நாளை மார்த்தாவின் திருநாள்.
பெத்தானியா இயேசுவுக்கு இரண்டாம் வீடு.
பெத்தானியா வீட்டின் இல்லத்தரசி மார்த்தா. மார்த்தாவை நினைக்கும் போதெல்லாம் அவரை மரியா மற்றும் லாசருக்கு அக்கா என்ற நிலையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்றே தோணும்.
அக்காவுக்குப் பின் பிறந்த தம்பி அல்லது தங்கைக்கு எப்போதும் இரண்டு அம்மாக்கள். ஒன்று, தாய். இரண்டு அக்கா. அக்காக்கள் வீடுகளில் குட்டி அம்மாக்களாகவே இருக்கிறார்கள்.
இயேசுவை தன் இல்லத்திற்கு வரவேற்றவர் இந்தக் குட்டி அம்மா மார்த்தாதான்.
தன் சகோதரன் இறந்த செய்தி கேட்டு இயேசு வந்தபோது அவரை நோக்கி ஓடிச் சென்றதும் இந்தக் குட்டி அம்மாதான்.
இரண்டு முறை மார்த்தா பேசுகின்றார் நற்செய்தி நூல்களில்:
அ. 'என்னோடு வேலை செய்யும்படி என் சகோதரியை என்னுடன் அனுப்பி வையும்!'
இயேசுவிடம் எந்தவித இனிஹிபிஷனும் இல்லாமல் பேசுகிறார் மார்த்தா. 'இயேசு என்ன நினைப்பார்?' என்ற கவலை அவருக்கு இருந்ததே இல்லை.
ஆ. 'நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்!'
இயேசுவை எப்போதும் தன்னுடன் வைத்துக்கொள்ளவும், அவர் தன்னுடன் இறந்தால் தனக்கும், தன் இல்லத்திற்கும் எதுவும் நெருங்காதும் என்றும் அலாதி நம்பிக்கை கொள்கிறார்.
இயேசுவுக்கு அவரின் அம்மா மரியா முதல் பிறப்பைத் தருகின்றார்.
இந்தக் குட்டி அம்மா அவருக்கு இரண்டாம் பிறப்பைத் தருகின்றார்.
மரியா வழியாக இயேசு இந்த உலகிற்கு வந்தார்.
மார்த்தா வழியாக இயேசு நம் வீட்டிற்கு வரும் அளவுக்கு நெருக்கமாகிறார்.
இறுதியாக,
'பலவற்றைக் குறித்துக் கவலைப்பட்டவர் மார்த்தா!'
இதுதான் நம் வாழ்வின் எதார்த்தம்.
இயேசுவின் காலடியில் அமர்ந்து அமைதியாக இருக்கும் தங்கை மரியாவைப் போல வாழ்க்கை நம் அனைவருக்கும் அமைவதில்லை.
நாம் இவ்வுலகில் வாழும் வரை மார்த்தா போல ஓடிக்கொண்டேதான் இருக்கின்றோம்.
இன்று நாம் பலவற்றைக் குறித்துக் கவலைப்படவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
கவலைகள்தாம் வாழ்க்கை.
ஆக, கடவுளின் பாதம் அமர்வதை விடுத்து இன்னும் கொஞ்சம் கவலைப்படுவோம்!
மார்த்தாவின் கவலைகளும் இயேசுவை மையப்படுத்தியேதான் இருந்தன!

அழகானதொரு பதிவு. என்னைப் போன்ற பல பெண்களுக்கு மரியாவை விட மனதுக்கு நெருக்கமானவர் மார்த்தா தான்.ஆம்...பலபெண்கள் அதிலும் வீட்டிற்கு மூத்தவராய் பிறப்பவர்கள் தங்களுக்காகக் கவலைப்படுவதை விட சுற்றியிருப்பவர்களுக்காகக் கவலைப்பட்டு சோர்ந்து போனது தான் அதிகம்.இயேசுவின் பாதம் அமர்ந்திருக்கும் மரியாக்காளை விட,அவரின் தேவைகளை நிறைவேற்றும் மார்த்தாக்களே ப்ராட்டிக்கலானவர்கள் என்பது என் கருத்து." நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான்"... இயேசுவின் மீது மார்த்தாவுக்கு இருந்த நம்பிக்கையை எடுத்தியம்ப இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். கவலைகள் நிறைந்த நம் வாழ்க்கையில் அந்தக் கவலைகள் இயேசுவை மையப்படுத்தியே இருக்கும் வரை அவர் நம்மையும்,நம் கவலைகளையும் சேர்த்தே புரிந்து கொள்வார் என நம்பிக்கை தரும் பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்.நாமும் கூட வாழ்விழந்த பலருக்கு ' குட்டி அம்மாக்களாக' மாறுவோம்...மாற முயற்சிப்போம்...
ReplyDeleteGita - New York
ReplyDeleteDear Fr. YESU:
1] You almost brought tears to my heart as I sat reading your unique take on Martha.
2] Oftentimes "masala sermons" would argue for an uplifting of Mary and the downsizing of Martha and a creation of a spirituality of irrelevance and impracticality, of fantasy and other-worldliness, unrelated my daily life...
This "Mary" has never spoken a word in the New Testament, whereas all the anxious ranting are flowing from Martha.
A profound model for me.
How many unspeakable ramblings rise from me all the time...
As you say...every expression of concern of Martha comes up as an unvarnished prayer, centered on Jesus. Is that not a great model to imitate too.
I then thought: In that warm home of Bethany, whatever happened to the three siblings? Were they orphans? Did the father run off? Something worse happened to their mother?
If so, the "older sister" becoming "younger mother" takes on an added meaning. And the perennial silence of Mary and absence of Lazarus...O Lord, I can't even imagine. When catastrophes and trauma strike families, indeed some members do become wordy and loud; others become silent like tombs; still others begin to wander and get lost like sheep...
Very Good blog Yesu. I tried to know about their parents i failed in the attempt. You can enlighten Yesu.
ReplyDeleteShe becomes the another apostle in line with St. Peter who professed that Jesus is the Messaih.
Kutti amma.. really a nice and apt title...
ReplyDelete