Sunday, February 7, 2021

இன்னார் என்று கண்டுணர்ந்து

இன்றைய (8 பிப்ரவரி 2021) நற்செய்தி (மாற் 6:53-56)

இன்னார் என்று கண்டுணர்ந்து

இயேசுவும் அவருடைய சீடர்களும் மறுகரைக்குச் செல்கின்றனர். அவர்கள் படகை விட்டு இறங்கியவுடன், இயேசுவை மக்கள் இன்னார் என்று கண்டுகொள்கின்றனர். உடனடியாக அவரை நோக்கி நோயுற்றவர்களை அள்ளிக்கொண்டு வருகின்றனர்.

ஆக, இயேசுவை ஒருவர் எப்படிக் கண்டுகொள்கிறாரோ அப்படித்தான் அவர் பதிலிறுப்பு செய்கின்றார்.

நோயுற்றவருக்கு நலம் தருபவர் என்று இயேசுவைக் கண்ட மக்கள், அவரிடம் நலமற்றவர்களைக் கொண்டு வருகின்றனர். அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது தொடுமாறு அனுமதி கேட்கின்றனர். தொட்ட அனைவரும் குணமடைகின்றனர்.

இன்றைய முதல் வாசகத்தில் கடவுள் இந்த உலகைப் படைப்பவராக நம் முன் வருகின்றார்.

இன்று நான் இயேசுவை எப்படிக் கண்டுகொள்கின்றேன்?

அவர் எனக்கு யார்?

அவர் எனக்கு யார் என்பதைப் பொருத்தே என் பதிலிறுப்பு இருக்கும்.

இன்னொரு பக்கம், நான் யாரென்று மக்கள் கண்டுணருமாறு என்னிடம் உள்ள முக்கியமான பண்பு அல்லது குணநலன் எது?

அதை நான் எப்படி வளர்த்தெடுக்கிறேன்?

1 comment:

  1. இயேசு படகை விட்டு இறங்கியவுடன் அவரை யாரென்று கண்டுகொண்ட மக்கள் நலமற்றவர்களை அவரிடம் அள்ளிக்கொண்டு வர,, அவரும் அவர்களது நம்பிக்கை பொய்த்துப்போகாதவாறு அவர்களை குணமாக்குகிறார் என்கிறது இன்றைய வாசகம்.அங்கு வந்த மக்களுக்கு அவர் குணமளிக்கும் மருத்துவரெனில் எனக்கு அவர் யார்? நான் அவரில் காணும் என் அடையாளமே என் பதிலிறுப்பாக அடுத்தவருக்கு இருக்குமெனில்...எனக்கடுத்திருப்பவருக்கு நான் யார்? பதிலளிக்க அத்தனை எளிதான கேள்வியா இது?

    என்னைப் பார்க்கும் ஒருவர் என்னைப்பார்த்தவுடன் “ஓ! இவர் எல்லோருக்கும் நல்லது செய்பவராயிற்றே! இவரால் எனக்கிந்த உதவியைச் செய்யலமுடியுமே! “ என நினைப்பாரா? அப்படி நினைக்குமளவிற்கு நான் மற்றவருக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கிறேனா? யோசிக்கிறேன்.... என்னில் ஒரு நற்செயலை உருவாக்க... தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete