பின்பற்றியவர்களாயிற்றே!
ஓர் இளவல் தன் வழியே முகவாட்டத்துடன் சென்றவுடன், இயேசு அவரருகே நின்ற சீடர்களைப் பார்க்கின்றார்.
உடனே பேதுரு இயேசுவிடம், 'நாங்கள் உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே!' என்கிறார். 'பின்பற்றாமல் சென்ற இளவலை விட நாங்கள் மேலானவர்கள்!' என்று மறைமுகமாகச் சொல்கின்றாரா? அல்லது 'உம்மைப் பின்பற்றிய எங்களுக்கு என்ன கிடைக்கும்?' என்று கேட்கிறாரா?
பேதுருவின் வார்த்தைகள் தன்னாய்வு அல்லது திறனாய்வு வார்த்தைகளாகவும் அமைந்துள்ளன.
தன்னைப் பின்பற்றுகிறவர்கள் பெறுகின்ற பலன்களையும் எதிர்கொள்கின்ற இன்னல்களையும் ஒன்றாகச் சொல்லி முடிக்கின்றார் இயேசு.
கடவுளைப் பின்பற்றுவதில் உள்ள இன்பமும் துன்பமும் இதுவே.
எல்லாம் கைநிறையக் கிடைக்கிறதே என்று புன்னகைக்கும் நேரம், இன்னொரு பக்கம் இன்னல் நம்மைத் தழுவிக் கொள்ளும்.
இந்த உறுதியற்ற நிலையைக் கொண்டாடுவதே சீடத்துவம்.
'முதலானவை அனைத்தும் இறுதியாகும், இறுதியானவை அனைத்தும் முதலாகும்' என்று இயேசு மீண்டும் உறுதியற்ற நிலையை அவர்களுக்கு உணர்த்துகின்றார்.
ஒன்றைத் துறத்தலின் வழியாகத்தான் இன்னொன்றைப் பெற முடியும், இயேசுவின் சீடர்களாக வாழ ஆசைப்படுபவர்களுக்கு என்கிறது இன்றைய நற்செய்தி. கைக்கு வந்த நிமிடமே நம்கைகளை விட்டு நழுவும் தருணங்களும் உண்டு. கடவுளைப் பின்பற்றுவதில் உள்ள வலியும்…சுகமும்,இன்பமும்…. துன்பமும் மாறிவரும் சக்கரம்போல. சீடனாயிருப்பதன் விளைவு உறுதியற்ற நிலையே ஆயினும், இதையும் நம்மால் கொண்டாட முடியும் என்கிறார் மாற்கு நற்செய்தியாளர். ஆகவே “ வரிசையின் இறுதியில் நில்லுங்கள்; நீங்கள் முதலாம் நிலைக்கு அழைக்கப்படுவீர்கள்.” உறுதியற்ற நிலைதான்; ஆனால் மிழ்ச்சியைத் தழுவுவது.
ReplyDeleteஆகவே உறுதியற்ற….வலிதரும் சீடத்துவம்.ஆனால் அதுவே நம் வலிக்கு ஔடதம்.
தவக்காலத்தின் நுழைவாயிலில் இருக்கும் நாம் கொஞ்சம் வலியைத் தாங்கவும் நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமெனும் ஒரு செய்திக்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ஆமென்!
ReplyDelete