Thursday, March 24, 2022

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு

இன்றைய (25 மார்ச் 2022) திருநாள்

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு மூன்று வாழ்க்கைப் பாடங்களை நமக்குத் தருகின்றது.

(அ) ஆண்டவரின் உடனிருப்பு

ஓர் எதிரியை அழிக்கு இன்னொரு எதிரியைத் தழுவிக் கொள்ள நினைத்த ஆகாசு தன்னிடம் அல்லது தன்னோடு கடவுள் இருக்கிறார் என்பதை மறந்து போகின்றார். மனுக்குலத்தோடு கடவுள் என்றும் நிற்கிறார் என்பதை நினைவுபடுத்துகிறது இத்திருநாள்.

(ஆ) உடலின் மேன்மை

இயேசுவைத் தனிப்பெரும் தலைமைக்குரு என முன்மொழியும் எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமடலின் ஆசிரியர், இயேசு மனித உடல் எடுக்கும் நிகழ்வை ஒரு முக்கியமான கருதுகோளாகப் பார்க்கின்றார். 'நீர் எனக்கு ஓர் உடலை அமைத்துத் தந்தீர்' எனத் தன் தந்தையைப் பார்த்துச் சொல்கின்ற இயேசு, அந்த உடலைச் சரணாகதி ஆக்குகின்றார்.

(இ) பார்வையை அகலமாக்குதல்

இயேசுவின் பிறப்பு முன்னறிவிக்கப்பட்டவுடன் மரியா அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார். ஆனால், 'கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்று வானதூதர் சொன்ன நொடியில் அனைத்தையும் கடவுளின் கண்கொண்டு பார்க்கின்றார் மரியா.


1 comment:

  1. மூன்று முத்தான விஷயங்களை உள்ளடக்கிய பதிவு. இறைவனின் உடனிருப்பை உள்ளடக்கிக்கொண்டிருப்பதாலேயே இந்த மனுக்குலம் சுழன்று கொண்டிருக்கிறதென்றும்….தன்னுடலைத் தந்தைக்கு சரணாகதியாக்கிய மைந்தன் போல் நாமும் நம் உடலை இறைவன் வாழும் ஆலயமாகக் கருதவேண்டுமென்றும், நம்முடன் உறையும் இறைவனால் நம்மில் எதையும் சாத்தியமாக்க முடியும் என்ற புரிதலை நம்மில் ஏற்றுக்கொள்ளும் “ மரியாக்களாக” நாம் மாறவேண்டுமென்றும் நமக்கு அழைப்பு விடுக்கும் ஒரு தினம்….”மங்கள வார்த்தை தினம்!” தந்தைக்கும்…அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete