Tuesday, March 29, 2022

என் விருப்பத்தை நாடாமல்

நாளின் (30 மார்ச் 2022) நற்சொல்

என் விருப்பத்தை நாடாமல்

எருசலேமின் ஆட்டு வாயிலுக்கு அருகே இருந்த பெத்சதா குளக்கரையில் உடல்நலமற்ற ஒருவருக்கு நலம் தந்த இயேசுவின் செயல் ஓய்வுநாளில் நடந்ததால் யூதர்கள் அவருக்கு எதிராக எழுகிறார்கள். அவர்களை எதிர்கொள்கின்ற இயேசு, ஓய்வுநாளை மீறியதோடல்லாமல் கடவுளைத் தன் தந்தை என அழைத்து அவர்களுடைய எதிர்ப்பை வலுப்படுத்துகின்றார்.

முதல் வாசகத்தில் (எசா 49:8-15) ஆண்டவராகிய கடவுள் தன்னை விடுதலை தருகின்றவராக முன்வைக்கின்றார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் அடிமைத்தனத்தின்போது கடவுள் தங்களை மறந்துவிட்டதாக எண்ணினர். ஆனால், 'பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும் நான் உன்னை மறக்க மாட்டேன்' என்று அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறுகின்றார்.

'என் விருப்பத்தை நாடாமல் என்னை அனுப்பியவரின் விருப்பத்தையே நாடுகிறேன்' என்னும் இயேசுவின் சொற்களிலிருந்து அவருடைய உள்ளத்தின் உறுதியை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. 

இன்று நாம் இறைவிருப்பத்தைத் தெளிந்து தெரிந்து அதன்படி நடக்கிறோமா?

இறைவிருப்பத்தின்படி நடக்கிறோம் என்றால் நாம் கடவுளுக்கு உகந்தவற்றைச் செய்கிறோமா?


1 comment:

  1. தன் விருப்பம் நாடாமல் அவரை அனுப்பியவரின் விருப்பத்தையே முன் வைக்கும் இயேசு… ஆனாலும் அடிமைத்தனத்திலிருந்த தன் மக்களையோ….அவர்களின் வேதனையையோ மறக்கவில்லை.” பால் குடிக்கும் தன் மகவைத் தாய் மறந்தாலும்,நான் உன்னை மறக்க மாட்டேன்” என்று அவர்களைப்பார்த்துக் கூறும் இயேசு, நாம் துன்பத்தில் துடிதுடிக்கும் நேரங்களில் நம் காதுகளுக்குள்ளும் இவ்வார்த்தைகளைக் கிசுகிசுக்கிறார்.ஆனால் அவ்வார்த்தைகள் நமக்குக் கேட்கும் அளவுக்கு அவருக்கு செவிமடுக்கிறோமா? இறைவிருப்பம் தெரிந்து…தெளிந்து அவருக்கு உகந்தவற்றையே செய்வோம் என்ற உந்துதல் தரும் வார்த்தைகளுக்காக தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete