Wednesday, June 30, 2021

எழுந்து நட

இன்றைய (1 ஜூலை 2021) நற்செய்தி (மத் 9:1-8)

எழுந்து நட

இயேசு மீண்டும் மறுகரைக்கு வருகின்றார். இப்போது அவர் தன் சொந்த ஊருக்கு வருகின்றார். வருகின்ற வழியில் முடக்குவாதமுற்ற மனிதர் ஒருவரைக் கட்டிலில் கொண்டுவருகின்றனர். 'உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்று சொல்லி, அவருக்கு நலம் தருகின்றார் இயேசு. ஒருவரின் பாவமே அவருடைய நோய்க்குக் காரணம் என்பது அன்றைய நம்பிக்கை. 'பாவங்களை மன்னிக்க இவர் யார்?' என்ற கேள்வி அவர்களிடம் எழுகின்றது. தன்னை மானிட மகன் என இயேசு முன்வைக்கின்றார். மக்கள் கூட்டமோ, 'மனிதருக்கு அதிகாரம் தந்த கடவுளைப் போற்றிப் புகழ்கின்றனர்.'

இயேசுவை ஒரு மனிதராக அவர்கள் கொண்டாடுகிறார்கள். இயேசு தன் சொந்த ஊரில் மனிதராக மட்டுமே இருக்க விரும்பியிருப்பார்.

கட்டிலில் கிடத்தப்பட்டு வந்தவர் கட்டிலைத் தூக்கிக்கொண்டு நடக்கிறார். கட்டிலுக்கு அவர் அடிமை இல்லை. இயேசுவைச் சந்திக்கும் அவருடைய வாழ்வு புரட்டிப் போடப்படுகின்றது.

நம் வாழ்வில் நாம் இயேசுவை இறைவார்த்தையிலும், நற்கருணையிலும் சந்திக்கின்றோம். நாம் இன்னும் கட்டிலேயே படுத்திருக்கின்றோமா? அல்லது எழுந்து நடக்கின்றோமா?


1 comment:

  1. கட்டிலில் கிடத்தப்பட்டு வந்தவர் கட்டிலைத் தூக்கிக் கொண்டு நடக்கிறார்.கட்டிலுக்கு அவர் அடிமை இல்லை.இயேசுவை சந்திக்கும் அவருடைய வாழ்வு புரட்டிப்போடப்படுகிறது.எப்படி? “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” ..எனும் இறைமகனின் வார்த்தைகளால்!

    வாழ்க்கையைப் பின்னோக்கித் திரும்பிப் பார்த்தால் பாவம் எனும் கட்டிலில் படுத்திருக்கிறோமா? இல்லை இறைமகனின் வார்த்தைகள்….நம்மில் அவரின் பிரசன்னம்… நம்மை எழுந்து நடக்க உதவியுள்ளதா? யோசிப்போம்.

    மனத்தின் ஆழத்தைத் தோண்டியெடுத்து, சில உண்மைகளை உணர உதவிய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete