Monday, March 1, 2021

உங்கள் ஆசிரியர்

இன்றைய (2 மார்ச் 2021) நற்செய்தி (மத் 23:1-12)

உங்கள் ஆசிரியர்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்' என இயேசுவும், இன்றைய முதல் வாசகத்தில், 'நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்' என ஆண்டவராகிய கடவுளும் மொழிகின்றனர்.

இதற்கு முன்னதாக, 'அவர்கள் சொல்வதைச் செய்யுங்கள். ஆனால், அவர்கள் செய்வது போலச் செய்யாதீர்கள்' என்று மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைக் குறித்து எச்சரிக்கின்றார் இயேசு.

கற்றுக்கொடுத்தல் ஒரு கலை என்றால், கற்றுக்கொள்வதும் ஒரு கலையே.

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் தங்கள் சொற்களால் மட்டுமே கற்றுக்கொடுக்கின்றனர். தங்களுடைய தன்னலம், தன்முதன்மை, மற்றும் தன்மைய மதிப்பு போன்ற காரணிகளால் அவர்களால் செயல்பட முடியவில்லை. ஆனால், கிறிஸ்து தன் சொல்லாலும் செயலாலும் கற்றுக்கொடுக்கின்றார்.

முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரின் அறிவுரைக்குச் செவிசாய்க்காமல் இருந்ததால் அவர்களால் கற்றுக்கொள்ள இயலவில்லை.

நன்மை செய்தல் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.


கற்றுக்கொண்டதை நம் செயல்களால் கற்றுக்கொடுக்க வேண்டும்.

3 comments:

  1. “ கற்றுக்கொடுத்தல் ஒரு கலை என்றால், கற்றுக்கொள்வதும் கலையே”..... அழகும்,உண்மையும் சேர்ந்த ஒரு சொற்றொடர். நான் கற்றுக்கொள்ள.... கற்றுக்கொண்டதை செயல்படுத்த பல விஷயங்கள் முட்டுக்கட்டைகளாக நிற்பதைப் பலமுறை உணர்ந்துள்ளேன். இவற்றை அகற்ற வழி தெரியாது திகைத்திருக்கிறேன். இஸ்ரேல் மக்கள் போன்று ஆண்டவரின் அறிவுரைக்கு செவி சாய்க்காமல் இருந்துள்ளேனா? தெரியவில்லை, நாமாக வைத்தால் ஒழிய எதற்கும் முற்றுப்புள்ளி என்று ஒன்றில்லை. நன்மை செய்யக்கற்றுக்கொள்ளவும், கற்றுக்கொண்டதை செயல்களால் கற்றுக்கொடுக்கவும் என்னைத் தகுதியாக்க ஊக்கம் தரும் ஒரு பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!,

    ReplyDelete
  2. நன்மை செய்தல் என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.


    கற்றுக்கொண்டதை நம் செயல்களால் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    Excellent extraordinary phrase

    Suppose your IQ is tested rightly, by now,I believe you go beyond, "the great Albert Einstein"

    Nalvazthugal

    ReplyDelete
  3. ஆவே மரியா!

    ReplyDelete