Wednesday, August 3, 2016

அதுபோதும் எனக்கு!

நாளை (04 ஆகஸ்ட்) தூய ஜான் மரிய வியான்னியின் திருநாள்.

பங்குத்தந்தையரின் பாதுகாவலராகிய இவரின் திருநாள் கொண்டாட்டத் தயாரிப்பாக இன்று மாலை செப வழிபாடும், சிந்தனைப் பகிர்வும் இருந்தது.

என் சக அருள்பணியாளர், அருள்திரு. பீட்டர் ராய் அவர்கள் மிக அழகான பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றுப் பின்புலத்துடன் வியான்னியைப் பற்றிய ஒரு புதிய பார்வையை முன்வைத்தார்.

'சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்' என்னும் முழக்கத்துடன் பிரெஞ்சுப் புரட்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த முழக்கத்திற்குப் பின்புலமாக இருந்தது 'மனித மையப்படுத்துதலும்,' 'அறிவுக்கொள்கையுமே!'

இந்தப் பின்புலத்தில் ஒரு மாற்றுப் பண்பாட்டுக் கருத்தை விதைக்கிறார் வியான்னி: 'இறை மையப்படுத்துதலும்,' 'ஆன்மீகக்கொள்கையுமே!'

'வியான்னி நரகம் பற்றியும், பாவம் பற்றியும், மோட்சம் பற்றியும் மறையுரையாற்றினார்' என்று பீட்டர் ராய் அவர்கள் சொன்னபோது எனக்கு உதடுகளில் சிரிப்பு தட்டியது. 'இதெல்லாம் இருக்கா என்ன?' என்று என்  மைன்ட் வாய்ஸ் கேட்டது.

ஆனால், இறைத்திட்டத்தைப் பொறுத்தவரையில் வியான்னி ஒரு வரலாற்றுத் தேவை.

'நான் ஒரு குரு!' - இந்த ஒரு அடையாளம் போதும் என்று உறுதியாயிருக்கின்ற வியான்னி, அந்த அடையாளத்தை அப்படியே வாழ்ந்து காட்டுகின்றார்.

நான் உரோமையில் பணியாற்றிய என் பங்கின் உதவிப்பங்குத்தந்தை தன் வாட்ஸ்ஆப் ஸ்டேடசில், 'நான் ஒரு இத்தாலியன். அதுபோதும் எனக்கு!' என்று எழுதியிருப்பார். இது ஒரு ப்ரொவ்ட்(!) ஸ்டேடசாக இருந்தாலும், இதில் ஓர் உண்மை இருக்கிறது என இன்று எனக்குப் புரிகிறது.

'நான் ஒரு குரு. அதுபோதும் எனக்கு!' - இதுதான் வியான்னியின் ஸ்டேடஸ்.

இடத்தாலும், நேரத்தாலும் கட்டப்பட்ட நம் வாழ்வில் நாம் ஒரு மனிதராகத்தான் வாழ முடியும். அந்த மனித அடையாளத்தை நிறைவாக வாழ்தல் போதும் என்கிறார் வியான்னி.

சில ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு நிறைய தனிநபர் இலக்குகள் இருந்ததுண்டு: 'குருவாக இருந்து கொண்டே வழக்கறிஞராக இருப்பது!' 'குருவாக இருந்து கொண்டே ஆசிரியராக இருப்பது,' 'குருவாக இருந்து கொண்டே மருத்துவராக இருப்பது!' அல்லது 'பார்ட் டைம் அருள்பணியாளராக இருப்பது!'

ஆனால், வியான்னி இன்று எனக்கு வைக்கும் சவால் இதுதான்: 'நீ ஒரு குரு! அதுபோதும் உனக்கு.'

இதை வாழ்வதற்கே நிறைய முயற்சிகள் தேவை. இந்த ஒன்றை நான் வாழ நினைத்தாலே போதும் என நினைக்கிறேன்.

அவர் பெரிய காரியங்கள் எதுவும் செய்யவில்லை.

ஆனால் செய்த அனைத்தையும் பெரியதாகச் செய்தார்!

6 comments:

  1. " அவர் பெரிய காரியங்கள் எதையும் செய்யவில்லை; ஆனால் செய்த அனைத்தையும் பெரியதாகச் செய்தார்"... நாளைய திருவிழா நாயகனைப் பற்றித் தந்தை கூறும் நறுக்கு தெரித்த வார்த்தைகள். சிலரைப் பற்றிக் குறிப்பிடுகையில் "master of all trades; but Jack of none" எனக் கேட்டிருப்போம். தெளிவின்றி செய்யும் பல காரியங்களை விட, நாம் விரும்பி மேற்கொண்ட ஒன்றிற்காக நம் உடலையும்,உள்ளத்தையும் ஒருங்கே தர வேண்டும்" என்கிறார் புனித மரிய வியான்னி.இது பங்குத் தந்தையரையும் ,மற்ற அருள் பணியாளர்களையும் தாண்டி எல்லோருமே மேற்கொள்ள வேண்டிய ஒரு விஷயமே! தான் ஒரு குரு என்ற அடையாளமே தனக்குப் போதும் என்று வாழ்ந்த ஒருவரைக் கொண்டாடும் இவ்வேளையில் " நான் ஒரு மனிதனாக வாழ்ந்தாலே போதும்" என்ற எண்ணமும் கூடவே எழுகிறது. புனித. மரிய வியான்னியைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டு வாழும் அனைத்து பங்குத் தந்தையருக்கும்,மற்ற அருட்பணியாளர்களுக்கும் என் உளம் கனிந்த செபங்களும், வாழ்த்துக்களும்! மூவொரு இறைவனின் தூண்டுதலும், உடனிருப்பும் தங்களை என்றைன்றும் வழி நடத்தட்டும்!! தந்தைக்குத் தனிப்பட்ட முறையில் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!

    ReplyDelete
  2. Gita - New York

    Dear Fr. YESU:

    I would not personally endorse St John Vianney as patron of parish priests.

    Who would be my choice?
    It is St Paul, the Apostle...

    True Vianney was extraordinarily pious, but his knowledge of his contemporary culture and social customs of France [especially during and after the French Revolution] is questionable. He was more of a reactionary than was an apostle who encountered the deepest aspirations of an emerging France.

    I would rather have a parish priest in my parish to teach me, critique me, lead me and guide me, may be more pious and MORE LEARNED and EDUCATED than a priest of any religious congregation.

    There is this myth in Tamilnadu that a priest of a Congregation or Religious Order is somehow more "wise" and "scholarly" and "an extraordinary import" and a parish priest is just an ordinary pick from the local market...

    ReplyDelete
  3. Dear Father,Happy Feast!

    ReplyDelete
  4. Dear sago. You have well indicated that we should live a life of priesthood in its totality.

    ReplyDelete
  5. Dear sago. You have well indicated that we should live a life of priesthood in its totality.

    ReplyDelete