நான் யாருக்காக?
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும் தன் திருத்தூது ஊக்கவுரையில், இளைஞர்களின் தான்மையைப் பற்றிப் பேசுகின்ற இடத்தில், 'நான் யார்? என்ற கேள்வியை நாம் அடிக்கடி கேட்கிறோம். இந்தக் கேள்வியின் வழியாக நம் தான்மை மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகிறோம். இதுவே நம் தன்மதிப்பையும் வரையறுக்கிறது என நினைக்கின்றோம். ஆனால், நான் யாருக்காக? என்ற கேள்வியை யாரும் கேட்க முன்வருவதில்லை. இந்தக் கேள்வியில்தான் நம் தன்மதிப்பு அடங்கியுள்ளது.'
இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நான் யாருக்காக' என்று தன் பணியின் இலக்கு மக்கள் யார் என்பதைத் தன் சமகாலத்தவருக்கு வெளிப்படுத்துகின்றார் இயேசு.
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் தங்கள் உடனிருப்பை மற்றவர்களுக்குக் காட்டும்போது அவர்கள் வளம்பெறுவார்கள் என இறைவாக்கினர் எசாயா முன்மொழிகின்றார்.
'நான் யாருக்காக?' என்ற கேள்வியை நாம் இன்று கேட்க முன்வருவோம்.
“நான் யாருக்காக?” எனும் கேள்விக்குப் பதில் தேடுமுன் “நான் யார்?…. என் தகுதி என்ன?” எனும் கேள்விகளுக்குப் பதில் தேடுதல் அவசியமே என நினைக்கிறேன். “நோயற்றவருக்கு அல்ல; நோயுற்றவருக்காகவே வந்தேன்” என்கிறார் இயேசு. இந்த வார்த்தைகளை நம்மில் ஒருவர் சொல்லவேண்டுமெனில் கண்டிப்பாக அவர் ஒரு மருத்துவராயிருப்பது அவசியம். நோயாளியை மட்டுமல்ல….நோயின் தன்மையையும் அவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஒரு மருத்துவரை நான் பார்க்குமுன் நான் நோயாளி; என் நோய் தீர வேண்டுமெனில் நான் ஒரு மருத்துவரைக் காண வேண்டுமென்பதை உணர வேண்டும்.மருத்துவரும் சரி…நோயாளியும் சரி, தன் நிலை அறிந்திருந்தால் மட்டுமே அவரவர் வேலையை உணர்ந்து செயல்பட முடியுமென உணர்த்தப்படுகிறோம்.
ReplyDeleteஅப்படி நம் தகுதியும், நான் யாருக்காக? என்ற கேள்விக்குப் பதிலும் காண முடிந்த ஒருவரால் மட்டுமே “பசித்தோருக்காகத் தம்மை கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்யவும், சொந்ந ஆதாயத்தை நாடாமல்,வெற்றுப்பேச்சுக்களைப் பேசாமல் ஆண்டவருக்கு ஊழியம் செய்யவும் முடியும்; அதற்கு கைமாறாக ஆண்டவரும் அவரை உயர்விடங்களில் வலம் வரச்செய்வார்” என்கிறது இன்றைய முதல் வாசகம்.”நான் இவர்களுக்காக” என்ற மனநிலைக்கு வரும் ஒருவரால் மட்டுமே தன் உடனிருப்பை அவர்களுக்காக முற்றிலுமாகத் தரமுடியும், என்கின்றன இன்றைய வாசகங்கள். நான் யாருக்காக? விடை தேடுவோம்.நம் மனது சொல்லும் விடையை வேதமாக்குவோம்.கிட்ட தட்ட ஒருவனை ஒரு ‘ஞானி’ ரேஞ்சுக்கு உயர வழிசொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ஆமென்!
ReplyDelete