Thursday, January 29, 2015

பசங்களும் பொசசிவ் தான்

ஒரு துணிக்கடைக்கு துணி எடுக்கப் போறோம்னு வைங்க. சரியா சொல்லணும்னா சேலை எடுக்கப் போறோம். கடைக்காரரோ அங்க வேலைக்கு இருக்குறவரோ நிறைய சேலையை நம்ம முன்னால அடுக்கி வைக்கிறார். அப்புறம் ஒன்னொன்னா விரிச்சு காட்டுறார். நாமளும் பாத்துகிட்டே இருக்கோம். ஒன்னும் நமக்குப் பிடிக்கிற மாதிரி தெரியல. அந்த நேரம் நம்ம பக்கத்துல ஒரு பொண்ணு வந்து நின்னுகிட்டு நாம எடுக்கிற சேலையைப் பார்த்துகிட்டே இருக்கு. பார்த்துகிட்டே இருந்தவங்க டக்குனு ஒன்னை எடுத்துக் காட்டி அவங்க கூட வந்தவங்ககிட்ட, 'இங்க பாரேன்! என்ன அழகாக இருக்கு! இதமாதிரி தான் நான் எடுக்கணும்னு நினைச்சேன்!' அப்படின்னு சொல்றாங்கன்னு வையுங்க. உடனடியே நாமளும், 'இல்லமா! இத நான் ஏற்கனவே எடுத்துட்டேன்!' என்று வேகமாகப் பிடுங்கிக் கொள்வோம்.

அடுத்தவங்க பார்வையில நல்லதுன்னு பட்டாதான் நமக்கே சில நேரம் இது நல்லா இருக்குணு தெரியுது.

இந்த உலகம் நம்ம கிட்ட ஆயிரம் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் நம்மிடம் இல்லாத ஒன்றைத் தான் சுட்டிக் காட்டுகிறது.

பரீட்சை எழுதுறோம். 9.8 மார்க் வாங்கினாலும் மனசு வாங்கிய 9.8 ஐ பற்றிக் கவலைப்படாமல், வராத 0.2 ஐ பற்றித்தான் கவலைப்படுகிறது. பக்கத்துல இருக்குறவன் 9.7 வாங்கினால் நம்மையறியாமல் ஒரு சந்தோஷம் பற்றிக் கொள்கிறது.

சரி! இதுக்கும் பசங்க பொசசிவ் அப்படின்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?

'பொசஸ்' அப்படிங்கிற ஆங்கில வார்த்தை எதில் தொடங்கியிருக்க வேண்டும்? 'பொடன்ஸ்' - அதாவது, பவர், அதிகாரம், ஆற்றல். ஒன்றின் மேல் நமக்கு அதிகாரம் இருக்கும் போதுதான் அதை நம்முடைய பொசசன் என்று சொல்கிறோம். எனக்கு ஆரப்பாளையம் பக்கத்துல ரெண்டு சென்ட் இடம் இருக்குனு வச்சிக்குவோம். அங்க நான் என்னோட காரை நிறுத்துவதற்கும், மற்ற கார் அங்கே நிற்கக் கூடாது என்ற சொல்வதற்கும் அதிகாரம் இருக்கு. ஏன்னா அது என்னோட 'பொசஷன்'.
நாம் ஒருவர் மற்றவரோடு பழகத் தொடங்கும் போதே அவர் மீதான அதிகார வட்டம் வளர்ந்து கொண்டே போகிறது. அதிகார வட்டம் வளர வளர அவரின் மேல் நமக்கிருக்கும் உரிமையும் வளர்கிறது.

இன்னைக்குப் புதுசா ஒருத்தரை பஸ்ல பார்க்கிறோம்னு வைங்க. முதலில் அவர் பெயரைக் கேட்கிறோம். பின் ஊரைக் கேட்கிறோம். அடிக்கடி பார்க்க நேர்ந்தால் ஃபோன் நம்பர் வாங்குறோம். பின் பேசுறோம். அப்புறம் ஒருநாள் வீட்டுக்குப் போறோம். சாப்பிடுறோம். பழகுறோம். பரிசளிக்கிறோம். நல்லது கெட்டதுகளில் பங்கேற்கிறோம்.

முதன்முதலில் அவரி;ன் பெயரைக் கேட்ட அன்று இருந்த உரிமைக்கும், இன்று இருக்கும் உரிமைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஆக, நமக்கு இன்று அவர்மேல் ஒருவகையான அதிகாரமும் வந்து விடுகிறது. 'இவர் என்னவர்' என்ற பெருமையும் வந்து விடுகிறது.

இப்ப அவர் வாழ்க்கைக்குள் இன்னொருத்தர் வர்றாருன்னு வச்சிக்கிவோம். அவருக்கும், இவருக்கும் உள்ள உரிமை வட்டம் நம் வட்டம் போலவே அதிகமாகும். இப்போ, இவர் நம்ம கூட இருக்கும் நிலையிலிருந்து மற்றவரோடு செல்ல ஆரம்பிக்கிறார் என வைத்துக் கொள்வோம். இவருக்கும் நமக்கும் உள்ள தொலைவு குறைகிறது. அதுபோல நம் அதிகாரமும் தொலைகிறது. இதைத் தக்க வைத்துக்கொள்ள நாம் சின்ன சின்ன சைக்கலாஜிகல் கேமும் விளையாடுகிறோம். 'உனக்கு நான் முக்கியமா? அவன் முக்கியமா?' 'அவன் நேத்து வந்தவன்! நான் ரொம்ப நாளாவே இருக்கேன்!' 'பழகப் பழகப் பாலும் புளிக்கும்!' 'நான் உனக்கு போரடிச்சிட்டேன்ல!' - இப்படி வார்த்தைகள் வர ஆரம்பித்துவிட்டனவென்றால் அங்கே 'பொசசிவ்னஸ்' இருக்கிறது என்று கண்டுகொள்ளலாம்.

இது ஆணுக்கு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

வழக்கமா நான் பெண்ணுக்குதான் அதிகம் என்று நினைத்தேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக என் எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்.

தன்னுடன் பேசும் ஒரு பையன் இன்னொரு பெண்ணுடன் பேசுகிறான் என வைத்துக்கொள்வோம் அந்தப் பெண் அதைப்பற்றி இந்தப் பையனிடம் தான் சண்டை போடுவாள்.

ஆனால், தன்னிடம் பேசும் ஒரு பொண்ணு மற்றொரு பையனுடன் பேசுகிறான் என வைத்துக்கொள்வோம். அந்தப் பையன் இதைப்பற்றி அந்தப் பெண்ணிடம் சண்டை போட மாட்டான். மாறாக, அந்தப் பையனைத் தேடிப் போய் சண்டை போடுவான். சண்டை போட முடியாத போது அந்தக் கோபத்தை இந்தப் பெண்ணிடமிருந்து விலகி நிற்பதில் காட்டுவான். வார்த்தையால் காயப்படுத்துவான். அவளின் செயல்களை உதாசீனப்படுத்துவான். கண்டுகொள்ளாமல் இருப்பான்.

இப்படி ஒரு டிஃபிகல்ட் சிட்டுவேஷன் தான் நம்ம மாதொருபாகன் கதாநாயகன் காளிக்கு வருகிறது. நம்ம காதலி, மனைவி பொன்னாளை இன்னொருவர் தழுவுவதா என்ற எண்ணமே தன் மனைவியடமிருந்து விலக்கி விடுகிறது.

'பதினான்காம் திருநாளுக்குப் போகிறாயா? அங்கு வரும் சாமியோடு உறவு கொள்வாயா?' என்று கேட்கிறான் காளி.

'நீங்க போகச் சொன்னா போறேன்!' என்கிறாள் பொன்னா.

'குழந்தையா முக்கியம்! நீங்கதான் எனக்கு முக்கியம்' என்று சொல்வாள் பொன்னா என நினைக்கிறான் காளி.

'அவமானம் களைவதற்காக இப்படியும் செய்யலாம் என நினைத்தேன்' என தனக்குள் சொல்லிக் கொள்கிறாள் பொன்னா.

'போ என்றால் யார்கூடயும் போவாளோ!' என நினைக்கத் தொடங்குகிறான் காளி.

இந்த நாவலில் வரும் காளியின் நடவடிக்கையைப் பார்த்தால் ஆண்களுக்குதான் பொசசிவ்னஸ் அதிகம் என்று தோன்றுகிறது.

இது நல்லதா? கெட்டதா?


5 comments:

  1. உறவுகளில்...உணர்ச்சிகளில் ஆண்- பெண்ணிடையே பேதம் உள்ளதா என்று தெரியவில்லை.அதை வெளிப்படுத்தும் வித்த்தில் வேண்டுமானால் இருக்கலாம்.'பொச்சிவ்னஸ்'...எந்த ஒரு உறவும் பலப்படுவதற்குத் தேவைதான் இந்த உண்ர்வு அது ஒருவர் மற்றொருவ்ரைக் காயப்படுத்தாத வரை.இந்த ' பொச்சிவ்னஸ்' இல்லாத காரணத்தால்தான் இன்று பல உறவுகள் அஸ்திவாரத்திலேயே ஆட்டம் காண்கின்றன." மாதொருபாகனில்" வரும் காளி- பொன்னத்தா இடையேயான உணர்ச்சிப் போராட்டம் கூட 'பொச்சிவ்னஸின்' உச்சம்தான்.தந்தையின் ஆராய்ச்சிப்படி இது யாருக்கு அதிகம்? அது நல்லதா? கெட்டதா?.... சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்!!??....

    ReplyDelete
  2. Anonymous1/30/2015

    Good reflection yesu.

    ReplyDelete
  3. Dear IAS, Thanks a lot for your visit to my blog. Thanks for your comments. God bless us.

    ReplyDelete
  4. Dear Fr.Yesu,very excellent.If our possessive is for good purpose it is good.If our possessive is for bad purpose it is bad.
    But my suggestion is let it be for good purpose and common purpose as Jesus had without hurting others.

    எல்லார் மேலேயும் எல்லாருக்கும் உரிமை உண்டு.
    யார் மேலேயும் யாருக்கும் உரிமை இல்லை. ஆனால்,அன்பு செய்ய எல்லர்ருக்கும் உரிமை உண்டு. தல வாழ்த்துக்கள்.

    ReplyDelete