இன்றைய (4 மார்ச் 2021) நற்செய்தி (லூக் 16:19-31)
யார்தான் புரிந்து கொள்வர்?
'இதயேமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது. அதனை நலமாக்க முடியாது. அதனை யார்தான் புரிந்துகொள்வர்?' என்று இறைவாக்கினர் எரேமியா வழியாகச் சொல்கின்றார் ஆண்டவராகிய கடவுள்.
மனிதர்களை நம்புவதா? அல்லது கடவுளை நம்புவதா? என்று குழப்பத்தில் வாழ்ந்த யூதா நாட்டு மக்களுக்கு, விடைகூறும் ஆண்டவர், மனித இதயத்தை யார்தான் புரிந்துகொள்வது என்று அங்கலாய்க்கிறார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில், செல்வரும் இலாசரும் உவமை வழியாக இயேசு, இறுதிக்காலத்தில் நிறைவேறும் தலைகீழ் மாற்றத்தை முன்னுரைக்கின்றார்.
'அப்படி அல்ல, தந்தை ஆபிரகாமே!' என ஆபிரகாமைக் கூவி அழைத்து, தனக்கு உதவி செய்யுமாறு இலாசரை அனுப்பச் சொல்கின்றார் செல்வர்.
ஆனால், இருவருக்கும் இடையே பெரிய பிளவு ஒன்று உள்ளதை எடுத்துரைக்கின்றார் ஆபிரகாம்.
இந்தப் பிளவே நம் இதயத்தை நம்மால் அறிந்துகொள்ள இயலாமல் போவதற்கான காரணம்.
ஆண்டவரில் நம்பிக்கை வைத்தல் நலம்.
செல்வரோ தன் நம்பிக்கையைத் தன் செல்வத்தில் வைத்தார். இலாசரோ ஆண்டவர்மேல் வைத்தார்.
"இலாசரோ தன் நம்பிக்கையை ஆண்டவர்மேல் வைத்தார். "
ReplyDeleteநன்றி 🙏
“ அப்படி அல்ல தந்தை அபிரகாமே!” என செல்வர் கூவி அழைத்தது அவருக்கு நல்லதைப்பெற்றுத்தரவில்லை. அவர்கள் இருவரையும் சேரவிடாமல் தடுக்கும் பிளவே நம் இதயத்தை நம்மாலும் அறிந்துகொள்ள இயலாமல் போவதற்குக் காரணம் என்கிறார் தந்தை. பிளவு ஒருபக்கம் இருப்பினும் “நம் நம்பிக்கையை ஆண்டவரில் வைத்தல் நலம்”
ReplyDeleteஎன்பதே நமக்கு இன்று சொல்லப்படும் செய்தி.
“ இலாசரோ தன் நம்பிக்கையை ஆண்டவர்மேல் வைத்தார்.” அதையே நாமும் செய்வோம் எனும் தந்தையின் எழுச்சிமிகு வார்த்தைகளுக்கு நன்றிகள்!!!
ஆமென்!
ReplyDelete