Monday, August 15, 2016

லா சலேத்

நேற்று கொடைக்கானல் லா சலேத் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன்.

நேற்று மாலை சென்னை பேராயரின் திருவிழா திருப்பலி. இன்று காலை தேரடித் திருப்பலி. தொடர்ந்து புது நன்மை திருப்பலி என முடிந்து சற்று நிமிடங்கள்முன்தான் வீடு திரும்பினேன்.
மனிதன் 'விழாதிரு'க்கவே 'திருவிழா' கண்டுபிடிக்கப்பட்டது என்பதற்கு இந்தத் திருநாள் சான்று.

ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் நேரடியாகவோ, மற்ற மீடியா வழியாகவே இந்த இரண்டு நாட்களில் சலேத் அன்னையை தரிசித்திருக்கிறார்கள்.

நான் 2008ஆம் திருத்தொண்டர்பணி ஆற்றிய காலத்தில் இருந்தே சலேத் அன்னையின் மேல் ஓர் ஈர்ப்பு இருந்ததுண்டு. காலப்போக்கில் இந்த ஈர்ப்பு ஆசையாக மாறி இப்போது பக்தியாக மலர்ந்து நிற்கிறது.

ஒவ்வொரு வருடமும் இந்த அன்னை ஒரு லட்சம் பேரை இழுக்கும் சக்தி பெற்றிருக்கின்றார். இந்த ஒரு லட்சம் பேர் வழியாக நம் எவ்வளவு செய்திகளைச் சொல்லி அனுப்புகிறோம்? என்பதும் கேள்விக்குறி.

மடிக்காணிக்கை. நேர்ச்சை. விரதம். முடி எடுத்தல். பொங்கல் வைத்தல்.

இந்த பக்தி முயற்சிகளின் முன் நான் வைக்கும் திருப்பலியும், மறையுரையும் ஏதோ 'சத்தம்' போல அவர்கள் உணர்வதாகவே நினைத்தேன்.

சின்ன வயதில் எங்க ஊரு முளைக்கட்டு திருவிழாவுக்கு சென்று திரும்பிய நினைவு வந்தது.

வீதியெங்கும் கடைகள்.

தங்கள் கைகளுக்கு வளையல்கள் தேர்ந்தெடுக்கும் மகளிர்.

நான் பார்க்கிறேன் என்று தெரிந்தவுடன் தான் பேசிக்கொண்டிருந்த ஐஃபோனின் சிம்பளை மறைத்திருந்த தன் குச்சி விரலை சற்று இறக்கி, 'நானும் ஐஃபோன் வைத்திருக்கிறேன்!' என்று சொல்வது போல சொல்லாமல் சொல்லிய ஒரு கறுப்பு சேலை இளவல்.

மொட்டை தலையில் சந்தனம் தேய்த்து அதைத் தன் அம்மாவின் சேலையில் மறைத்துக் கொண்டே நடந்த சின்னஞ்சிறுசுகள்.

தாய்மாமன் மடியில் வைத்து மொட்டை எடுக்க விடாமல் திமிறிக் கொண்டு எழுந்ததில் கத்தி பட்டு இரத்தம் வந்து கீறிட்ட ஒரு குட்டி மருமகள்!

தீர்த்தம் சேகரித்தவர்கள்.

எண்ணெய் வாங்கியவர்கள்.

இரண்டு விரல்களை தலைக்கு மேல் தூக்கிக் கொண்டு 'நான் முடிவெட்டப் போகிறேன்' என்ற தொனியில் போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்த பசங்க!

நல்லா இருக்கிற தங்கள் முகங்களை அஷ்டகோணலாக்கி செல்ஃபி எடுத்து, 'இது நல்லா இல்ல!' என தங்கள் ஃபோட்டோக்களை அழித்துக் கொண்ட பொண்ணுங்க!

இவ்வளவு விமரிசையாக கொண்டாடப்பட்ட திருவிழா நேரங்களிலும் மேல் சட்டை இல்லாமல் 'அம்மா, ஏதாவது போடுங்க' என்று பாத்திரம் ஏந்திக் கொண்டிருந்த சிறுவர், சிறுமியர்.

(மற்ற சிறுமியர்-சிறுவர் புத்தாடை அணிந்து திருவிழா கொண்டாடுவதைப் பார்க்கும்போது இந்தப் பிள்ளைகள் மனது என்ன பாடு படும்!

பெரிய நகைக்கடை நிறுவனங்களில் நிறைய நகைகளை வாங்கிக் கொண்டு வெளியேறும் குடும்பத்தாரைப் பார்த்து 'சல்யூட்' அடிக்கும் வாட்ச்மேன்களுக்கு அந்நேரத்தில் தங்கள் மனைவி மற்றும் மகளின் முகம் தங்கள் கண்முன் வந்து போகும்தானே!)

ஒன்று மட்டும் புரிந்தது.

மக்களின் ஆலய வருகை அருள்பணியாளரை மையப்படுத்தியதோ, அவரின் செயல்பாடுகளை மையப்படுத்தியதோ, அல்லது அவரின் இனிய வார்த்தைகளை மையப்படுத்தியோ அல்ல. இவைகள் நன்றாக இருந்தால் அது அருள்பணியாளரின் கேரிசம். அவ்வளவுதான்!

மற்றபடி,

தெய்வங்கள் தாங்களே தங்கள் பக்தர்களை தங்களிடம் அழைத்துக் கொள்கின்றனர்.

2 comments:

  1. New York

    Dear Fr. YESU:

    01] Your summary of Kodaikanal's La Salette Festivities is very charming. As I read you,
    I felt like traveling by a Lufthansa Airbus 380-800 from New York to Frankfurt. The scenes on-the ground, the quick amassing of visuals, the fast-paced run on the tarmac and the speedy take off...
    Oh what a way of writing. As in the Bible, I feel like screaming, "Blessed is the womb that bore you!". Your imagination seems like the fertile fields of Thanjavur and Nanjil Nadu.

    02] The quasi-intellectuals might argue for a total cleansing of Kodaikanal's "Temple of Jerusalem", with whipping chords and overturned tables. I would not go that far. If they do, it won't be THIRU VIZHA any more; it will not be a celebration for and with the Mother...[not a funeral, is it?]

    03] A heart that overflow with love for Blessed Mother MUST be given a sense of freedom and poetic creativity to "emotionally" and "imaginatively" invent its expressions. How does a man say, "I love you" to his woman or vice versa? Is there any standard-stipulated-codified rule book? I would invite your readers to re-imagine every normal and abnormal La Salette excesses as the Tamil Psyche's crying out in joy of over 1 lakh devotees.

    04] Fr. Hans Kung once wrote: ' "All generations shall call me blessed". Is calling her blessed to be done only silently, only shame-facedly, only peripherally, only privately? Is it only to be taught [and often not even that], or to be lived as well? Can we raise our voices in praise
    of Christ without also raising them in praise of Mary who spoke he decisive FIAT to Christ?'

    5] Just imagine then the appalling status of the many Separated Brothers and Sisters who miss the presence of the Mother of Jesus in their devotional lives?

    06] Tamilnadu is the birth place of so much literature and Bhakthi material. And in turn of popular devotions. Who can then set boundaries upon Tamil's Catholic hearts and emotions? “There is nothing on earth more beautiful to me than your smile...no sound sweeter than your laughter...no pleasure greater than holding you in my arms. I realized today that I could never live without you, stubborn little hellion that you are. In this life and the next, you’re my only hope of happiness. Tell me, ... dearest love...how can you have reached so far inside my heart?”.

    ReplyDelete
  2. ஏதோ ஒரு திருவிழாத் திருப்பலிக்குச் சென்று வந்த உணர்வு. தந்தைக்கு ஒரு கேள்வி! எப்படித்தான் பார்த்த விஷயங்களை ஸ்கேன் பண்ணிக்கொடுப்பதுபோல் கொடுக்க முடிகிறது தங்களால்? என்னை அடிக்கடி வியக்க வைக்கும் விஷயம் இது. சரி விஷயத்துக்கு வருவோம்.ஒரு திருவிழாவில் எத்தனை தான் நம்மை,நமது பக்தியை, நம் நம்பிக்கையை திசை திருப்பக்கூடிய விஷயங்கள் இருப்பினும் அத்தனையையும் மீறித் தங்கள் இறை நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும்,கிடைத்த ஆசீர்வாதங்களுக்கு முழுமனத்துடன் அன்னைக்கு நன்றி செலுத்தவும் வரும் பக்தர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.கண்டிப்பாக இவர்களுக்குத் தாங்கள் வைக்கும் திருப்பலியும்,மறையுரையும் ' சத்தம்' மட்டுமே என்ற ஐயம் தேவையில்லை.அப்படி ஒரு எண்ணம் தங்களின் முழு ஈடுபாட்டுக்கு முட்டுக்கட்டை போடலாம்.அது மட்டுமல்ல.... " மக்களின் ஆலய வருகை அருள்பணியாளரை மையப்படுத்தியதோ,அவரின் செயல்பாடுகளை மையப்படுத்தியதோ,அல்லது அவரின் இனிய வார்த்தைகளை மையப்படுத்தியதோ அல்ல".... இவற்றையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பூசாரிகளுக்கே தங்களின் செயல்பாடுகளில் ஐயம் வந்து விட்டால் பக்தர்களை யார்தான் காப்பாற்றுவது? இத்தனை முரண்பாடுகளையும் தாண்டி " மனிதன் விழாதிருக்கவே திருவிழா" என்ற வரி என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் ஒன்று மட்டும் எனக்கு விளங்க வில்லை...மிக அண்மையில் இந்த சலேத்மாதா பங்கைச்சேர்ந்த ஒரு இளங்குருவும், பங்குப் பேரவையைச் சேர்ந்த மூண்று முக்கியப்புள்ளிகளும் இறந்து போன நிலையிலும் எந்த வருடமும் போலவே இந்த வருடமும் முழுகோலாகலத்துடன் திருவிழா நடந்து முடிந்த தென்றால் " எது எப்படியாயினும் கடவுளும்,காலமும் அவரவர் போக்கில் போய்க்கொண்டிருக்கிறார்கள் " என்றுதானே அர்த்தம்!? எதுவுமே விளங்க வில்லை. தந்தையின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்!!!
    பல கடமையைக்கூட முழு

    ReplyDelete