Thursday, October 29, 2020

உங்களில் ஒருவன்

இன்றைய (30 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 14:1-6)

உங்களில் ஒருவன்

இயேசுவுக்கும் பரிசேயர்களுக்கும் உள்ள தொடர்பு நற்செய்தி நூல்களில் இருநிலைகளில் இருக்கின்றது. ஒரு பக்கம், இயேசு, பரிசேயர்களைச் சாடுகின்றார். இன்னொரு பக்கம், அவர்களோடு உணவருந்துகின்றார். இயேசுவின் இச்செயல் நமக்கு வாழ்வின் இரட்டைத்தன்மையைக் காட்டுவதோடு, எதிரிகளையும் நண்பர்களாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பாடத்தையும் நமக்குத் தருகின்றது.

இயேசுவின் சமகாலத்தில் ஓய்வுநாள்களில் விருந்துகள் நடப்பது அரிது. ஏனெனில், ஓய்வுநாளில் அடுப்பு பற்ற வைத்தல் கூடாது என்பது அன்றிருந்த நெறிமுறை. ஆனால், பரிசேயர்கள் அந்த நெறிமுறையை மீறுகின்றார்கள். தங்களுக்குச் சாதமாக நெறிமுறைகளை வளைத்துக்கொள்ளும் அவர்களின் வெளிவேடத்தைத் தோலுரிக்கும் நோக்குடன், இயேசு, ஓய்வுநாளில் ஓர் அறிகுறியை நிகழ்த்துகின்றார். நீர்க்கோவை நோயுள்ளவரின் கையைக் குணமாக்குகின்றார்.

பரிசேயர்களின் பதிலிறுப்பு மூன்று நிலைகளில் இருக்கிறது:

(அ) இயேசுவைக் கூர்ந்து கவனிக்கின்றனர்

(ஆ) இயேசுவின் கேள்விக்கு விடையளிக்காமல் அமைதி காக்கின்றனர்

(இ) இயேசுவின் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் நிற்கின்றனர்

'உங்களுள் ஒருவர் தம் பிள்ளையோ, மாடோ கிணற்றில் விழுந்தால் ஓய்வு நாள் என்றாலும் அதனை உடனே தூக்கிவிட மாட்டாரா?' என்று கேட்டு, அவர்களோடு மீண்டும் இணக்கமாகின்றார் இயேசு.

அதாவது, 'நான் ஒன்றும் புதிதாய்ச் செய்துவிடவில்லை. நீங்கள் செய்வதைப் போலத்தான் நானும் செய்தேன். பிள்ளையும் மாடும் கையறுநிலையில் இருப்பவர்கள். இவரும் கையறுநிலையில் இருந்தவர். நான் கை கொடுத்தேன்' என்று சொல்லிவிட்டு,

'ரொம்ப யோசிக்காதிங்க! வாங்க சாப்பிடப் போவோம்!' என்கிறார் இயேசு.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். பிலி 1:1-11), பிலிப்பு நகரத் திருஅவைக்கு பவுல் எழுதுகின்ற திருமடலின் வாழ்த்துரை மற்றும் முன்னுரையை வாசிக்கின்றோம். தான் நற்செய்தி இடத்தில் உள்ள நம்பிக்கையாளர்களோடு தன்னையே ஒன்றிணைத்துக்கொண்டு அவர்களுக்கு நன்றிகூறி, அவர்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றார்.

2 comments:

  1. “கையறு நிலையில் இருந்தவர்களுக்குக் கைகொடுத்தேன்.அவ்ளோதான்.இதுல பெருசா என்ன இருக்கு?” என்று தன் பெருந்தன்மையை சிறிதாக்கி, கூட இருந்தவர்களை உணவருந்த அழைக்கும் பண்பு எனக்கும் இருந்தால் எத்துணை நலம்! தொடருகிறார் தந்தை.....ஒத்த மனத்தவர்கள் ஒன்றிணைந்து இறைவனுக்கு நன்றி கூறுவதும் நலமே! நாளின் இறுதியில் நல்லெண்ணங்களென்னும் தாலாட்டோடு உறங்க அனுப்பும் தந்தைக்கு ஒரு ‘Good Night.’

    ReplyDelete