Friday, August 19, 2016

யோனா - 3

'தூக்கம்' என்பது ஒரு மௌனப் போராட்டம்.

நாம் வாழப் பிடிக்காதபோதும்

வாழ்வு நமக்கேற்றாற்போல அமையாதபோதும்

நம் கோபத்திலும், ஏமாற்றத்திலும், கண்ணீரிலும்

தூக்கம் நம் கண்களைத் தழுவிக் கொள்கிறது!

தன் கடவுள் மேல் யோனாவுக்கு அப்படி என்ன கோபம்?

கப்பலில் ஏறியவுடன் ஓடிப் போய் சுருண்டு படுத்துக் கொண்டார்!

கப்பலில் கீழ் அடுக்கு, மேல் அடுக்கு, மேல் தளம் என மூன்று அமைப்புக்கள் உண்டு.

உணவுகளும், எரிபொருளும், மருந்துகளும் சேமித்து வைக்கப்படும் கீழ் அடுக்கில் போய் உறங்குகிறது இந்தப் புறா.

அதாவது, 'இருக்க வேண்டிய இடத்தில் யோனா இல்லை!'

நினிவேக்கு போக வேண்டிய யோனா நினிவேக்கு போகவில்லை!

மேல்தளத்தில் மற்ற பயணிகளோடு இருக்க வேண்டிய யோனா அங்கு இல்லை.

கடலின் கொந்தளிப்பு கண்டு எல்லாரும் கதறித் தங்கள் தெய்வங்களிடம் வேண்ட,

இவரோ உறங்கிக் கொண்டிருக்கிறார்.

தன் தெய்வத்திடம் வேண்டினால் கடல் கொந்தளிப்பு நிற்கும் என்றும்,

தன்னால் தான் இந்தக் கடல் கொந்தளிப்பு என்றும் தெரிந்தது யோனாவிற்கு.

'டேய். எழுந்திரு! உன் தெய்வத்திடம் வேண்டு.

ஒருவேளை உன் தெய்வம் நம்மைக் காப்பாற்றலாம்!'

கொக்கரிக்கிறான் கப்பல் தலைவன்.

மெதுவாகக் கண்களைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்காருகிறார் யோனா.

நிற்க.

யோனாவின் காலத்துக் கப்பல் பயணம் மிக ஆபத்தானது. தொழில்நுட்பம் வளர்ந்தபின் வந்த டைட்டானிக் கூட தன் கன்னிப் பயணத்திலேயே அழிவுற்றது.

சேட்டிலைட்டுகளும், ஜிபிஎஸ் கருவிகளும், நேவிகேட்டர்களும் செயல் இழந்தவுடன் மனம் கடவுளைத் தேடுகிறது.

உயிர் போய்விடும் என்ற பயம் திகிலைக் கொடுக்கிறது.

இந்தப் பயமே நம்மை பாதி தின்றுவிடுகிறது.

ஒரு பக்கம் கடவுளை நோக்கி வேண்டினாலும், மறுபக்கம் கப்பலில் இருப்பவர்கள் தங்களால் இயன்றவரை தங்களையே காப்பாற்றிக் கொள்ள விழைகிறார்கள். கப்பலின் பளுவை குறைப்பதற்காக அதிலிருந்த சரக்குகளை கடலில் எறிகின்றனர். 'கடலே, எங்களை விட்டுவிடு! இந்த உணவுப் பொருள்களை உண்டு உன் பசியைப் போக்கிக்கொள்!' என்று சொல்வதுபோல இருக்கிறது இவர்களின் செயல்.

ஒரு பக்கம் கடவுளை நோக்கியும் செபிக்கின்றனர்.

மறு பக்கம் தாங்களாகவே தங்களை காத்துக்கொள்ளவும் நினைக்கின்றனர்.

இதுதான் நம் அன்றாட போரட்டம் கூட. எப்படி?

'கடவுளின் பராமரிப்பையும் நம்புகிறோம். எல்.ஐ.சி. பாலிசியும் கட்டுகிறோம்!'

3 comments:

  1. " இருக்க வேண்டிய இடத்தில் யோனா இல்லை." இறைவனின் வார்த்தைகளுக்கு எதிராக செயல்பட்டதனால் வந்த பின் விளைவாக, ஏன் குற்ற உணர்வாகவும் கூட இருந்திருக்கலாம்.கடலின் கொந்தளிப்பு கண்டு அதற்குக் காரணமானவர் யோனா என்றபழி தன் மேல் விழ தான் தண்டிக்கப்பட வேண்டியவர்தான் என்பதை உணர்கிறார் யோனா.ஆனால் இங்கே தந்தை பதிவு செய்வது "சேட்டிலைட்டுகளும்,ஜிபிஎஸ் கருவிகளும்,நேவிகேட்டர்களும் செயல் இழக்கும் போது மனம் தேடுவது கடவுளை" என்பதை. கடவுளின் இரக்கத்தோடு தங்கள் முயற்சியும் சேர்ந்து கைகொடுக்காதா என்று தவிக்கின்றனர் பயணிகள்.இங்கே தந்தைக்கு ஒன்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்." God helps only those who help themselves"... இது முதியோர் மொழி.ஆகவே கடவுளின் பராமரிப்பை நம்பும் ஒருவன் எல்.ஐ.சி. பாலிசி கட்டுவதில் தப்பில்லை என்று நினைக்கிறேன்.கடவுளின் பாராமரிப்பு தனக்காக; எல்.ஐ.சி. பாலிசி தன்னை நம்பியவர்களுக்காக.அப்பப்போ இப்படி உசுப்பேத்தி எங்களின் சிந்தனைத் திரியைத் தூண்டிவிடும் தந்தைக்கு என் நன்றிகள்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. GITA - New York

    ​Dear Fr. YESU:​

    The drama of Jonah, as it plays out in your blog, is getting ​more ​crazy and exciting.

    Could not God call a more qualified prophet to achieve His mission than this guy who seems to have no focus in his life?

    As soon as he secures ​his ticket to Tarshish, he ​rushes to secure a comfortable ​setting to sleep.

    Sort of a devotee, boarding in Chennai Egmore, traveling to Nagapattinam-Vailankanni...

    The Bible says:"Meanwhile, Jonah had gone down into the hold of the ship [gone below the deck],
    and lay there fast asleep" [Jonah 1:5].​

    There is yet another reference:​
    ​"Entering the city, they went to the UPSTAIRS ROOM where they were staying...Together they devoted themselves to constant prayer." [Acts 1:12-14]

    ​Indeed, a better prophet must be more awake than go about sleeping.
    A committed missioner ought to go to the UPSTAIRS ROOM than go down below the deck.​

    At this juncture, Jonah is a poor model of every Christian, every family, every parish, every community, every religious congregation, every national church, and the entire People of God-Body of Christ:
    slumbering below the deck with least concern, even as the violent wind is hurling around, and the ship is on the point of breaking up" [Jonah 1:4]

    ReplyDelete