான வார்த்தைகளைப் பேசுவதால் செபம் கேட்கப்படும் என நினைக்க வேண்டாம் என மொழிகின்றார்.
மேலும், வானகத் தந்தை அனைத்தையும் அறிந்தவராக இருப்பதால் வார்த்தையும் தேவையற்றவை என்கிறார் இயேசு.
தாக்கத்தை ஏற்படுத்தாத வார்த்தைகள் ஏற்புடையவை இல்லை - இறைவனுக்கு.
நேர்முகமான வார்த்தைகள் பேசுதல் நலம். ஏனெனில், நம் சொற்களே நம் செயல்களாகின்றன.
நேர்முகமான வார்த்தைகள்...
ReplyDelete*புண்படுத்தும் வார்த்தைகளிலிருந்து நோன்பு இருங்கள். அன்பான வார்த்தைகளை கூறுங்கள்.
*வார்த்தைகளிலிருந்து நோன்பு இருங்கள். மௌனமாக செவிமடுங்கள்.
By Pope Francis.
Yes.I believe the above resolution,suits your today's reflection.
இன்றறயப் பதிவின் ஒவ்வொரு வரியுமே வாழ்ந்து பார்க்க வேண்டிய ஒன்று.இறைவனின் வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் அவரிடம் திரும்பிச் செல்வதில்லை என்கிறார் தந்தை. இறை வார்த்தை மட்டுமா? நம் வார்த்தைகளும் தானே! அப்படியெனில் நாம் தேர்ந்தெடுத்துப் பேசும் வார்த்தைகள் குறித்து கவனம் தேவை என்று மறைமுகமாக உணர்த்தப்படுகிறோம்.
ReplyDeleteஉண்மைதான்! நம் நினைவுகள் அனைத்தையும் அறிந்த தேவனுக்கு வெறும் ஒலி எழுப்பும் வார்த்தைகள் தேவையில்லைதான்.நம் வார்த்தைகள் அவை இறைவனுக்கோ இல்லை மனிதனுக்கோ..நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதும்....நம் சொற்களனைத்தும் பின் செயல்களாக உரு மாற்றம் பெறுவதால் அவை நேர்முகமான வார்த்தைகளாக இருக்க வேண்டுமென்றும் வார்த்தைகளுக்கு “ இலக்கணம்” வடிக்கிறார் தந்தை. இன்றைய கருத்துக்கள் அனைத்தும் அப்படியே வாழ்க்கையாக மாற்றப்பட்டால் உலகில் கண்ணீர்,கஷ்டம்,மன்னிப்பு போன்ற வார்த்தைகளுக்குத் தேவையில்லை என்ற புரிதலைத்தரும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு வாழ்த்துக்கள்! நன்றிகள்!!!