கேள்வி: 'உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்' (உரோ 16:6)
இந்த மரியா இயேசுவின் தாயாரா? அல்லது வேறு ஏதாவது மரியாவா?
பதில்: இங்கே குறிப்பிடப்படும் மரியா இயேசுவின் தாயார் அல்லர்.
மரியா என்பது யூத மரபில் வழங்கப்பட்ட பொதுவான பெயர். 'மிரியம்' (மோசேயின் சகோதரி) என்ற பெயரைத் தழுவிய பெயரே மரியா.
இயேசுவின் சமகாலத்தில் நிறைய மரியாக்கள் இருந்ததால்தான், இயேசுவின் தாய் மரியா, மகதலா நாட்டு மரியா, மார்த்தாவின் சகோதரி மரியா என அடைமொழிகளால் அவர்கள் வேறுபடுத்திக்காட்டப்படுகின்றனர்.
பவுலடியார்க்கு இயேசுவின் தாய் மரியாள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் இயேசுவின் தாயைக் கண்டதாக அவரோ, அவருடன் பயணம் செய்த லூக்காவோ பதிவு செய்யவில்லை.
மேலும், இந்த திருமுகம் உரோமையில் இருப்பவர்களுக்கு எழுதப்பட்டது. இயேசுவின் தாய் மரியா உரோமைக்கு பயணம் செய்திருக்கும் வாய்ப்பில்லை.
இந்த திருமுகம் எழுதப்பட்ட ஆண்டு கி.பி. 58-60 முடிய. இவ்வளவு ஆண்டுகள் வரை இயேசுவின் தாய் மரியா வாழ்ந்திருக்கும் வாய்ப்பும் இல்லை. ஏனெனில் இயேசுவின் சமகாலத்தில் மனிதரின் ஆயுள்காலம் 35 முதல் 45 வரைதான் இருந்தது.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது, உரோ 16:6ல் குறிப்பிடப்படும் மரியா இயேசுவின் தாய் மரியா அல்ல என்றும், தொடக்க திருஅவையின் முக்கியமான நபர் அல்லது சீடராக அவர் இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

GITANJALI A BERNARD
ReplyDeleteNew York
Dear Fr. YESU:
Glad to hear about "Mary".
Yet another one, than Mary, Mother of Jesus.
How lovely that the “CHURCH” has MARYS.
Not just one, but so many!
There are times when the Church looks and acts as though it is an exclusive club of privileged men.
Each part, position, and every rung in the hierarchy is filled with men.
It is pretty boring – right?
Paul seems to counter that perception.
Providing a script and rule, contrary to the custom.
Paul is all praise for this "MARY".
He writes, "My greetings to Mary, who has worked hard for you" [Rom 16:4].
Earlier Paul speaks of "our sister Phoebe, who is a deaconess of the church of Cenchreae" [Rom 16:1]
Then he greets Prisca [Rom 16:3] and Julia [Rom 16:15] and Nereus’ sister [Rom 16:15]
He hasn’t forgotten to mention Tryphaena and Tryphosa [Rom 16:12] who “worked hard” in ministry [I suppose he does not mean these ladies are cooking delicious dishes or laundering soiled clothes of the Apostle!]
I just enjoy and relish the scholarly and intellectual Paul’s final and personalist take.
“Greet one another with a holy kiss!” [Rom 16:16]
Holy kiss...mmm!
How do contemporary “apostles” acknowledge and appreciate the HARD WORK of women – so many women in the Church?
இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த ' மரியாக்கள்' பற்றிச் சொல்கிறது இன்றையப்பதிவு.இயேசுவின் தாய் மரியா,மகதலா நாட்டு மரியா,மார்த்தாவின் சகோதரி மரியா என இவர்களுக்குப் பல அடைமொழிகள் இருப்பினும் நமக்கு 'மரியா' என்றவுடன் நம் மனத்தில் மேலோங்கி நிற்பதென்னவோ ' இயேசுவின் தாய் மரியா' தான். " உங்களுக்காகப் பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்து தெரிவியுங்கள்"....... இது எந்த மரியாவைக் குறித்து சொல்லப்பட்டதெனினும் மூவருக்குமே பொருந்துவதாக எடுத்துக் கொள்வதால் யாருக்கு என்ன குறைவு ஏற்படப்போகிறது? " பூவோடு சேர்ந்த நாரும்" மணம் வீசிவிட்டுப் போகட்டுமே! இதில் யார் பூ? யார் நார்? ஆராய்ச்சி தேவையா என்ன? யார் வேண்டுமானாலும் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டுமே! முன் வைத்த காலைப் பின் வைக்காத தந்தைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteSuper Yesu. Praise the Lord
ReplyDelete