Sunday, March 28, 2021

பெத்தானியா

இன்றைய (29 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 12:1-11)

பெத்தானியா

இயேசுவின் தொடக்கம் நாசரேத்து. அவருடைய இறுதி எருசலேம்.

இந்த இரண்டுக்கும் இடையில் அவர் இளைப்பாறிய இடம் பெத்தானியா. தன் வாழ்வில் அவர் சோர்ந்த பொழுதெல்லாம் அவரைத் தூக்கி நிறுத்தியது அவருடைய நண்பர் வட்டம். இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பெத்தானியாவுக்கு வருகிறார். மார்த்தா உணவு தயாரிக்கிறார். மரியா அவருக்கு நறுமணத் தைலம் பூசுகின்றார். லாசர் அவருடன் அமர்ந்து விருந்துண்கிறார். 

மார்த்தா-மரியா-இலாசர் என்னும் மூன்று பேருக்கு நேர் எதிராக, யூதர்கள்-யூதாசு-தலைமைக் குருக்கள் இருக்கின்றனர். பெத்தானியாவில் இருந்ததால் என்னவோ இயேசுவால் எந்தவொரு எதிர்ப்பையும் எளிதில் எதிர்கொள்ள முடிந்தது.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 42) நாம் காணும் துன்புறும் ஊழியன் பாடலில், ஆண்டவராகிய கடவுள் தன் அன்பார்ந்த மகனாகிய துன்புறும் ஊழியனுக்குத் தன் உடனிருப்பைக் காட்டுகின்றார். இஸ்ரயேல் மக்களையே 'துன்புறும் ஊழியன்' அடையாளப்படுத்தினாலும், கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவை அவரில் காண்கிறோம்.

துன்புறும் நம் அனைவருக்கும் பெத்தானியா போல இருக்கிறார் நம் கடவுள்.

நம் வாழ்வின் பெத்தானியாவாகிய அவரை அனுபவித்தால் துன்பமோ, இன்பமோ சமநிலையில் நாம் இருக்க முடியும்.

2 comments:

  1. இயேசு சோர்ந்த நேரங்களில் அவர் தேடிவந்த இடம் பெத்தானியா என்கிறது இன்றையப்பதிவு.மார்த்தா,மரியா மற்றும் இலாசருக்குத் தன் உடனிருப்பைக் காட்டிய இயேசு ....அதே உடனிருப்பைத் தன் விண்ணகத் தந்தையிடமிருந்து பெறுகிறார்.

    துன்புறும் அனைவருக்கும் ‘ பெத்தானியா’ போல் இருக்கிறார் நம் கடவுள். உண்மைதான்! ஆனால் திடீரென்று சமயங்களில் நமக்கே தெரியாமல் பெத்தானியாவை விட்டு மறைந்து விடுகிறாரே! அவரை நாம் அனுபவித்தால் மட்டுமே துன்பமோ...இன்பமோ சமநிலையில் இருக்க முடியுமென அவருக்குத் தெரியாதா என்ன?

    பெத்தானியாவை விட்டுப் போனவரை நாம் அழைத்தால் மறுபடி வர அவர் தயக்கம் காட்டுவதில்லை என்று சொல்லும் பதிவு. தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. Thanks for the good reflection Yesu

    ReplyDelete