Sunday, January 10, 2021

மனிதரைப் பிடிப்பவர்

இன்றைய (11 ஜனவரி 2021) நற்செய்தி (மாற் 1:14-20)

மனிதரைப் பிடிப்பவர்

கிறிஸ்து பிறப்புக் காலம் முடிந்து ஆண்டின் பொதுக்காலத்தைத் தொடங்குகிறோம்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய முதல் வாசகம் (காண். எபி 1:1-6), இயேசுவில் நிகழ்ந்த இறைவெளிப்பாட்டின் மேன்மையை எடுத்துரைக்கின்றது.

மேன்மையான நிலையில் தன்னை வெளிப்படுத்திய இறைவன் யாரையெல்லாம் சந்திக்கிறாரோ அவர்களை மேன்மை நிலைக்கு உயர்த்துகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தன் முதற்சீடர்களை அழைக்கும் நிகழ்வைப் பதிவு செய்கிறார் மாற்கு. கடலில் வலை வீசிக்கொண்டிருந்த சீமோன் மற்றும் அந்திரேயாவையும், வலைகளைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த யாக்கோபையும் யோவானையும் அழைக்கின்றார் இயேசு.

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் இனி மனிதரைப் பிடிப்பவர்கள் ஆவார்கள் - இதுதான் இயேசு அவர்களுக்குத் தந்த வாக்குறுதி.

இயேசு தன் சீடர்களை அழைக்கின்ற நிகழ்வில், அழைக்கின்ற அனைவருக்கும் ஒரு பெரிய மற்றும் அகலமான பார்வையைத் தருகின்றார். குனிந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களை நிமிர்ந்து பார்க்கச் செய்கின்றார். இதுதான் அவருடைய தனித்துவம்.

இந்த நிகழ்வு நமக்கு மூன்று விடயங்களைக் கற்றுத் தருகிறது:

(அ) நம் அன்றாட அலுவல்களில் நாம் மூழ்கியிருக்கும்போது அவர் நம்மிடம் வருகிறார்.

(ஆ) நம் பார்வையை அகலமாக்குகின்றார்.

(இ) உடனடியான பதிலிறுப்பை நம்மிடம் எதிர்பார்க்கின்றார்.

1 comment:

  1. இயேசு தன் சீடர்களை அழைக்கின்ற நிகழ்வில் அவர்களின் பார்வையை அகலமாக்குகிறார். குனிந்து பார்த்துக்கொண்டிருந்தவர்களை நிமிர்ந்து பார்க்க வைக்கிறார். அதுதான் அவரது “ தனித்துவம்” என்கிறார் தந்தை.

    என் “ தனித்துவம்” என்ன? இயசு நான் நினையாத நேரத்தில் என்னிடம் வந்தால் என்ன மாற்றம் நிகழும் என்னில்? என் மற்றவர்களைப் பார்க்கும் விதம் மாறுமா? என் பார்வையை அகலமாக்கும் அவர் என் பதிலிறுப்பையும் உடன் எதிர்பார்க்கிறார். முடியுமா என்னால்? முயன்றால் முடியாத்துண்டோ? முடிய வேண்டும். நம்பிக்கையூட்டிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete