Thursday, January 14, 2021

படைப்புத் திறத் துணிவு

இன்றைய (15 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 2:1-12)

படைப்புத் திறத் துணிவு

'தந்தையின் இதயத்தோடு' என்ற தனது திருத்தூது மடல் வழியாக, புனித யோசேப்பு ஆண்டை அறிவித்துள்ள நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், யோசேப்பு பற்றிய வரையறையில், 'அவர் ஒரு படைப்புத் திறத் துணிவு நிறை தந்தை' என்று குறிப்பிடுகின்றார். ஆங்கிலத்தில் 'father with creative courage.'

இந்த வார்த்தையை விளக்குவதற்கு திருத்தந்தை அவர்கள் இன்றைய நற்செய்தி வாசகப் பகுதியைக் கையாளுகின்றார். அதாவது, முடக்குவாதமுற்ற தங்கள் நண்பர் ஒருவருக்கு இயேசு நலம் தர வேண்டும் என்று விரும்புகின்ற இனியவர்கள் அவரிடம் அவரை அழைத்து வருகின்றனர். கூட்டமோ மிகுதியாக இருக்கின்றது. இயேசுவிடம் உடனே சென்றாக வேண்டுமென்று அவர்களுடைய நம்பிக்கை அவர்களை உந்தித் தள்ளுகின்றது. விளைவாக, அவர்கள் கூரையைப் பிரித்து தங்கள் நண்பரை இறக்குகின்றனர்.

நாம் இந்தப் பகுதியை வாசிப்பதற்கு எளிதாக இருக்கிறது.

ஆனால், யாராவது ஒருவர் முடக்குவாதமுற்ற ஒருவருக்காக தங்கள் வீட்டுக் கூரையைப் பிரிக்க அனுமதிப்பார்களா?

'இவ்வளவு நாள்கள் கட்டிலில் கிடந்தான் ... இப்போ என்ன எழுந்து மாரத்தான் ஓட்டமா ஓடப்போறான்? அப்படியே கிடக்கட்டும்'

'இந்தக் கூரையை அல்லது ஓடுகளை வேய எவ்வளவு நாள்கள் எடுத்தன? அதன் சட்டங்களை அமைக்க எவ்வளவு செலவாயிற்று?'

'கொஞ்சம் பொறுங்கள்! கூட்டம் வெளியேறட்டும்! அப்புறம் இயேசுவிடம் காட்டுவோம் அவனை!'

இப்படி அவர்கள் நினைக்கவில்லை.

உடனடியாகச் செயல்படுகிறார்கள். தங்கள் நண்பரின் நலத்தை விரைவில் காண விழைகின்றனர்.

இன்று பல நேரங்களில் மனிதர்களா? அல்லது பொருள்களா? என்று பார்த்தால், பொருள்களே என்ற நிலைதான் மேலோங்கி உள்ளது. 

படைப்புத் திறத் துணிவு கொண்ட அந்த நால்வர் தங்கள் நண்பருக்காக கூரையையும் பிரித்து நலம் பெற்றுத் தருகிறார்கள்.

(அவர்கள் தங்கள் வீட்டுக் கூரையைப் பிரித்தார்களா? அல்லது இன்னொருவரின் வீட்டுக் கூரையையா? என்று தெரியவில்லை!)
ஆனால்,

வீட்டுக்கு உள்ளே இருந்த மனிதர்கள் சிலர் தங்களைச் சுற்றி ஓடுகளை வேய்ந்துகொண்டிருந்தனர். அவர்களால் இயேசு தந்த நலனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்கள் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தவே விரும்பினர்.

ஒரே நபர். ஒரே நிகழ்வு.

ஒரு குழுவினருக்கு அது நம்பிக்கையின் நிகழ்வாகவும், இன்னொரு குழுவினருக்கு முகம் சுளிக்கும் நிகழ்வாகவும், மக்கள் கூட்டத்துக்கு மகிழ்ச்சியின் நிகழ்வாகவும் இருக்கிறது.

படைப்புத் திறத் துணிவு இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.

5 comments:

  1. முடக்குவாதமுற்றவரை இயேசுவிடம் கொண்டு வந்தபோது வீட்டு உரிமையாளர்கள் எந்த எதிர்மறை செயல்களையும் கையாளவில்லை. வீட்டுக்குள்ளே இருந்த சில மனிதர்கள் ஓடுகளை வேய்ந்து கொண்டிருந்த போது “ படைப்புத் திறத்துணிவு” கொண்ட நால்வர் கூரையையும் பிரித்துத் தங்கள் நண்பருக்கு நலம் பெற்றுத்தருகிறார்கள்.

    ஒரே நபர்.ஒரே நிகழ்வு. ஒருவருக்கு நம்பிக்கை.... எதிராளிக்கு முகச்சுளிப்பு...மக்கள் கூட்டத்திற்கு மகிழ்ச்சி.இதில் நான் யார்?

    புனித யோசேப்பு தன்னில் கண்ட “ படைப்புத் திறத்துணிவு” என்னிலும் இருப்பின் நான் செய்ய விழையும் நற்செயலுக்காக யார் என்மேல் கல்லைடுத்து எறிய முற்பட்டாலும் எனக்கு கவலை இல்லை.

    யோசேப்புக்கு அழகான வார்த்தையால் பட்டம் சூட்டிய திருத்தந்தைக்கும்....அதை நம்மிடம் கொண்டு சேர்த்த தந்தைக்கும் நன்றிகள்!!!

    ReplyDelete
  2. "father with creative courage.'
    இந்த வார்த்தைகளை வழங்கிய " திருத்தந்தையை வணங்குகிறேன்.


    அதை,எமக்கு அறிமுகப்படுத்திய,அருட்பணி. யேசு கருணாநிதிக்கு,🙏.

    நன்றி.

    ReplyDelete
  3. Ideogram....marvelous🤝

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete