Monday, March 29, 2021

அன்பின் உச்சம்

இன்றைய (30 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 13:21-33,36-38)

அன்பின் உச்சம்

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் இறுதி இராவுணவு நிகழ்வை வாசிக்கின்றோம். இயேசு தன் சீடர்களுடைய பாதங்களைக் கழுவியபின் அவர்களோடு அமர்ந்து உரையாடும் பகுதியே இன்றைய நற்செய்தி வாசகம். 

தன் சீடர்களில் இருவர் பற்றிப் பேசுகிறார் இயேசு: யூதாசு, பேதுரு. யூதாசு தன்னைக் காட்டிக்கொடுப்பார் என்றும், பேதுரு தன்னை மறுதலிப்பார் என்றும் முன்னுரைக்கின்றார் இயேசு.

இதே நிகழ்வில் ஒரு சீடர் இயேசுவின் மார்புப் பக்கமாகச் சாய்ந்திருக்கிறார். மேலும், இந்த நிகழ்வில் தான் அடையும் மாட்சி பற்றியும் பேசுகின்றார்.

தன் சீடர்கள் தனக்கு எதிராகப் புறப்படும் நிலையை அறிந்திருந்தாலும் அவர்கள்மேல் அன்பு கூர்கின்றார் இNயுசு.

அடுத்தவர்களின் நற்குணங்களால் இயேசு தன் அன்பை வரையறுக்கவில்லை. அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை அன்பு செய்கின்றார். 

இதுவே இன்று நாம் கற்கும் உறவுப் பாடம்.

தன் பாதை எது என அறிந்தவருக்கு, தன் இலக்கு எது என தெரிந்தவருக்கு எல்லாம் ஒன்றுதான். அவர் எச்சலனமும் அடைவதில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய முதல் வாசகம் சொல்வது போல, தன் தந்தையாகிய கடவுளின் கையில் தான் விலைமதிப்பற்றவராக இருப்பதை உணர்ந்திருந்தார் இயேசு.

4 comments:

  1. LOVE is not 'if' or ' because'

    LOVE is ' anyway' and 'even though'

    and ' inspire of'..….Great definition.

    I got,what I needed.
    Thank you.

    ReplyDelete
  2. Inspite of Judas being behaved like that,still he is loved the same way...by our Heavenly father.
    Am I right fr?

    ReplyDelete
  3. அன்பின் உச்சத்தை ...... இலக்கணத்தை இவ்வுலகிற்குப் பறைசாற்றும் வார்த்தைகளைக் கொண்டு ஆரம்பிக்கும் ஒரு பதிவு....அழகானதும் கூட.

    தன் சீடர்கள் தனக்கு எதிராகப் புறப்படும் நிலையை அறிந்திருந்தாலும் அவர்கள் மேல் அன்பு கூறுகிறார் இயேசு.அடுத்தவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களை அன்பு செய்கிறார். தன் பாதை எது என அறிந்தவருக்கு,தன் இலக்கு எது எனத்தெரிந்தவருக்கு எல்லாம் ஒன்றுதான்.அவர் எச்சலனமும் அடைவதில்லை.

    மேலேயுள்ள வரிகள் என்னை சிந்திக்கத் தூண்டுகின்றன. என்னை அடுத்தவர் நேசிப்பதற்கும்...நான் அடுத்தவரை நேசிப்பதற்கும் ஏதேனும் அளவை வைத்திருக்கிறேனா? “ இல்லை” என்பது என் பதிலாயிருப்பின் “ என் தந்தையாகிய கடவுளின் கையில் நானும் விலைமதிப்பற்றவளாயிருப்பேன்.”

    எத்தனை பெரிய விஷயத்திற்கு இத்தனை சிம்பிளாக வழி சொல்லிய தந்தையை இறைவன் தன் கரங்களுக்குள் வைத்துக் காப்பாராக! தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete