Sunday, August 9, 2020

புனித லாரன்ஸ்

இன்றைய (10 ஆகஸ்ட் 2020) திருநாள்

புனித லாரன்ஸ்

கி.பி. 257ஆம் ஆண்டு உரோமைப் பேரரசர் வலேரியன், உரோமையிலிருந்த திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், மற்றும் திருத்தொண்டர்களைக் கைது செய்யுமாறு ஆணை பிறப்பித்தார். அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை புனித சிக்ஸ்துஸ் கொல்லப்படுகின்றார். அவரைக் கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றபோது, வழியில் புனித லாரன்ஸ் அவரிடம், 'தந்தையே, உம் திருத்தொண்டர் உடன் வராமல் நீர் எங்கு செல்கிறீர்?' எனக் கேட்கின்றார். அதற்கு சிக்ஸ்துஸ், 'நீ இன்னும் மூன்று நாள்களில் என்னுடன் வருவாய்!' என்று சொல்லிவிட்டுச் செல்கின்றார்.

மூன்றாம் நாளில் புனித லாரன்சும் மறைக்காக உயிர்துறக்கின்றார்.

திருஅவையின் கருவூலத்திலிருந்த தங்கத்தைத் தனதாக்க வேண்டும் என்று உரோமை ஆளுநர் நினைத்தபோது, தங்கத்தை எல்லாம் ஏழைகளுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு, அவர்களையும் அழைத்துக் கொண்டு பேரரசரிடம் சென்று, 'இவர்களே திருஅவையின் தங்கம்!' என்று சொன்னவர் லாரான்ஸ்.

'இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலை வாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்' என்ற இன்றைய நற்செய்தி வாசகத்தின் வரியின் படி வாழ்கிறார் லாரன்ஸ்.

அவருடைய மனத்திடம், துணிவு, துன்பம் ஏற்கும் பக்குவம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.


1 comment:

  1. ‘ இவ்வுலகில் தம் வாழ்வைப்பொருட்டாகக் கருதாதோர், நிலை வாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்”.. .....தங்கத்தை விட ஏழைகள் இன்னும் உயர்வுக்குரியவர்களெனும் உண்மையை இவ்வலகிற்கு எடுத்துரைத்த புனித லாரன்ஸ் தன் சொத்துக்களான மனத்திடம்,துணிவு,துன்பம் ஏற்கும் பக்குவம் .....இவற்றை நாமும் பெற்றுக்கொள்ள இறைவனிடம் பரிந்து பேசுவாராக! எமக்குத் தெரிந்த...தெரியாத அனைத்துப்புனிதர்களிடமும் ஒளிந்திருந்த நல்ல விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் தந்தைக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete