நம்ம இதயத்துல இருந்து வர்ற வார்த்தைகள் தாம் மத்தவங்களத் தொடும் அப்படின்னு சொல்வாங்க.
இன்னைக்கு நம்மள சுத்தி நிறைய வார்த்தைகள் தாம் இருக்கு.
எங்க பார்த்தாலும் வார்த்தைகள் கொட்டிக் கிடக்கு. நாம பார்க்குறதும் வார்த்தைகள் தாம். கேட்குறதும் வார்த்தைகள் தாம்.
நம்மள சுத்தி நாம பார்க்கிற விளம்பரம், டிவி நியூஸ், ஜன்னல திறந்தா பக்கத்து வீட்டுல இருந்து நம்ம காதுல வந்து விழும் வார்த்தைகள், செய்தித்தாள், ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப்...என எங்கும் வார்த்தைகள் தாம்.
ஒரு நாள் முடியப் போகும்போது நாம பார்த்த அல்லது நாம கேட்ட இத்தனை வார்த்தைகளில் எத்தனை தான் நம்ம மனசுல நிக்குது அப்படின்னா பார்த்தா ஏதோ ஒன்றிரண்டு தாம்.
அப்படின்னா நம்மள வந்தடையற வார்த்தைகள் ஏன் வீணாய்ப் போகின்றன? அல்லது வீணான அந்த வார்த்தைகளுக்கு நாம ஏன் நம்முடைய எனர்ஜியைக் கொடுக்கிறோம்?
மணிக்கணக்கா பேசிட்டு ஃபோன வச்சாலும் பேசுன எந்த வார்த்தையும் சில நேரங்களில் நம்மைத் தொடுவதில்லை. இரண்டு நிமிடங்கள் பேசினாலும் சில வார்த்தைகள் நம்மை ரொம்பவே ஆழமாகப் பாதித்து விடுகின்றன.
இன்னைக்கு திமோத்தேயு, தீத்து விழாவைக் கொண்டாடினோம்.
இன்று முதல் வாசகம் வாசிக்கும் போது (2 திமொத்தேயு 1:1-8) - அடிக்கடி கேட்ட வாசகம் தான் - தூய பவுல் வெறும் வார்த்தைகளை மட்டும் உபயோகிக்காமல் தன் உள்ளத்தையே அப்படியே பிட்டு வைப்பதாக இருந்தது.
நம்ம எவ்வளவு பெரிய சிந்தனையாளராக இருந்தாலும், நம்ம கடவுள்ல ஊன்றி நிற்கலன்னா, நாம பேசற எல்லா வார்த்தைகளும் ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதை மிக அழகாகச் சொல்கிறார் பவுல்.
வெறும் எட்டு வசனங்களில் தன் அன்பை அப்படியே அள்ளிக் கொட்டுகிறார்.
என்ன திமொத்தேயுவுக்கும், பவுலுக்கும் பத்து வயசுதான் வித்தியாசம் இருக்கும். 'என் அன்பார்ந்த பிள்ளையே!' என்று அள்ளி எடுக்கின்றார். அவர் பெற்ற கடவுள் நம்பிக்கையை நினைவுபடுத்துகிறார். அவரைக் காண ஏங்குகிறார். இருந்தாலும் வேலையில் கருத்தாக இருக்கின்றார். 'கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தைத் தரவில்லை!' ...ஆகையினால் சியர் அப் என்கிறார்.
இன்னைக்கு நான் நினைச்சதெல்லாம் இதுதான். நான் பேசுற வார்த்தை இதயத்தில இருந்து வந்தாதான் மற்றவர்கள் மேல் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.
இதென்ன பெரிய கண்டுபிடிப்பா! அப்படின்னு சொல்லாதீங்க!
உங்க மைன்ட் வாய்ஸ் இங்க கேட்குது!

எனக்கு மிக மிக நெருக்கமான பகுதி இன்றையது.திமோத்தேயுவின் உறவினர் பற்றி தூய பவுல் பேசுகையில் ஏதோ நம் உறவினர் மத்தியில் நாமிருப்பதைப் பேன்ற ஒரு உணர்வைக் கொடுக்கும் பகுதி.தந்தையின் வார்த்தைகளில் அவர் திமோத்தேயுவை " என் அன்பார்ந்த பிள்ளையே!" என விளிக்கையில் நாமும் அந்த அப்பழுக்கற்ற வாஞ்சையைஉணர முடிகிறது.உண்மைதான்..இன்று வார்த்தைகளின் ஒலிக்கு கிடைக்கும் முக்கியத்துவம் அவை கொண்டுவரும் உணர்வுக்குக் கிடைப்பதில்லை.உண்மையான 'வாஞ்சையுடன்' கூடிய அன்பும் மதிக்கப்படுவதில்லை.அதற்காக நாம் மாற வேண்டுமா என்ன? தேவையில்லை.கடவுளை சாட்சியாக வைத்துப் பேசப்படும் எந்த வார்த்தையும் ஒருநாள் உணர்ந்து கொள்ளப்படும் என்ற தூய பவுலின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்துக் காத்திருப்போம்......
ReplyDeleteVery good yesu. Let me mind my words. Thanks
ReplyDeleteAmen!
ReplyDelete