Tuesday, November 6, 2018

சிந்தித்துப் பார்த்தல்

இன்றைய (7 நவம்பர் 2018) நற்செய்தி (லூக் 14:25-33)

சிந்தித்துப் பார்த்தல்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீடத்துவத்தைப் பற்றிப் போதிக்கின்றார். 'தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது' என்று சொல்கின்ற இயேசு, 'கோபுரம் கட்டும் ஒருவர்' மற்றும் 'போருக்குச் செல்லும் அரசர்' என்று இரண்டு எடுத்துக்காட்டுக்களை முன்வைக்கிறார்.

இவர்கள் வழியாக இயேசு சீடத்துவத்திற்காகச் சொல்லும் பாடங்கள் மூன்று:

அ. நிறைய சிந்தித்து முடிவெடுத்தல்

சிந்தித்து முடிவெடுத்தல் என்பது கொஞ்ச நேரம் கோயிலில் உட்கார்ந்து தியானித்து முடிவு செய்தல் அல்ல. மாறாக, எல்லாவற்றையும் ப்ளாக் அன்ட் ஒயிட்டில் எழுதுவது. எழுதியதை மேலாண்மை செய்வது.

ஆ. பாதி வழி அல்ல. முழு வழியும் செல்லல்

கோபுரம் கட்டுபவர் பாதியோடு விட்டுவிட்டால் அது அவருக்கு அவப்பெயரையும், மற்றவர்களின் கேலிப்பேச்சையும் கொண்டுவரும். அதுபோல, இருபதாயிரம் பேரை பத்தாயிரம் பேரை எதிர்க்கும் அரசன் பாதியோடு விட்டால் அது அவனுக்கும், அவனோடு இருப்பவர்களுக்கும் மரணமாக முடியும். ஆக, செய்வதை முழுமையாகச் செய்தல் அவசியம்.

இ. அனைத்தையும் இழக்க வேண்டும்

கோபுரம் பாதியில் நிற்க இவர் மீதப் பணத்தை தன்னுள் வைத்துக்கொண்டிருக்க முடியாது. தன்னிடம் உள்ளதை முழுமையாக இழக்க வேண்டும். அதுபோல, அரசனும் தன் உடைமை மட்டுமல்ல. மாறாக, தனது தன்மானத்தையும் இழந்து எதிரி அரசனுடன் பேச வேண்டும்.

இந்த மூன்றும் சீடத்துவத்தின் பாடங்கள்.

இதையொட்டியே திருவள்ளுவரும்,

'வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்' (குறள் 471)

2 comments:

  1. Short & Sweet interpretation..
    Think well; then decide...
    Go; continue to the end...
    Sacrifice to the fullest..
    ( Ofcourse then nothing will be left)
    Except the unconditional love of our Heavenly father..
    Lord take me as your best disciple...Amen.

    ReplyDelete
  2. இன்றையப்பதிவைத்திறந்த உடனே கண்களில் பட்ட அந்த ஆங்கில வரிகள் " மீட்பை இலவசமாகப் பெறும் ஒருவர்,அதைத்தாங்கும் " சீடத்துவத்திற்குத்" தன் வாழ்க்கையையே பணயம் வைக்கவும் தயாராயிருத்தல் அவசியம்." என்ற பதிவின் உள்ளடக்கத்தை முன் வைக்கின்றன.உண்மையே!தன் சீடத்துவத்துக்கான சிலுவையைச் சுமக்க விரும்பும் ஒருவர் 1. தாம் சிந்தித்ததைச் செயலாக்க தன் திட்டங்களை எழுத்து வடிவில் கொண்டுவருவதும்,2. வழியில் என்ன இடர் வரினும் அதை மேற்கொள்ளும் துணிச்சல் கொள்வதும்,3. நினைத்த விஷயத்தை முற்றிலும் செயல்படுத்த தன்னிடம் உள்ள அனைத்தையும் இழக்கும் துணிவைப் பெற்றிருத்தலும் அவசியம் என்கிறார் தந்தை. உண்மையே! அண்மையில் தந்தை தரும் " தினம் ஒரு திருக்குறள்" பதிவிற்கு ' அழகு' சேர்ப்பதோடு தந்தையின் வார்த்தைகளுக்கு வலிமையும் சேர்க்கிறது. தொடருங்கள்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete