Friday, November 9, 2018

சிறியவற்றில்

இன்றைய (10 நவம்பவர் 2018) நற்செய்தி (லூக் 16:9-15)

சிறியவற்றில்

பணஆசைமிக்க பரிசேயரைக் கடிந்துகொள்ளும் இயேசு தன் சீடர்களுக்கு பணம் பற்றிப் போதிக்கின்றார். அவரின் போதனை மூன்று உட்கூறுகளைக் கொண்டிருக்கிறது:

அ. நிலையற்ற செல்வத்தைக் கொண்டு நிலையான நண்பர்களைச் சம்பாதிக்க வேண்டும்.

ஆ. சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவராய் இருத்தல் வேண்டும்.

இ. ஒரு தலைவருக்கு (கடவுளுக்கு) மட்டும் ஊழியம் செய்ய வேண்டும்.
'நீ எதற்கு அல்லது யாருக்குப் பணிபுரிகிறாயோ நீ அவரோடு நெருக்கமாவாய்' என்பது ஆங்கிலப் பழமொழி.

இம்மூன்றுக்கும் மையமாக இருப்பது 'சிறியவற்றில்' என்ற வார்த்தை.

'சிறியவற்றில் நம்பிக்கை பெரியதிலும் நம்பிக்கை.' 'சிறியதில் நேர்மையற்ற நிலை பெரியதிலும் நேர்மையற்ற நிலை.'

ஆக, செல்வத்திற்கு ஊழியம் செய்வதும்கூட சிறியவற்றில்தான் தொடங்கும். சின்ன சின்ன சமரசங்கள் பெரிய சமரசங்களுக்கு இட்டுச் செல்லும்.

'நான் காலையில் 5 மணிக்கு துயில் எழுவேன்' என்பது நான் எனக்குக் கொடுக்கும் மிகச்சிறிய வாக்குறுதிதான். ஆனால், அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றத் தவறும்போது, நான் கொடுக்கும் பெரிய பெரிய வாக்குறுதிகளை நினைத்துக் கேலி செய்யும் என் மனம்.

சின்னஞ்சிறியதில்தான் வாழ்க்கை என்பதை அறிதலே ஞானம்.

இந்த ஞானத்தை புனித பவுல் பெற்றிருப்பதை இன்றைய முதல் வாசகத்தில் பார்க்கிறோம்: 'எந்நிலையிலும் மனநிறைவோடு இருக்கக் கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும். வளமையிலும் வாழத் தெரியும்' என்று பவுல் எப்படிச் சொல்ல முடிகிறது?

அவர் சின்னஞ்சிறியதில் தன் வாழ்வின் மகிழ்வைக் கண்டார்.

2 comments:

  1. சிறிய வார்த்தைகளால் பெரிய விஷயங்களைச் சொல்லும் ஒரு பதிவு!" சிறியவற்றில் நம்பிக்கை; பெரியவற்றிலும் நம்பிக்கை"; " சிறியவற்றில் நேர்மையற்ற நிலை; பெரியவற்றிலும் நேர்மையற்ற நிலை"....
    " If we take care of small things, big things will take care of themselves " என்பது ஆங்கிலப் பழமொழி.'சிறுமை' என எதையும் புறந்தள்ளக்கூடாது என்பதே இப்பழமொழி நமக்குச்சொல்லும் பாடம்.காலையில் துயில் எழுதலில் தொடங்கி செல்வத்தை சீராக சேர்ப்பது வரை இந்த " சிறிய" விஷயங்களை சீர்தூக்கிப் பார்க்கச்சொல்கிறது இன்றையப்பதிவு.வறுமையிலும்,வளமையிலும் வாழத்தெரிந்த பவுல் சிறிய விஷயங்களில் மகிழ்வவைக் கண்டாரெனில் நம்மால் முடியாதா என்ன? சிறியதுகளைத் தேடிப்பிடிப்போம்....பெரிய விஷயங்களில் நிறைவுகாண! பெரிய ஆலமரங்களுக்கு அழகும்,கம்பீரமும் சேர்க்கும், அந்த சிறிய கனிகளை ஞாபகப்படுத்தும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு " சபாஷ்!"

    ReplyDelete
  2. "நீ எதற்கு (அ) யாருக்கு பணிபுரிகிறாயோ...நீ அவருக்கு நெருக்கமாவாய்"
    ஒரே தலைவராகிய இயேசுவுக்கு மட்டும் ஊழியம் புரியவும், தூய பவுலடிகளாரைப்போன்று எந்நிலையிலும மனநிறைவோடு இருக்கவும், இறைவா, எனக்கருள் புரிவாய்!
    வழிநடத்திய அருட்பணி. யேசுவுக்கு எம் நன்றிகள்.

    ReplyDelete