Thursday, August 6, 2020

அவரவர் செயல்களுக்கேற்ப

இன்றைய (7 ஆகஸ்ட் 2020) நற்செய்தி (மத் 16:24-28)

அவரவர் செயல்களுக்கேற்ப

'மானிடமகன் அவரவருடைய செயல்களுக்கேற்ப கைம்மாறு அளிப்பார்' என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு.

அவர் முன்வைக்கும் செயல்கள் எவை?

(அ) தன்னலம் துறப்பது

(ஆ) தன் சிலுவையைச் சுமப்பது

(இ) தன் வாழ்வை இழக்காமல் காத்துக்கொள்வது

ஆனால், சில நேரங்களில், நம் செயல்களைவிட கடவுளின் இரக்கம் மேலோங்கி நிற்கிறது. எடுத்துக்காட்டாக, காணாமல்போன இளைய மகன் (காண். லூக் 15).

அவன் தன்னலம் துறக்கவில்லை.

தன் சிலுவையைச் சுமக்கவில்லை.

தன் வாழ்வை இழந்தான்.

ஆனால், இறுதியில் அனைத்தையும் பெற்றுக்கொண்டான் தந்தையின் பரிவினால்.

பரிவு மேலிருந்து கீழ் வருகிறது.

செயல்கள் கீழிருந்து மேல் செல்கின்றன.

சிலர் செயல்களால் கைம்மாறு பெறுகிறார்கள்.

சிலர் பரிவினால் கைம்மாறு பெறுகிறார்கள்.

2 comments:

  1. ஊசி மிளகாய் அளவில்,வடிவில் மிகச்சிறிதுதான்.ஆனால் அது தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் காரத்திற்கு இணையில்லை. அது போலவே இன்றைய பதிவும். எத்தனை வார்த்தைகளைக் கொண்டுள்ளது என்பது அவசியமில்லை.என்ன செய்தி சொல்கிறது என்பதுவே நாம் கவனிக்க வேண்டியது. ஒரு விஷயம் கீழிருந்து மேலே போகிறதா இல்லை மேலிருந்து கீழே வருகிறதா என்பதை விட நாம் இறைவனிடமிருந்து கைமாறு பெற நமக்குத்தேவையான பரிவும்,செயல்களும் நம்மிடம் உள்ளதா? கேள்விக்கணையைத் தொடுத்துவிட்டார் தந்தை. அடிமனத்தின் ஆழத்தினின்று பதில் தேடுவோம். இளைய மகன் ஒரு exception.எல்லோருக்கும் அந்தப்பாக்கியம் கிடைக்குமா என்ன? தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete