Thursday, November 12, 2015

ஒரே கட்டிலில்

'ஒரே கட்டிலில் இருவர் படுத்திருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் சேர்ந்து மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.

இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார். மற்றவர் விட்டுவிடப்படுவார்.'

(காண் லூக்கா 17:26-37)

நாளைய நற்செய்தி வாசகத்தில் உலகத்தின் இறுதிநாட்கள் பற்றியும் மானிட மகனின் இரண்டாம் வருகை பற்றியும் இயேசு சொல்வதை லூக்கா பதிவு செய்திருக்கின்றார்.

இருவர் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுகிறார். மற்றவர் விட்டுவிடப்படுகிறார்.

இருவரையும் எடுத்துக்கொள்ளலாமே! அல்லது இருவரையும் விட்டுவிடலாமே!

விட்டுவிடப்பட்ட ஒருவர் என்ன செய்வார்?

இந்தச் சொல்லாடல்களை நாம் உருவகமாக பார்க்கலாம். எப்படி?

ஒருவர் இல்லாத பெரிய படுக்கை...உறவு வெறுமை.

ஒருவர் இல்லாத மாவரைக்கும் வேலை...உழைப்பு வெறுமை.

ஒருவர் இல்லாத வயல்...ஊர் வெறுமை.

ஆக, உறவு, உழைப்பு, ஊர் - என எதுவுமே இல்லாமல் எல்லாம் அழிந்துவிடும்.

'லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ளுங்கள்!' என்கிறார் இயேசு.

சாகப்போற நேரத்துல இன்னொருத்தன் பொண்டாட்டியை நினைக்கணுமா?

இன்றும் நாம் சாக்கடல் பகுதிக்கு செல்லும்போது லோத்தின் மனைவி உப்புச் சிலையாகி நிற்பதைக் காண முடியும்.

இந்தப் பொண்ணு அப்படி என்ன பெரிய தப்ப செஞ்சுட்டா?

திரும்பிப் பார்க்குறது ஒரு குத்தமா?

ஆம்.

எப்போ?

கடவுள் ஒரு புதிய வாழ்க்கையை லோத்தின் குடும்பத்தார்க்கு வாக்களித்து, அவர்கள் பாவத்தின் விளைநிலமாம் சோதோம், கொமோராவை விட்டு அவர்களை வெளியேற்றிக் கொண்டுவரும்போது, 'அந்த ஊருக்கு என்ன ஆச்சு!' அப்படின்னு நின்னு பார்ப்பது தவறுதானே.

டைமுக்கு ஏது ரீவைண்டிங் பட்டன்?

பெரிய ஆடியோ தகடு, சிறிய பிலிம் கேசட், எம்பி3 சிடி, ஐபாட் என மியூசிக் மாறிக்கொண்டே வருகிறதே.இதற்கு என்ன ரீவைண்டிங் பட்டன்.

இந்த உலகம் முடிந்ததா, அடுத்த உலகம்.

இதுதான் கடவுளின் காலச்சக்கரம்.

சொல்வதற்கு எளிதாக இருக்கிறதுதான்.

ஆனால், நடக்கும்போதுதான் தெரியும் இதன் வலியும், வெறுமையும்!

2 comments:

  1. இந்த வாரத் தொடக்கத்திலிருந்து வரும் அனைத்து நற்செய்தி வாசகங்களுமே 'இறைவருகைக்' காலத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.இருவர் சேர்ந்து இருக்கும் ஒரு கூட்டணியில் ஒருவரை விட்டு மற்றொருவர் பிரியும்போது அதன் வலியும்,வெறுமையும் அனுபவித்தவர்களுக்கே புரியம்.இறைவன் நமக்கென்று ஒரு புதிய உலகத்தைக் காட்டும் போது அதை உரிமையாக்கிக் கொள்வதை விடுத்து நம் பழமையையே பாராட்டிக் கொண்டிருப்பது தவறுதானே! நாமும் கூட இறைவன் பராமரிப்பில் ஒரு புதிய வாழ்க்கைக்கு உந்தப்படும்போது அதைப் பற்றி யோசிக்காமல் கடந்து வந்த பாதையிலேயே குளிர் காய நினைப்பது நம் மடமையன்றி வேறில்லை. கடவுளின் காலச்சக்கரம் சுழன்று அடுத்த உலகம் என்று வரும்போது அதன் வலி,வெறுமை எதுவாயினும் அதை மேற்கொள்ள வேண்டிய பலத்தை நம் இறைவன் அருள்வார் என்று நம்புவோம்.சொல்ல வந்த விஷயத்தை பயமுறுத்தாமல் தந்த பதிவிற்காக தந்தைக்கு நன்றிகள்! பாராட்டுக்கள்!!!

    ReplyDelete
  2. Dear Guru ,Greetings to you.Thank you very much for your valuable reflection on tomorrows Gospel.Your points are very very valid.Let God gives us strength to bear the present sufferings through His blessings to become like God's people.

    ReplyDelete