Tuesday, August 16, 2016

அப்பாக்கள்

'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்ற பாடலை நமக்குத் தந்துவிட்டு, இறைவனின் யாழில் தன்னையே இணைத்துக் கொண்டார் நா. முத்துக்குமார்.

தந்தையின் அன்பை மிக அழகாக தன் கவிதைகளிலும், பாடல்களிலும் பதிவு செய்த பாசக்காரர் இவர்.

'அணிலாடும் முன்றில்' என்ற இவரது நூல் 'அப்பாவின் அன்பு' பற்றிய கிளாசிக்.

ஷேக்ஸ்பியர் ஹேம்லட் நாடகத்தில் மகனுக்கு கூறும் அறிவுரை.

ஆபிரகாம் லிங்கன் தன் மகன் பற்றி அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம்.

இந்த வரிசையில் நா. முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

பிள்ளைகளின் ஆளுமை வளர்ச்சியில் அப்பாக்கள் மிக முக்கிய இடம் பிடிப்பவர்கள்.

அம்மாக்களைப் போல அப்பாக்கள் அலட்டிக் கொள்வதில்லை.

உள்ளம் உடைந்தாலும் கண்ணீர் விடுவதில்லை.

கோபம் கொப்பளித்தாலும் கடிந்து கொள்வதில்லை.

சண்டையிட்டு மௌனப் போராட்டம் நடத்துவதில்லை.

ஆனால், அம்மாக்கள் பிடிக்காத இடத்தை அப்பாக்கள் பிள்ளைகளில் பிடித்துவிடுவார்கள்.

3 comments:

  1. Anonymous8/17/2016

    Great Yesu. with love

    ReplyDelete
  2. பிரபல திரைப்பட பாடலாசிரியர் " நா.முத்துக்குமாரின் இறப்பு" அண்மையில் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களிலும் அப்பி விட்ட ஒரு சோகம். ஒன்று மட்டும் விளங்க வில்லை. ஒரு பத்து நாட்கள் பத்தியத்துடன் ' கீழாநெல்லி' எனும் இலைகளின் சாறைப்பருகினாலே மஞ்சள் காமாலை நோய் மறைந்து விடும் என்ற உண்மை ஒரு கிராமத்தானுக்கும் கூடத் தெரிந்திருக்க, பலபேரின் நெருக்கத்துடன் பட்டணத்து வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதனுக்கு எப்படி இது தெரியாமல் போயிற்று? என்ன செய்து கொண்டிருந்தனர் அவரது உறவுகளும்,நண்பர்களும்?.காரணமே இல்லாமல் காலன் கையில் தன்னையே அர்ப்பணித்து விட்டார் இந்த மகா கவிஞர்.கிட்டத்தட்ட ஒருதற்கொலைக்குச் சமமானது.'பிள்ளைகளின் ஆளுமை'வளர்ச்சியில் அப்பாக்களின் பங்கு பற்றி தந்தைஅழகாகவிமரிசித்திருக்கிறார்.உண்மைதான்...வெளிப்படையாகஅள்ளிக்கொடுக்கும் 'அம்மாக்களை'விட மறைமுகமாகக் கிள்ளிக்கொடுக்கும்'அப்பாக்கள்' தான் பிள்ளைகளுக்கு நெருக்கமாகிறார்கள்.நானும் வாசித்தேன்..முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய மடலை.ஒரு ' தீர்க்கத்தரிசி' உயரத்திற்கு நிமிர்ந்து நிற்கிறார்.பொதுவாழ்க்கைக்கென்று தங்களை அர்ப்பணிப்பவர்கள் தங்களின் சொந்த வாழ்க்கையை ஏனோ கோட்டை விடுகின்றனர்.இன்று ஆறே மாதங்களும்,ஆறு வருடங்களும் ஆன அந்தப்பிஞ்சுக்குழந்தைகளுக்கும்,புதுமணம் மாறா அந்த இளம் விதவைக்கும் யார் பொறுப்பேற்பது? காலம் தான் அவர்களின் காயத்தை ஆற்ற வேண்டும். அப்பாவின் அன்பு பற்றிய ' அணிலாடும் முன்றில்' எனும் நூலைப்படிக்க ஆவலாயுள்ளேன்.இது குறித்த தகவல் தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete
  3. Gita - New York

    Dear Fr. YESU:

    "mathu iranka iranka iranka
    mathi mayanka mayanka mayanka
    puthu ulakam nAn pOkintrEn
    pOvOme ellOrum vArunkal.

    kAthal intru gnanAnam nAlai
    kAlam mikavum siriyathu
    kadaisi chottu thErum mattum
    Adum Attam iniyathu" - Kannadasan

    As I look around what is increasingly happening in Tamilnadu, I am developing some form of deep displeasure and nauseating disgust towards these poets. That applies to Mr. Kannadasan of Chettinadu or Mr. Muthukumar of Pallavanadu.

    Most of these architects of charming words surely intoxicate me and take me for a picnic and pleasure ride. But if I marry them in my life as my role models, alas, I am at a loss and I would be widow pretty soon...

    Also, they seem to be off-shoot incarnations of WORDY POLITICS of Tamilnadu which tickles the people with freebies, without any substantive and long-lasting projects.

    Aren't they not sickening advertisements for Tamilnadu's TASMAC shops and toddy-alcohol business?

    What SOCIAL EVILS did these men condemn?
    What corrupt and abusive systems did they correct and reform, with living structures as counterpoints?
    Yet, there is no lack of "kavi arasu", "kavi pErarasu" and what not...

    Soren Kierkegaard wrote so beautifully about these LUSH LEAFY FIG TREES, with no FRUITS:
    "What is a poet? An unhappy man who hides deep anguish in his heart, but whose lips are so formed that when the sigh and cry pass through them, it sounds like lovely music.... And people flock around the poet and say: 'Sing again soon' - that is, 'May new sufferings torment your soul but your lips be fashioned as before, for the cry would only frighten us, but the music, that is blissful.”

    ReplyDelete