Tuesday, August 2, 2016

புதியதாக

இரண்டு மூன்று நாட்கள் இடைவெளி விட்டதால்

எழுதுவதில் சோம்பல் வந்துவிட்டது!

மூளையும் புதியதாக ஒன்றும் யோசிக்க மறுக்கிறது.

'இந்த உலகில் புதியது என்று எதுவும் இல்லை!' என

சபை உரையாளர் எங்கோ சத்தமிட்டுப் போவதாகக் கேட்கிறது.

3 comments:

  1. I love the poetry that peeps through your FIVE lines.
    You quote of Eccle. and your statement AFTER the quote keeps me spell-bound.
    He, the sage, does not sit under a banyan tree and propound his profound intensification.
    Rather he moves on, has other town and villages, avenues and venues to procliam.
    He is on the run...
    "sathamittup pOvathAkak kEtkirathu"...
    Yesu, I am falling in love with you!

    ReplyDelete
  2. மிகச் சிறிய குப்பிக்குள் அடைக்கப்பட்டதொரு 'டானிக்' இன்றையப் பதிவு. வாழ்வின் நிதர்சனங்களை செயற்கைப் பூச்சு ஏதுமின்றி ஏற்றுக்கொள்பவனே வாழத் தகுதி பெற்றவன்." எழுதுவதில் சோம்பல் வந்து விட்டது; மூளையும் புதிதாக எதையும் யோசிக்க மறுக்கிறது".. இப்படி மனம் சண்டியடிப்பதை உரக்கச் சொல்பவர்களுக்கு மட்டும் தான் ' அசரீரி' களின் குரலும் கேட்கும். இன்றைய ஐந்து வரிகளிலும் கூட கற்றுக்கொள்ள பல விஷயங்கள் உள்ளன தந்தையே! வீடுகளில் நம் தாய்மார்கள் அரைத்த மாவையே அரைத்தாலும் கூட ஒவ்வொரு முறையும் ' இட்லி' யின் சுவையும், தன்மையும் கூடிக்கொண்டே தானே உள்ளது! தன் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறிவிட்டுத் பயணத்தைத் தொடரும் ஒருவனால் முன்னை விட வேகமாக நடக்க இயலும்." புலி பதுங்குவது பாய்வதற்கு" என்று எங்களுக்கும் தெரியாதா என்ன? தொடருங்கள் தங்கள் பயணத்தை! கொடுப்பதை இரு கரம் நீட்டிப் பெறக் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள்! இறைவனின் உடனிருப்பு தங்களுக்குத் துணை வரட்டும்!!!


    ReplyDelete
  3. விவிலியத்தில் நான் படிக்காமல் வைத்திருக்கும் நூல்கள் சில உண்டு. மக்கபேயர், அரசர் ஆகமம், குறிப்பேடு இதெல்லாம் ... நீங்க வேணா இந்தப் புத்தகங்களைக் கொஞ்சம் அலசுங்க சாமி. பன்னை பர்கராவும் குஸ்காவ பிரியாணியாவும் மாத்திக் குடுங்க. எங்களுக்கு கொஞ்சம் ஈஸியா இருக்கும். உங்களுக்கும் எழுத விஷயம் இருக்கும் .

    ReplyDelete