Tuesday, June 25, 2019

நல்ல கனி

இன்றைய (26 ஜூன் 2019) நற்செய்தி (மத் 7:15-20)

நல்ல கனி

இன்றைய முதல் வாசகத்திலிருந்து (காண். தொநூ 15:1-12, 17-18) நம் சிந்தனையைத் தொடங்குவோம்.

ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமிடம், 'உனக்கொரு மகன் பிறப்பான். அவன் உன்னைப் போலவே இருப்பான்' என்று வாக்களிக்கின்றார். ஆனால், கொஞ்சம் (இல்லை, நிறையவே!) அவசரப்படுகின்ற ஆபிரகாம், தன் வீட்டு அடிமை மகன் எலியேசரை தன்னுடைய வாரிசாக அல்லது மகனாக நினைக்க ஆரம்பிக்கின்றார். ஆனால், ஆண்டவரோ, இதை மறுக்கின்றார். மேலும், மகன் பிறப்பான் என்ற வாக்குறுதியை உறுதி செய்கின்றார்.

நல்ல கனியான இறைவனின் வாக்குறுதிக்குக் காத்திருக்க மறுக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும்' என்று சொல்லும் இயேசு, அதையே எதிர்மறை வார்த்தைகளிலும் பதிவு செய்கின்றார்.

கனி என்பது மரத்தின் நீட்சி.

அல்லது விதையின் நீட்சி.

விதை எப்படி இருக்கிறதோ, விதையின் வீரியம் எப்படி இருக்கிறதோ அப்படியேதான் அதன் கனியும் இருக்கும். நல்ல கனியாக நாம் வெளியே இருக்க வேண்டுமென்றால், அடிப்படையான மாற்றம் அவசியம்.
விதையை நாம் நச்சாக வைத்துக்கொண்டு கனியை நல்ல கனியாக எதிர்பார்த்தால் அது போலியாக, அல்லது வெளிப்புற ஒப்பனையாகவே இருக்கும்.

இன்று, என் உள்ளிருக்கும் இயல்பும் எனக்கு வெளியிருக்கும் வார்த்தையும் செயலும் இனியதாகக் கனிந்திருக்கிறதா? அல்லது இரண்டிற்கும் முரண் இருக்கிறதா?

மேலும், நல்ல கனி கொடுக்க நான் விரும்பினால் என் இயல்பில் மாற்றம் செய்ய வேண்டும்.


1 comment:

  1. ஒரு செம்மையான வாழ்க்கை வாழ வழி சொல்லும் ஒரு பதிவு. பல நேரங்களில் விண்ணகத்தந்தை தம் கைநிறைய வாக்குறுதிகளை வைத்துக்கொண்டு நமக்காக காத்திருக்கையில்,பொறுமை விட்டுப், பாதை மறந்து பயணம் செய்கிறோம் அபிரகாமைப்போல.பார்வைக்குக் கொஞ்சம்,கரடு முரடாக இருக்கும் பலாப்பழத்தைத் தருவதால்,பலா மரத்தை யாரும் ஒதுக்குவதுமில்லை; செக்கச்சவேலென்ற தோற்றத்தைத்தரும் எட்டிக்காயை சும்ப்பதால் அந்த நச்சு மரத்தை யாரும் நாடுவதுமில்லை. இயற்கையில் அத்தனையுமே அதனதன் இயற்கைக்கேற்ப இயல்பு மாறாமல் இருக்கையில்,இறைவனின் சாயலால் படைக்கப்பட்ட மனிதனிடம் மட்டும், ஏன் இந்த முரண்பாடு! கனி என்பது மரத்தின் நீட்சி எனில்....விதையின் நீட்சி எனில் நம்மிடமுள்ள தீதும்,நன்றும் நம் மனத்தின் நீட்சி தானே! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதலும் நடிப்பு தானே!என் உள்ளிருக்கும் இயல்பும்,வெளியேயிருக்கும் வார்த்தையும், செயலும் இனியதாக கனிந்துள்ளதாவென நம்மையே கேட்போம்.பதில் ‘ஆம்’ எனில் மகிழ்வோம்; இலையெனில் கனிய வைப்போம். எளிமை மிகு தந்தைக்கு என் இனிமை மிகு வாழ்த்துக்கள்,!!!

    ReplyDelete