Wednesday, August 24, 2016

யோனா - 8

நினிவே மக்களின் மனமாற்றம் கடவுளுக்குப் பிடித்தது.

ஆனால், கடவுளின் மனமாற்றம் யோனாவுக்குப் பிடிக்கவில்லை.

யோனாவின் முறையீடு ஒரு குழந்தையின் முறையீடுபோல இருக்கிறது:

'ஆண்டவரே, நான் ஊரைவிட்டுப் புறப்படுமுன்பே இதைத்தானே சொன்னேன்?
இதை முன்னிட்டே நான் தர்சீசுக்கு ஓடிப்போக முயன்றேன்.
நீர் கனிவு மிக்கவர். இரக்கமுள்ளவர்.
மிகுந்த பொறுமையும் அளவிலா அன்பும் உள்ள கடவுள் என்பது எனக்குத் தெரியும்.
அழிக்க நினைப்பீர். பிறகு, உம் மனத்தை மாற்றிக்கொள்வீர் என்பதும் எனக்கு அப்போதே தெரியும்!'

... ... ...

யோனா சிறந்த ஆன்மீகம் கொண்டவர்.

வெறும் பக்தி மட்டும் இருந்திருந்தால் கடவுள் சொன்னதையெல்லாம் கேட்டு தலையாட்டிக் கொண்டிருப்பார்.

ஆனால், ஆன்மீகம் கொண்டிருந்தால் மட்டுமே கடவுளையும் எதிர்த்துப் பேச முடியும்.

பக்தி இருக்கின்ற இடத்தில் பிளவு இருக்கும். அதாவது, கோவிலுக்குள் ஒரு வாழ்வு, கோவிலுக்கு வெளியே ஒரு வாழ்வு என்று வாழ்வு பிளவுபட்டு இருக்கும்.

ஆன்மீகத்தில் அப்படியில்லை. எல்லா இடத்திலும் ஒரே மாதிரி இருக்கும் வாழ்க்கை.

ஆன்மீகத்தில் சிறந்தவர் மட்டுமே கடவுளுக்கு தூரமாக நின்று கடவுளையும் கேள்வி கேட்க முடியும்.

யோனாவுக்கு இறை அனுபவம் நிறையவே இருந்திருக்கின்றது.

ஆனால்,

தொடர்ந்து, 'என் உயிரை எடுத்துக் கொள்ளும். வாழ்வதை விட சாவதே எனக்கு நல்லது' என்று யோனா சொல்வதுதான் நமக்கு ஏற்புடையதாக இல்லை.

அருள்பணி நிலையில் இந்த சோதனை அடிக்கடி வரும்.

கிணறு காய்ந்து போகும் போது, ஊற்றுக்கள் சுரக்காத போது இப்படியான ஏக்கம் எழும்.

அருள்பணி நிலையில் ஒரு பணியிடத்திற்குச் செல்லும்போது நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்ற நிலையில்தான் எதார்த்தம் இருக்கும்.

அந்த நேரங்களில், என் மனநிலை என்ன?

பக்தியிலிருந்து ஆன்மீகத்திற்கு இன்று நம்மை அழைக்கின்றார் யோனா.

2 comments:

  1. மனத்தின் ஏக்கங்களையும், தாக்கங்களையும் வெளிப்படுத்தும் ஒரு பதிவு. யோனாவின் வழியே மிக அழகான விஷயங்களை வெளிக்கொணருகிறார் தந்தை.பக்திக்கும்,ஆன்மீகத்துக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எத்தனை உண்மையாக உணரமுடிகிறது!.இறைவனை சாடுவது போல் இறைவனின் இரக்கத்தை எடுத்துரைக்கும் யோனாவின் வார்த்தைகள் " வஞ்சப்புகழ்ச்சி அணிக்கு" உதாரணம்.இவை அழகானவை மட்டுமல்ல; நேர்மையானவையும் கூட."பக்தி இருக்கும் இடத்தில் பிளவு இருக்கும்; ஆன்மீகத்தில் சிறந்தவர் மட்டுமே தூர நின்று கடவுளை கேள்வி கேட்க முடியும்,".. தந்தையின் அனுபவம் பேசுகிறது.தன் நிலை குறித்துப் புலம்பும் யோனாவின் இடத்தில் ஒரு அருட்பணியாளரை வைத்துப்பார்க்கும் தந்தை" கிணறு காய்ந்து போகும்போதும்,ஊற்றுக்கள் சுரக்காதபோதும் வரும் ஏக்கங்கள் பற்றிப் பேசுவது கொஞ்சம் மனதைப் பிசைந்திடினும் "இவையெல்லாம் எல்லோருக்கும் உள்ளது தானே!" என நினைக்காமலும் இருக்க முடியவில்லை.இறைவனை நோக்கி வேண்டுதல் செய்யும் ஒரு பக்தனாக இருப்பதை விட அவரைக் கேள்வி கேட்கும் ஒரு 'ஆன்மீகவாதியாக' மாற மறைமுகமாக அழைப்பு விடுக்கும் தந்தையை எத்துணை பாராட்டினாலும் தகும்!!!

    ReplyDelete
  2. GITANJALI A BERNARD
    New York

    You write ​so eloquently about ​the intriguing reaction​s​ of Jonah in today's segment​.

    ​The passage, ​Chapter 3: 10 to Chapter 4: 1-4​,​ explains the conversion of the city's ​inhabitants.

    When God feels compassion ​over His people ​and changes His mind, what must be the ​response?

    ​His Prophet​s​ must be rejoicing​ - right?​
    H​is Priests​ must be celebrating.
    As Jesus would say: "There is more rejoicing in heaven over one sinner repenting..."​

    Instead, ​God's servant feels "displeased" and ​"​becomes greatly angry" [Jonah 4:1]​ in Nineveh​.

    He elaborates his frustration into a conversation with God - a pretty long prayer.

    It almost feels like Jonah is unhappy that ​God does not destroy the ​Ninevites ​wholesale.

    And if all of Nineveh is destroyed, where would Jonah alone escape, anyway?
    Has he booked his return ticket already?​

    The Parish needs a Mission.
    The Franciscans ​have begun to ​preach​.
    The parishioners are beginning to change their lives.​
    And the Parish Priest is "displeased" and "becomes angry"​...

    The Diocese's spiritual status needs a renaissance.
    A reformation, renewal, rebirth in the Lord​ - that is what is urgently required.​
    The Carmelite Fathers spend 12 days of ​special liturgies, ​conferences, individual conversations and personal counseling with the clergy.
    And finally, the Bishop feels "upset, goes out and sits down at a place east of the Bishop's House.

    The global Church needs a return to the Gospel of the Lord - in truth and justice and love.
    Away from the cultural accretions, ethnic shallowness, pietistic distractions, and unchristian accommodations.
    The Sprit of the Lord breathes fresh winds within the Church.
    Yet quite many Jonahs are "displeased" and "utterly angry"...




    GITANJALI A BERNARD, New York​











    --

    ReplyDelete