சின்னஞ்சிறியோரின் கடவுள்
இன்றைய நற்செய்தி வாசகத்தில், மத்தேயு நற்செய்தியாளர் எழுதியபடி இறுதிநாள்கள் நிகழ்வுகளை வாசிக்கின்றோம்.
பசித்திருக்கும், தாகம்கொண்டுள்ள, அந்நியராய் நிற்கும், ஆடை இல்லாத, நோயுற்றிருக்கும், சிறையில் இருக்கும் சின்னஞ்சிறியவர்களுடன் தன்னை இணைத்துக் கொள்கின்றார் இயேசு.
இவ்வாறாக, கடவுள் நம் வலுவின்மையில் பங்கேற்கின்றார். வலுவின்மையில் இருப்பவர்களுடன் நம் உடனிருப்பைக் காட்டுமாறு நம்மைத் தூண்டுகின்றார்.
முதல் வாசகத்தில், தூயோராய் இருக்குமாறு இஸ்ரயேல் மக்களை அழைக்கின்றார் ஆண்டவராகிய கடவுள்.
தூய்மை என்பது வலுவற்றவர்களைத் தாங்கி நிற்பதே.
“ தூய்மை என்பது வலுவற்றவர்களைத் தாங்கி நிற்பதே!” வார்த்தைகளால் மட்டுமல்ல…அதைத் தன் செயல்களாலும் வாழ்ந்துகாட்டிச் சென்றிருக்கிறார் இயேசு.வலுவற்றவர்களைத் தாங்கி நிற்பதே தூய்மை எனில், ‘ஏழைகளுக்குத் தானம் செய்கிறேன்’ எனும் பெயரில் போஸ்டர் ஒட்டி, பேனர் கட்டிப் பொதுமக்களிடம் சுரண்டிய காசை அள்ளி இறைக்கிறார்களே! அவர்களின் செயல்கள் காட்டுவது தூய்மையையா? இல்லையே! புறத்தூய்மையோடு அகத்தூய்மையும் சேர்ந்திருப்பதே சின்னஞ்சிறியோரின் கடவுள் எதிர்பார்க்கும் தூய்மை. ஒருவருக்கு வயது 60ஐக்கடந்திடினும் அவரின் மனத்தின் எளிமை அவரைச் சின்னஞ்சிறியோராக்கும்; அவர் மனத்தைத் தூய்மையாக்கும்; வலுவின்மையில் இருப்போருக்குத் தன் உடனிருப்பையும் காட்டும். தூய்மை…எளிமை…வலுவின்மை…இவை அனைத்துக்கும் நெருக்கமானவரே “ சின்னஞ்சிறியோரின் கடவுள்” என்ற உண்மையை உரக்கச் சொல்லும் ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!
ReplyDelete