Friday, June 25, 2021

இத்தகைய நம்பிக்கையை

இன்றைய (26 ஜூன் 2021) நற்செய்தி (மத் 8:5-17)

இத்தகைய நம்பிக்கையை

தன் வார்த்தையின் ஆற்றலை அறிந்திருந்த நூற்றுவர் தலைவர், இயேசுவின் வார்த்தையின் ஆற்றலை அறிந்தவராக இருக்கின்றார். நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை அறிக்கை நமக்கு வியப்பாக இருக்கிறது. இயேசுவும் அதை மிகவும் பாராட்டுகின்றார். இஸ்ரயேலில் அத்தகைய நம்பிக்கையைத் தான் கண்டதில்லை என்கிறார்.

தெருக்களில் போதித்துக்கொண்டிருக்கும் ஒரு போதகர் தன் வீட்டில் உள்ள பணியாளனைக் குணமாக்க இயலும் என்று எப்படி அத்தலைவனால் அறிந்துகொள்ள முடிந்தது? அறிந்துகொண்டாலும் அவருக்குக் கீழ் தன்னையே நிறுத்திக்கொள்ளும் தாழ்ச்சி எங்கிருந்து வந்தது?

தன் பணியாளன்மேல் உள்ள அக்கறை, இயேசுவில் அவர் கண்ட இறைமகன், தன் தகுதியற்ற நிலை அறிதல் என எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்கிறார் இவர்.

இவருடைய வார்த்தைகளே நம் அன்றாட வார்த்தைகளாக திருப்பலிக் கொண்டாட்டத்தில் இடம் பெறுகின்றன. இன்று இதே வார்த்தைகளைச் சொல்லும் நாம் அவரின் அதே நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ள முன்வருவோம்.


2 comments:

  1. https://angelareadsme.tumblr.com/post/103314187236/i-want-to-tell-you-a-story-about-dreams-said

    ReplyDelete
  2. சிறியவைகளுக்கு மதிப்பு அதிகம் உண்டென்று தந்தை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன்.அப்படித்தான் இன்றைய பதிவில் வரும் வார்த்தைகளும். “ நீர் என் இல்லம் வர நான் தகுதியற்றவன்.ஒரு வார்த்தை சொல்லும்; என் பணியாளன் நலம் பெறுவான்.” இவ்வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து உச்சரித்தால் உச்சரிப்பவருடைய அத்தனை ஆணவமும் அறவே ஒழிந்து போகும்.

    தெருக்களில் போதித்துக்கொண்டிருக்கும் ஒரு போதகர் தன் வீட்டில் உள்ள பணியாளனைக்குணமாக்க இயலும் என்று எப்படி அந்த நூற்றுவர் தலைவனால் அறிந்து கொள்ள முடிந்தது? அறிந்து கொண்டாலும் அவருக்குக் கீழ் தன்னையே நிறுத்திக்கொள்ளும் தாழ்ச்சி எங்கிருந்து வந்தது? என் பார்வையில் இந்த நூற்றுவர் தலைவர் நம்பிக்கையிலும், தாழ்ச்சியிலும் இயேசுவைவிட உயர்ந்து நிற்கிறார். காரணம் இயேசுவையே வியக்க வைத்தவர் இவர். இவரின் தாழ்ச்சியும்,நம்பிக்கையும் நமதாகட்டும்!

    Simple…ஆனாலும் powerful ஆன ஒரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றியும்! வாழ்த்தும்!!!

    ReplyDelete