இன்றைய (5 பிப்ரவரி 2021) நற்செய்தி (மத் 21:33-43,45-46)
கொன்று போடுவோம்
விவிலியத்தில், ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பார்த்து, அன்பும் பாசமும் பரிவும் பொழியும் விதமாகச் சொன்ன வாக்கியமாக பின்வரும் வாக்கியத்தை எடுத்துக்கொள்ளலாம்: 'இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையும் ஆனவள்!' (காண். தொநூ 1:23) - ஏறக்குறைய இதே வார்த்தைகளை லாபான் யாக்கோபிடம் கூறுகிறார்: 'நீ என் எலும்பும் சதையுமல்லவா?' (காண். தொநூ 29:14). இதற்கு நேர் எதிராக, வெறுப்பும், கோபமும், பொறாமையும் அள்ளித் தெளிக்கும் வாக்கியமாக பின்வரும் வாக்கியத்தைச் சொல்லலாம்: 'வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்!'
'வாருங்கள், நாம் இவனைக் கொன்று போடுவோம்!'
இந்த வாக்கியம் இன்றைய முதல் மற்றும் இரண்டாம் வாசகங்களின் மையமாக இருக்கிறது.
முதல் வாசகத்தில், யாக்கோபு மிகவும் அன்பு செய்த யோசேப்பு தூரத்தில் வருவதைக் கண்டு, அவருடைய சகோதரர்கள், 'இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்று போடுவோம்!' என்று சொல்கின்றனர்.
நற்செய்தி வாசகத்தில், கொடிய திராட்சைத் தோட்டப் பணியாளர்கள் எடுத்துக்காட்டில், பணியாளர்கள், தலைவரின் மகன் வருவதைக் கண்டு, 'இவன்தான் சொத்துக்கு உரியவன். வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்!' என்று பேசிக்கொள்கின்றனர்.
யோசேப்பும் கொல்லப்படுகின்றார் (உருவகமாக!). தலைவரின் மகனும் கொல்லப்படுகின்றார் (நேரிடையாக!).
தவக்காலச் சூழலில் இவ்விரண்டு நபர்களும் இயேசுவின் முன்னோடிகளாக இருக்கின்றனர்.
மேற்காணும் நபர்கள் கொல்லப்படக் காரணம் என்ன?
(அ) பொறாமை
(ஆ) ஒப்பீடு
(இ) அவரவர்க்கு உரியதை அவரவர்க்குக் கொடுக்க மறுக்கும் மனநிலை
தங்களுக்கு என்ன நேரும் என்பது யோசேப்புக்கும் தலைவரின் மகனுக்கும் தெரியாது. ஆனால், இயேசுவுக்கு ஏற்கெனவே தெரியும். ஏனெனில், இயேசுவை அதை முன்னறிவித்துள்ளார்.
இன்று நாம் பல நேரங்களில் நம்மைவிட வித்தியாசமாக இருப்பவர்களை, நம்மைவிட அதிகம் பெற்றிருப்பவர்களை, நம்மைவிட அதிகம் அன்புசெய்யப்படுபவர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதோடு, அவர்களை அழித்துவிடவும் துணிகின்றோம்.
உருவகமாகவோ, நேரிடையாகவோ இன்று யாரையும் கொல்லாமல் இருப்பது நலம்.
ஒப்பீடு, பொறாமை, கோபம், கொலை என வளர்கின்றன மேற்காணும் கதையாடல்கள்.
ஒப்பீடு செய்து அடுத்தவரைக் கொண்டாடினால் நலம். அழிக்க நினைத்தல் தவிர்த்தல் நலம்.
தங்களுக்கு என்ன நேரும் என்பது யோசேப்புக்கும் தலைவரின் மகனுக்கும் தெரியாது. ஆனால், இயேசுவுக்கு ஏற்கெனவே தெரியும். ஏனெனில், இயேசுவே அதை முன்னறிவித்துள்ளார்.
ReplyDeleteஉருவகமாகவோ, நேரிடையாகவோ இன்று யாரையும் கொல்லாமல் இருப்பது நலம்.
ஒப்பீடு செய்து அடுத்தவரைக் கொண்டாடினால் நலம். அழிக்க நினைத்தல் தவிர்த்தல் நலம்.
Great!🤝👍
Fr.Yesu,
You are really,really very very great in interpreting the Holy Bible.
& hence rightly you are adorned with the throne.
🙏
யாக்கோபு மட்டுமல்ல..நம்மாலும் அன்பு செய்யப்படும் யோசேப்பும், திராட்சைத்தோட்ட உரிமையாளரின் மகனும் கொல்லப்படுவதற்கும் காரணம் பொறாமை,ஒப்பீடு மற்றும் அவரவருக்குச் சேரவேண்டியதைக் கொடுக்க மறுக்கும் மனநிலை......வெளிப்படையாகவே தெரிகிறது தந்தையின் எழுத்துக்களில்.
ReplyDeleteஇன்று பல நேரங்களில் நம்மைவிட வித்தியாசமாக இருப்பவர்களை,....நம்மைவிட அதிகம் பெற்றிருப்பவர்களை......நம்மைவிட அதிகம் அன்பு செய்யப்படுபவர்களை ஏற்க மறுப்பதோடு,அவர்களை அழித்துவிடவும் துணிகிறோம். தினம் தினம் தொலைக்காட்சி,செய்தித்தாள் மற்றும் நம்மை அடுத்திருப்பவர் வழியாக நம் செவிகளை வந்தடையும் விஷயம்.
“ஒப்பீடு செய்து அடுத்தவரைக் கொண்டாடினால் நலம். அழிக்க நினைத்தல் தவிர்த்தல் நலம்”. தவக்காலத்தில் நம்மை வந்தடையும் முத்தான வார்த்தைகள். வாழ்வாக்குவோமே! தந்தைக்கு நன்றிகள்!!!
ஆமென,!
ReplyDelete