Sunday, August 21, 2016

யோனா - 5

மீனின் வயிற்றுக்குள் இருக்கும் 'புறா' யோனா ஒரு பாடல் பாடுகின்றார்.

அந்தப் பாடலைத் தான் யோனா 2ல் வாசிக்கின்றோம்.

இந்தப் பாடலை எடுத்துவிட்டு உரைநடையைப் பகுதியை வாசித்தாலும் வாசித்தலில் தடை ஏதும் இருப்பதில்லை. ஆக, இந்தப் பாடல் ஒரு இடைச்செருகல் என்பது எளிதாக ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய வாதம்.

மீனின் வயிற்றில் இருக்கும் யோனா இறைவனை நோக்கி மன்றாடுகின்றார்.

அவரின் மன்றாட்டில் எந்தவொரு குற்றவுணர்வும் இல்லை.

'நான் கடவுளிடமிருந்து தப்பிவிட்டேன். அவர் என்னைத் தண்டித்துவிட்டார்' என்ற கடிதலும் இல்லை.

இருக்கின்ற எதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்கின்றார்.

'கோவில்' என்ற வார்த்தை இங்கே இரண்டுமுறை பயன்படுத்தப்படுகிறது.

யூதர்கள் பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டு தோரா, கோவில், ஓய்வுநாள் என மூன்று அடையாளங்களும் இல்லாமல் தவித்த காலத்தில் இந்தப் பாடல் எழுதப்பட்டிருக்கலாம்.

ஆகையால்தான் இதன் ஆசிரியர் 'கோவில்,' 'கோவில்' என்று ஏங்குகின்றார்.

'உம்மை நோக்கி நான் எழுப்பிய மன்றாட்டு உமது கோவிலை வந்தடைந்தது' என தன் மன்றாட்டு கேட்கப்பட்டதாக நம்பிக்கையும் தெரிவிக்கிறார் யோனா.

நம் கலக்கத்திலும், ஏக்கத்திலும் இந்தப் பாடல் நாமே எழுதியதுபோல இருப்பதுதான் இந்தப் பாடலின் அழகு!

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. தந்தையின் இன்றையப் பதிவைப் படித்தவுடன் யோனா 2 முழுவதையும் படித்துப்பார்க்க வேண்டுமெனும் உத்வேகம் ஏற்பட்டது.இப்பொழுது மட்டுமின்றி எப்பொழுதுமே,ஏன்இறைவன்யோனாவைநினிவேபட்டணத்துக்குப்போகச்சொன்நிமிடத்திலிருந்துஅவர்எதையுமேஅவர்போக்கில்சகஜமாகஎடுத்துக்கொள்கிறார்.அஅதனாலேயே குற்ற உணர்வு என்ற ஒன்று எந்த நிமிடத்திலும் அவரைத் தாக்க வில்லை." மூச்சு திணறும்படித் தண்ணீர் அவரை அழுத்தியபோதும், அலைகடல் அவரை சூழ்ந்த போதும் ஆண்டவரை நோக்கி அவர் எழுப்பிய கூக்குரலுக்கு அவர் செவி சாய்த்ததற்காக நன்றி செலுத்துகிறார்". தந்தையின் வார்த்தைகள் உரைப்பது போல் " நம் கலக்கத்திலும்,ஏக்கத்திலும் இப்பாடலை நாமே எழுதியபோல் இருப்பது தான் இப்பாடலின் அழகு " என்பது மட்டுமில்லை.....அத்தகைய நேரங்களில் நாம் விடும் ஏக்கப்பெருமூச்சு கண்டிப்பாக இறைவன் செவிகளைச் சென்றடையும் என்பதும் நமக்கு ஆறுதல் தரும் விஷயம்.சரியான வார்த்தைப் பிரயோகங்களின் மூலம் நம் உள்ளக் குமுறல்களை இறைவனை நோக்கி வெளிப்படுத்த துணை நிற்கும் தந்தைக்கு என் பாராட்டுக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete
  3. GITA - NEW YORK

    - It is Sunday Morning, Aug 21, 2016 in New York.
    The birds are up and singing; most of them to their Lord; and a few to their spouses, 'you know what'!
    I recall an old lyric of Mr. Panchu Arunachalam, "kanni manam kettup pOchu, sonna padi kEtuthilla, enna podi pOttikalO mAma".

    - I am reading and reflecting on the Jonah-Prayer...

    - Despite running away from God, Jonah feels close enough to pray to "his God" [Jonah 2:2]. I may be cast deep into the depths of the sea; yet...I mean YET, to call God as "my God" - close to me to hear my cry - ah, that is just awesome. That sense of belongingness "He is mine and I am His" is basis of any prayer. Jonah is the Prodigal Son - mostly.

    - Jonah prays from within "Belly of the large fish" [Jonah 2:1]! What a lovely "temple" to be in to pray to my God! And what exactly is a temple, a church, a holy place to praise and thank the Lord?
    Perhaps not "the most consecrated space", but "the most agonizing setting in one's life" - that is the best of high altar to pray from.

    - Some intone their prayers by addressing God in the neatly cut philosophical terminologies, "Almighty, Omnipotent, Omnipresent, All-Knowing, Ever-Comprehensive, Transcendent, Fully Sinless, Well bathed and shampooed, Yardley/Lifebuoy/Chandrika Soap-Clean and whatever"...

    - Jonah is a good "model" on praying of a different type.

    He does not speak in a Socratic-Aristotelian language.

    His words and expressesions deeply touch me:

    "out of my distress"
    "I cried for help"
    "the flood enveloped me"
    "the waters swirled about me"
    "the abyss enveloped me"
    "seaweed clung around my head"
    "down I went to the root of the mountains"
    "soul fainting within me"...
    These are words I can relate well.

    - And finally, Jonah is reciting all these wonderful prayers long BEFORE he is actually OUT of the belly of the fish. That makes this avoidant personality of a prophet doubly interesting and immensely human...

    ReplyDelete