Thursday, August 25, 2016

யோனா - 9

நினிவே மக்கள் சீக்கிரம் மனமாற்றம் அடைந்துவிட்டார்கள் என மகிழ்ச்சி அடையாமல், அவர்களின் மனமாற்றம் பற்றி வருத்தப்படுகின்றார் யோனா.

நினிவே நகர் அழிக்கப்பட வேண்டுமென்று நினைக்கிறாரா யோனா?

இதன் வரலாற்றுப் பின்புலத்தைப் பார்ப்போம்.

நினிவே அசீரியாவின் தலைநகர். அசீரியப் படையெடுப்பால் வடக்கு இஸ்ரயேல் அழிந்து போகிறது. அதற்கு முதற்காரணம் நினிவே நகரம். ஆக, நினிவே அழிய வேண்டும் என்பது எல்லா யூதர்களின் கனவாக இருந்தது. இந்தக் கனவு யோனா என்ற இலக்கிய நபர் மேலும் திணிக்கப்பட்டிருக்கலாம்.

இந்தக் காரணத்திற்காகத்தான் யோனாவும் நினிவே நகரம் செல்வதைத் தவிர்க்கிறார். வேகமாக நற்செய்தியை அறிவிக்கிறார். ஊரைவிட்டு வெளியே கூடாரம் அமைத்துக் கொள்கிறார். 'மதியாதார் தலைவாசல் மிதிக்காதே' என்று வாழ்ந்தவரை ஊரின் நடுவே நடக்க வைக்கிறார் கடவுள்.

தன் இரக்கத்தை புரிய வைப்பதற்காக திருவிளையாடல் ஒன்றை நடத்துகிறார் கடவுள்.

யோனா தங்கியிருந்த கூடாரத்திற்கு நிழலாக ஆமணக்கு செடி ஒன்றை வளர வைத்து அந்தச் செடியை அழிக்க புழு ஒன்றையும் அனுப்புகின்றார். யோனாவுக்கு பிஞ்சு மனசு. ஆமணக்கு செடி வாடியதை நினைத்து வாடுகின்றார். மறுபடியும், 'நான் சாகப்போகிறேன்' என்கிறார்.

இறைவனின் இரக்கத்தை யோனா புரிந்து கொண்டாரா, இல்லையா? - இந்தக் கேள்விக்கு விடை நூலில் இல்லை.

2 comments:

  1. அழகான பதிவு.இன்றையப் பதிவில் இறைவனும்,யோனாவும் " நீயா- நானா" கேம் ஆடுவதை உணரமுடிகிறது.இவர்களுக்குள் யார் பெரியவர் எனும் 'ஈகோ'வை வெளிக்கொணரும் ஆட்டம் அல்ல இது.இறைவனுக்குத் தன் ஜனத்தின் மீதிருந்த அக்கறையையும்,யோனாவுக்கு இறைவன் மீதிருந்த உரிமையுடன் கூடிய பக்தியையும் நாம் புரிந்து கொள்வதற்காக விளையாடும் ஆட்டம்.தன் எண்ணம் போல் செயல்படாத இறைவன் மீது கோபம் கொண்டு ஊரையே விட்டுப்போனாலும்,இறைவனின் உடனிருப்பு யோனாவைத் தொடருகிறது ஒரு ஆமணக்குச் செடி வடிவில்.கண்ட மாத்திரத்தில் அதைக் கருகவும் செய்து " நீ என்ன செய்தாய் அதன் மீது உரிமை கொண்டாட?" என்பது போல் யோனாவுக்கு ஒரு பாடம் புகட்டுகிறார் இறைவன்.நம் வாழ்விலும் கூட, நமக்கு வசந்தமாக வரும் 'ஆமணக்குச் செடிகளை'க் கண்டு முகம் மலரும் நாம் அவை நம்மை விட்டுப் பிரிகையில் முகம் சுளிக்காதிருக்கும் வரம் கேட்போம்.இறைவனுக்கும்- மனிதனுக்குமான தந்தை- மகன் போராட்டத்தை அழகுற எடுத்துக் காட்டியுள்ள தந்தைக்கு என் நன்றிகள்! என் நெஞ்சுக்கு மிக நெருக்கமாகி விட்டார் யோனா..
    வாழத்துக்கள்!!!

    ReplyDelete
  2. GITANJALI A BERNARD
    New York

    Dear Fr. YESU:

    You capture the SPLIT MIND of​ Jonah, the missionary.

    To begin with,​ he is supposed to be​ ​the​ ​carrier​ of God's mercy and compassion.
    On the contrary, he​ comes​ to think ​he are the 'exclusive distributor' of His forgiveness and love.

    In the process,​ Jonah​ become​s​ "mean" and "mean-spirited" and "narrow-minded".

    As though​ he​ control​s​ God.
    As though God has to take orders from​ him.

    The role becomes reversed.
    The prophet/missionary becomes God.
    God becomes prophet - prophet's vassal, servant, peon...

    Most of Church​ 's Mission​ History is the history of Jonah.

    While the large City that is Nineveh lies ahead
    and goes on thriving​ - reformed and saved, the Prophet, who​ comes to reform and save,​ "goes out, sits down at a place EAST OF THE CITY​" [Jonah 4:5]​.

    An ugly sample of a missionary going to hell...even as he is the agent of making everyone reaching heaven.​

    A ridiculous superiority complex.​..​

    A missionary endeavor that feels he is far above the people to whom he ​has been ​sent​ to serve..

    As a​n​ end note, I am curious to know, upon death, where Jonah wishes to be buried​!?​.

    ReplyDelete