Saturday, January 31, 2015

நாம யார மாதிரி பேசுறோம்?

நாளைக்கு நாம வாசிக்கப் போற நற்செய்திப் பகுதியைப் பத்தி இன்னைக்கு எழுதலாம்.

மாற்கு நற்செய்தியாளர் எழுதியபடி இயேசுவின் பணித்தொடக்கத்தைப் பற்றி தான் வாசிக்கிறோம் (காண்க. மாற்கு 1:21-28).

'காலம் நிறைவேறி விட்டது. இறையரசு நெருங்கி வந்துவிட்டது. மனம் மாறுங்கள். நற்செய்தியை நம்புங்கள்' (மாற்கு 1:15) என போன வாரம் போதித்த இயேசு இன்று ஒரு செபக்கூடத்தில் போதிக்கிறார். நல்லா வாசிக்கணும். 'செபக்கூட்டத்தில்' அப்படின்னு ஒரு எழுத்து சேர்த்துப் போட்டா நம்ம உமா சங்கர் பிரச்சினைக்கு வந்துடுவோம்.

என்ன போதிச்சார் அப்படிங்கிறத பற்றி மாற்கு நற்செய்தியாளர் ஒன்னும் எழுதல. லூக்கா நற்செய்தியாளர் எசாயா எழுதிய இறைவாக்கை இயேசு போதித்ததாக எழுதுகிறார். மாற்கு நற்செய்தியில என்ன சிறப்புனா செபக்கூடத்துல இருந்த பேய் பிடிச்ச மனிதர் ஒருத்தர், 'நீ யாருன்னு எங்களுக்குத் தெரியும்!' அப்படின்னு சத்தம் போடுது.

நான் எல்லீஸ் நகர்ல இருந்தப்ப பேய் பிடிச்சுருக்கு அப்படின்னு ஒரு பொண்ணைக் கொண்டு வந்தாங்க. அந்த பொண்ணு மாப்பாளையம் மகளிர் மேனிலைப்பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்தது. அது ஒரு செவ்வாய்க்கிழமை. செபஸ்தியார் பேயை ஓட்டுவார் அப்படிங்கிற நம்பிக்கயில தான் கூட்டிட்டு வந்திருந்தாங்க. பெரிய ஃபாதர் இல்லாததுனால நம்மகிட்ட தான் வந்தது கூட்டம். அது என்னமோ நெருக்கடி நேரங்களில் எல்லாம் இந்த பெரிய ஃபாதர்கள் எங்கயாவது போயிடுவாங்க. வேகமாக போய் அங்கியை மாட்டிக் கொண்டு வந்து 'எப்படியாவது இந்தப் பேயை ஓட்டிடனும்!' அப்படின்னு யோசிக்கிட்டே இருந்தேன். அப்ப ஃபாதர் ஆன புதுசா. எல்லாத்தையும் செஞ்சு பாத்துடனும் அப்படின்னு தான் அந்த நேரத்துல தோணும். 'கோவிலுக்குள் கூட்டிட்டு போங்க!' அப்படின்னு சொன்னவுடன், அந்தப் பொண்ணு திடீர்னு ஆம்பள குரலில் பேச ஆரம்பிச்சுடுச்சு. 'எனக்கே பயமாயிடுச்சு!' 'பேய் இருக்கா இல்லையா!' அப்படிங்கிற சந்திரமுகி கேள்விக்கெல்லாம் அங்க இடமில்லை. சம்திங் அப்நார்மல் கண் முன்னா நடக்குது. அந்தப் பொண்ணு ஆம்பள குரலில் பேசினதோட மட்டுமல்லாமல், 'டேய்! கையை விடுடா! நீ ரொம்ப யோக்கியமா! நீ யாருன்னு எனக்குத் தெரியும்!' அப்படின்னு கையைப் பிடிச்ச ஒருவரைப் பார்த்து கத்த ஆரம்பித்து. எனக்கு உள்ளுக்குள் பயம். இந்தப் பேய் நம்மள பத்தின எல்லாத்தையும் சொல்லிப்புடுமோனு! இருந்தாலும் அந்தப் பொண்ணைப் பார்த்து லைட்டா சிரிச்சேன். ஆனா எந்த ரியாக்சனும் இல்ல. 'சரி! இந்தப் பேயும் நல்லவ போலதான்!' அப்படின்னு நினைச்சுகிட்டேன். அந்தக் கொஞ்ச நேரத்துல பெரிய ஃபாதர் வந்துட்டார். கூட்டம் எல்லாம் அவர்கிட்ட போயிடுச்சு. 'அப்பாடா!' அப்படின்னு வந்து ஆதித்யா டிவி பார்த்தேன்.

'நீ யாரை மாதிரினு தெரியுமா?' அப்படின்னு நாளைய நற்செய்தியில பேயும் கேட்குது. கப்பர்நாகூம் மனிதர்களும் கேட்கிறார்கள்.

'நீ கடவுளின் தூயவர்!' அப்படின்னு சொல்லுது பேய்.

'நீ மறைநூல் அறிஞரைவிட பெரியவர்!' அப்படின்னு சொல்றாங்க மக்கள்.

'மேலிருந்து' அடையாளம் சொல்லுது பேய்.

'கீழிருந்து' அடையாளம் சொல்றாங்க மக்கள்.

இரண்டு பேர் பேசுறதையும் இயேசு சீரியசா எடுத்துக்கொள்ளல. ஆனா, பேயை மட்டும் கடிந்து கொள்கிறார்.

'என்ன அழகா பேசுறாரு பாருங்க! இப்படிப் பேசி நான் கேட்டதில்லை!' என்கிறார் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும்.

ஆக. என்ன பேசுறார் அப்படிங்கிறத பத்தி ஒன்னும் இல்ல. ஆனா, எப்படிப் பேசுறார் அப்படிங்கிறத பத்தி தான் பேசுறாங்க.

இன்னைக்கு நம்ம பெருமாள் முருகனுக்கோ, உமா சங்கருக்கோ, தகவல் துறை அமைச்சருக்கோ என்ன பிரச்சனை? அவங்க என்ன பேசுறாங்க அப்படிங்கிறத விட எப்படிப் பேசுறாங்க அப்படிங்கிறத வச்சி தான்.

நம்மிடம் இருக்கும் சொல், செயல், பழக்கம் அனைத்தும் மற்றவரிடமிருந்து நாம கத்துக்கிட்டதுதான்.

இன்னைக்கு நாம யார மாதிரி பேசுறோம்?

இது குரலின் தன்மையை ஆராய்ச்சி செய்யும் கேள்வி அல்ல. மாறாக, நாம யார மாதிரி பேசுறோமோ அவங்கள மாதிரிதான் அந்தப் பேச்சோட உள்பொருளும் இருக்கும்.

'அவன் அங்க அப்பா மாதிரியே கெட்ட வார்த்தை பேசுறான்!' அப்படின்னு யாரையாவது பார்த்துச் சொல்றாங்கன்னா, அந்த மகன் அந்த அப்பாவிடமிருந்து அதை உள்வாங்கி இருக்கிறான் என்று அர்த்தம்.

நாம ஃபோன்ல பேசும்போது கூட நம்ம ஃப்ரண்ட்ஸ் ஒரு சில நேரம் சொல்லியிருப்பாங்க:

'இப்படித்தான் ஃபாதர் எங்க வீட்டுக்காரரும் சொல்வார்!'

அல்லது

'இப்படித்தான் ஃபாதர் எங்க வீட்டுக்காரரும் சொல்வார்!'

ஒரு சில நேரங்களில் நாம் நம்மையறியாமலேயே மற்றவர்கள் போல பேசுகிறோம். அல்லது நாம் பேசும் போது அந்தப் பேச்சில் அவர்கள் அதற்கு முன்னால் தங்கள் வாழ்வில் சந்தித்த ஒருவரை அடையாளப்படுத்திப் பார்க்கின்றனர்.

ஒரு பப்ளிங் மீட்டிங் நடக்குதுன்னு வைங்க. அங்க ஒரு ஆண் பேசுனா, முதலில் மக்கள் அவர் என்ன பேசுறார்னு கேட்பாங்க. அது பிடிச்சதுன்னா தான் அவர் எப்படி இருக்கிறார் அப்படின்னு பார்ப்பாங்க. அதே இடத்துல ஒரு பெண் பேசுனா, முதலில் மக்கள் அவர் எப்படி இருக்கிறார்னு பார்ப்பாங்க. அவங்க பார்க்குறது அவங்களுக்கு பிடிச்சதுன்னா தான் அவர் என்ன பேசுகிறார் அப்படின்னு கேட்பாங்க.

இயேசு பேசுறது ஏன் மக்களுக்குப் பிடிச்சது தெரியுமா?

அவர் சொல்றது மாதிரியே நடந்தது. 'ச்சுப்!' அப்படின்னு அதட்டுறார். பேய் அமைதியாகுது. 'வெளியே போ!' அப்படிங்கிறார் போயிடுது. இதுதான் வார்த்தைக்கு அவசியம்.

'மாற்றத்தை ஏற்படுத்தாத எந்த வார்த்தையும் வீண்!' அப்படின்னு சொல்வார் சேகுவேரா.

நாம சொல்றது அப்படியே நடக்கனும்னா, நாம முதலில் நடக்குறது மட்டும் சொல்லப் பழகனும்.

'அதிக கோபப்படும்போது முடிவு எடுக்காத! அதிக மகிழ்ச்சியா இருக்கும் போது ப்ராமிஸ் பண்ணாத!' அப்படின்னு சொல்வாங்க.

வருடம் பிறந்து ஒரு மாசம் ஆயிடுச்சு. போன ஒன்னாந் தேதி எடுத்த ஐந்து வாக்குறுதகளில் மூணு தான் நினைவிற்கு வருகிறது. 'உங்க வாழ்க்கையின் கவலைகள் எல்லாம் உங்கள் புத்தாண்டு வாக்குறுதிகள் போல சீக்கிரம் மறைந்து போகட்டும்' அப்படின்னு இத்தாலியன் ல ஒரு பழமொழி கூட இருக்கு.

நாளைக்கு ஒன்னாந் தேதி.

நடக்குற வார்த்தைய நான் சொல்றேனா? நான் சொல்றபடி நடக்குறேனா?

நாம யார மாதிரி பேசுறோம்?



4 comments:

  1. நானும்கூட பேய்கள் ஓட்டப்படுவதை நடுக்கத்துடன் பார்த்திருக்கிறேன்.அற்ப ஆயுசில் அகாலமரணமடைந்தவர்கள் தங்களின் நிறைவேறா ஆசையைத்தீர்த்துக்கொள்ள யாருடைய உடம்பிலாவது நுழைவார்களாம். இன்று இந்தப் பதிவில் என்னைக் கவர்ந்தது பேயை ஓட்டுகையில் இயேசுவின் குரலில் இருக்கும் அதிகாரத்தொனி. அவரிடம் இருந்த 'பரிசுத்தமே' அதற்குக் காரணம். " சொல்லிற் சொல்க பயனுள" எனும் குரளுக்கேற்ப," என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாக இருக்கட்டும்" எனும் திருப்பாடலுக்கேற்ப நாம் சொல்லும் சொற்கள் உண்மையானவையாய் இருப்பின் நாம் கூட இயேசுவின் அதிகாரத்துடன் எதையும் சாதிக்க இயலும். இன்றையப் பதிவை இத்துணை எளிமைப்படுத்தி ' கொலோக்கிய' நடையில் தந்த தந்தைக்கு என, பாராட்டுக்கள்.புலர்ந்திருக்கும் புதுத் திங்கள் அனைவருக்கும் உடல்,உள்ள சுகத்தைத் தரட்டும்!

    ReplyDelete
  2. Anonymous2/01/2015

    Yesu Reflection is good. Yesu i was listening to Asirvatham TV. A pastor was preaching as if that he sees god face to face. he went to Thirupur for a preaching it seems. he stayed in a hotel. he did not know what to preach. so he knelt down and prayed it seems. Immediately God appeared to him and stayed with him and told him all that he had to preach the following day. what do you feel about this. he sees god everyday it seeds. write something about this.

    ReplyDelete
  3. Dear IAS, thanks for stating the problem. It has been intriguing to me as well. Will respond to it soon. You also can suggest me your answer. Good day. Love. Wish you a happy week ahead. Whenever I think of you I thank my God.

    ReplyDelete