Tuesday, August 23, 2016

யோனா - 7

'எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும்.' (யோனா 3:7-8)

ரோமில் குளிர்காலத்தில் அல்லது மழைக்காலத்தில் நாய்க்குட்டிகளை வாக்கிங் கூட்டி வரும் சீமாட்டிகள் அவைகளுக்கும் ரெயின் கோட் அல்லது ஸ்வெட்டர் அணிவித்திருப்பார்கள். அவைகளைப் பார்க்கின்ற நானும் என் நண்பனும், 'இன்னும் கொஞ்ச நாளில் செருப்புகளும் வந்துவிடும்!' என்பதுண்டு. பின்னொரு நாளில் நாய்க்குட்டிகளுக்கான பிரத்யேக சாக்ஸ் கடை ஒன்றையும் காண நேரிட்டது.

நினிவே நகரத்தின் ஆடு, மாடுகள், கோழி, நாய்க்குட்டிகள் சாக்கு உடை அணிந்திருக்கின்றன என நாம் யோனா நூலில் வாசிக்கின்றோம்.

இலக்கிய நடையில் இதை 'மிகைப்படுத்துதல்' என்று நாம் அழைத்தாலும், இது இப்படி நடந்திருக்கும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.

நினிவே நகரத்து அரசன் மிகவும் புத்திசாலி. உடனடியாக ஆணையிட்டு தன் மக்களை கடவுளின் சினத்திலிருந்து காப்பாற்ற விழைகின்றான். இப்படி உடனடியாக முடிவெடுக்கும் அரசர்கள் இன்று நம் நாட்டுக்கும், திருச்சபைக்கும் அதிக தேவை.

மக்களும் நல்லவர்கள். அரசன் சொன்னதை அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள்.

'உணவு மறுப்பு, உடை மறுப்பு' என இரண்டு நிலைகளில் நடந்தேறுகிறது மனமாற்றம்.

மனிதர்கள் முதலில் பாவம் செய்தது உணவில்தான். விலக்கப்பட்ட கனியை உண்டனர்.

அந்த உண்ணுதலோடு உடை உடுத்துதலும் ஒட்டிக் கொண்டது.

ஆக, பாவத்திலிருந்து மனமாற்றமும் இந்த இரண்டையும் புரட்டிப்போடுகிறது.

இவை வெளிப்புற அடையாளங்கள்தாம்.

ஆனால், அகத்திலும் மாற்றங்கள் நடக்கின்றன.

'கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்'

'தீய வழிகளையும் கொடுஞ்செயல்களையும் விட வேண்டும்'

நினிவே மக்களின் இச்செயல்களைப் பார்த்து கடவுளும், யோனாவும் ஒரே நேரத்தில் ஆச்சர்யப்படுகின்றனர்.

கடவுள் மக்களை மன்னிக்கின்றார்.

யோனா கடவுள்மேல் கோபம் கொள்கின்றார்.

2 comments:

  1. நினிவே நகரத்து அரசன் மட்டுமின்றி அவனது குடிமக்களும் இறை பயம் உள்ளவர்களாகத் தெரிகிறார்கள். ' மன்னன் எவ்வழி; மக்கள் அவ்வழி' என்பதை மெய்ப்பிக்கிறார்கள் உணவையும்,உடையையும் துறந்து சாக்கு உடையாலும்,சாம்பலாலும் தங்கள் மேனியை மூடுவதன் மூலம்.அவர்களின் புறத்தை மட்டுமின்றி,அகத்தையும் சேர்த்தே பார்த்த இறைவன் அவர்களுக்குத் தான் தருவதாகச் சொன்ன தண்டனையிலிருந்து அவர்களைத் தப்புவிக்கிறார்.எப்பேர்பட்ட பாவிகளையும் அவர்கள் உண்மையாக வருந்தித் திருந்தி வருகையில் இறைவன் மன்னித்து ஏற்றுக்கொள்கிறார் என்பதும், மனிதனோ அதற்கு நேர்மாறாக தீயதை மட்டுமே சிந்திக்கிறான் என்பதும் இங்கே வெள்ளிடை மலையாகக் காட்டப்படுகிறது. கடவுளோ மக்களை மன்னிக்க,யோனா இறைவன் மீது கோபம் கொள்கிறார் என்கிறது இன்றையப் பதிவு.சில சமயங்களில் முரண்பாடுகள் சங்கமிக்கும் போதுதான் அங்கே பல சர்ச்சைகளுக்கு விடை கிடைக்கிறது என்பதும் கூட உண்மையே! சந்தடி சாக்கில் தந்தை ரோமை நகரத்து சீமாட்டிகளையும்,அவர்களின் அழகுமிகு நாய்க்குட்டிகளைப்பற்றியும் சொல்லியிருப்பது 'அழகு' எனில் " உடனடியாக முடிவெடுக்கும் அரசர்கள் இன்று நம் நாட்டுக்கும்,திருச்சபைக்கும் தேவை" என்று கோடிட்டிருப்பது ' அறிவு' எனலாம்.அழகான,ஆழமானதொரு கருத்தைக் கொண்ட பதிவிற்காகத் தந்தைக்கு ஒரு சபாஷ்!!!

    ReplyDelete
  2. GITA A BERNARD, New York

    As ​the ​Prophet preaches in the city, it is the citizens who hear the proclamation first - not their King [Jonah 3:5].
    They, it is, who declare the fast first - not their King.
    And it is they who put on the sackcloth and sit on the dust - and not their King.

    It is still a fact of history that the early inklings toward changes and reforms​, conversions and commitments​ are first felt among​ and welcomed by​ the people,​ and not ​by those ​ that are ​"vested in royal robes".​

    Also, it is possible that the Prophet himself goes FIRST to the general population, ignoring the King.
    ​[It is a slap in the face of certain Church authorities, Religious Orders etc. who run after Herods and Pilates - to court their political reference in order to inaugurate new MISSIONS for the Lord!]​

    ​After the people, the news reaches the King in his court.
    [​News reaches the King - indeed; the Prophet himself does not go to the King, on an an official appointment with a garland and a cake!]

    ​"When the news reached the king, he rose from his throne, took off his royal robes, covered himself with sackcloth and sat down in the dust." [Jonah 3:6]

    King's immediate follow​- up goes ​way ​ahead of the composition of the decree;
    ​his ​example precedes the encyclical;
    ​his ​praxis come​s​ first and then​ he contemplate​s​ ​about the advertising o​f grinders and fans ​- ​on the city walls...

    Now the DECREE of the king follows...
    Addressed to "man, beast, herd, and flock"​ in detail.

    "No tasting anything, no eating anything, no drinking anything"
    "Everyone to cover with sackcloth"
    "All to call urgently on God"
    "Give up their evil ways and their violence".

    I love the inclusiveness of the agenda:

    a. Man, beast, herd, and flock.
    Yahweh's Salvation ​is​ a gift to the entire creation​ - not women and men alone​.
    What a holistic thing it is to invite ​"​our herd, be​as​t and flock​"​ to join us in our ​moments of ​Lent.
    And equally ​in our happy and celebratory Pongal festivities - with garlands, bells and sandal paste​.

    b. The conversion work is external​.
    Abstinence from eating, drinking and tasting is necessary.
    Sackcloth and ashes - Whom did you go out to see?​​

    c. It is internal​.​
    Everyone is called upon to call urgently God.
    Mere calls won't do - there must be giving up of the evil ways and all forms of violence.

    Kate Horsley once wrote of ​Kings and Emperors:
    “The greatest trick of kings is to fool the poor into thinking we have common cause with the rich simply because we live on the same bog.
    Then the poor get their heads split open in the battles they fight so the rich can keep their wine cellars well stocked.”

    ​The Pope hasn't beatified Nineveh's King yet.
    But I think he is a holy man.

    ReplyDelete