Tuesday, March 22, 2022

மன்னிப்பு

நாளின் (22 மார்ச் 2022) நற்சொல்

மன்னிப்பு

மத்தேயு நற்செய்தியாளரின் குழும உரைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இன்றைய நற்செய்தி வாசகம் (மத் 18:21-35) மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது: (அ) எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? என்னும் பேதுருவின் கேள்வி, (ஆ) இயேசு முன்மொழியும் 'மன்னிக்க மறுத்த பணியாள்' எடுத்துக்காட்டு. (இ) இறைவேண்டலில் உள்ள இறுதி வாக்கியம்.

மன்னிப்பு என்பது இரக்கத்தின் வழியாகவே சாத்தியம்.

எப்படி?

(அ) இரக்கம் என்பது உணர்வு என்ற நிலையிலிருந்து செயல் என்ற நிலைக்கு மாற வேண்டும். ஏனெனில், 'செயல்' என்று வரும்போது நான் தேர்ந்து தெளிந்து முடிவெடுக்கிறேன்.

(ஆ) நீதி - அதாவது, அவர் இதைச் செய்ததால் நான் இதை அவருக்குக் செய்வேன் - என்ற நிலை விடுத்து, அவர் எனக்கு இத்தீங்கைச் செய்தாலும் நன்மை செய்வேன் - என்ற நிலைக்கு உயர்வது.

(இ) நான் இவருக்கு இதைச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும் என்பதை விடுத்து, இவருக்கு இதைச் செய்யாவிட்டால் இவருக்கு என்ன ஆகும் என்று பிறர்மையச் சிந்தனை கொண்டிருப்பது.

இஸ்ரயேல் மக்கள்மீது ஆண்டவர் பரிவு காட்டுமாறு முதல் வாசகத்தில் இறைஞ்சுகிறார் தானியேல்.


2 comments:

  1. “மன்னிப்பு”….. காலத்திற்கேற்ற தலைப்பு. இந்த மன்னிப்பு வாயலவில் அல்ல….உள்ளத்திலிருந்து வரும்பொழுது மட்டுமே அர்த்தம் பெறுகிறது. உள்ளம் பீறிட இந்த மன்னிப்பை உணர்ந்து சொல்பவர் அடுத்தமுறை அதே தீங்கை செய்ய மாட்டார். இரக்கம்…பரிவு …இதெல்லாம் மண்டிக்கிடக்கும் இதயம் தெய்வம் உறையும் வீடு. இந்த மன்னிப்பை உணர்ந்து கொடுப்போம்…. எத்தனை எத்தனை முறை வேண்டினாலும் கொடுப்போம்.ஆனால் நமக்கு அடுத்தடுத்து மன்னிப்புக் கேட்கும் தேவை ஏற்படாமல் பார்த்துக்க்கொள்வோம். “மன்னிக்கத் தெரிந்த இதயம்; அது இறைவன் வாழும் இல்லம்!” உணர்ந்து செய்யும் ஒரு செயல் நம்மை இறைவன் நிலைக்கே கொண்டு செல்லும் என்பதற்குத் தேவையான ஒரு உண்மையைச் சொல்லும் பதிவு! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. மன்னிக்கவும்….வாயளவில்…முதல்வரி

    ReplyDelete