Monday, March 30, 2015

யாரும் ஏறாத கழுதை!

நேப்பிள்ஸ் நகர்வாழ் இலங்கைத் தமிழர்களோடு இணைந்து குருத்து ஞாயிறு கொண்டாடும் வாய்ப்பு கிடைத்தது இன்று. நீண்ட நாளைக்குப் பின் இத்தாலிய நாட்டில் தமிழ்த்திருப்பலி வைக்கும் வாய்ப்பாக இருந்ததால்இ திருப்பலியின் போது நான் பணிசெய்த எல்லீஸ்நகர்இ ஞானஒளிவுபுரம்இ தேனி பங்குத்தளங்களும்இ பங்கு மக்களும் நினைவில் வந்து போனார்கள். இந்த ஒரு அனுபவத்திற்காகவே என் உள்ளமெல்லாம் ஊருக்குத் திரும்பத் துடிக்கிறது.

'யாரும் ஏறாத கழுதை!'

கழுதையைப் பற்றிய இந்தக் குறிப்பை மையமாக வைத்துதான் இன்று மறையுரையாற்றினேன்.

இயேசு பயணம் செய்தது புத்தம் புது கழுதை.

மத்தேயு நற்செய்தியாளர் மட்டும் இந்தக் குறிப்பை வேறு வார்த்தைகளில் சொல்கிறார். அதாவதுஇ 'குட்டியை அதன் தாயோடு கட்டியிருக்கக் காண்பீர்கள்!' - ஆகஇ தாயைவிட்டு இன்னும் பிரியாத ரொம்பக் குட்டிக் கழுதை.

'குட்டியா இருந்தா கழுதைகூட அழகாதான் இருக்கும்னு!' நம்ம ஊர்ல சொலவடை சொல்வாங்க.

ஆகஇ இயேசு பயணம் செய்தது ஒரு சின்னஇ குட்டியானஇ அழகானஇ இளம் கழுதை. யாரும் ஏறாத கழுதை.

இந்த மாதிரி வாய்ப்பு நமக்குக் கிடைச்சிருக்கா?

யாரும் பயன்படுத்தாத செல்ஃபோன்.
யாரும் ஓட்டாத பைக்.

யாரும் குடியிருக்காத வீடு.

யாரும் பயன்படுத்தாத புத்தகம்.

யாரும் திறக்காத ஒயின் பாட்டில்.

யாரும் பயன்படுத்தாத கம்ப்யூட்டர்.

யாரும் பயன்படுத்தாத டவல்.

யாரும் பயன்படுத்தாத பெட்ஷீட்.

யாரும் பயன்படுத்தாத சோப்பு.

யாரும் ஏறாத கழுதையின் அர்த்தம் என்னன்னா?

அந்தக் கழுதை முழுக்க முழுக்க இயேசுவுக்காக மட்டுமே காத்திருந்தது.

கடவுளின் பராமரிப்பு இதுதான். அவருடைய பராமரிப்பில் 'அடுத்தவர் பயன்படுத்தியது போக மற்றது உனக்கு!' என்ற சித்தாந்தமே கிடையாது. நம்ம ஒவ்வொருவருக்கும் ஒரு பயன்படுத்தாத கழுதைஇ நமக்குன்னு என்று மட்டும் நிறைய நல்ல விஷயங்களை அவர் கொடுக்கவே செய்கிறார்.

இதைக் கண்டுபிடிக்கிறது ரொம்ப முக்கியமான ஒன்று.

'போய் இந்த மாதிரி ஒரு கழுதையை அழைத்து வாருங்க!' அப்படின்னு இயேசு தன் சீடர்களிடம் சொன்னபோது அவர்கள் ரொம்ப ஆச்சர்யமாகத்தான் பார்த்திருப்பார்கள். 'இப்படி ஒரு கழுதையை எங்க போயி தேடுறது!' அப்படின்னு கூட நினைச்சிருப்பாங்க. ஆனாஇ இயேசு உறுதியாக இருந்தார்.

இதுல இன்னொரு விஷயம்.

நமக்குன்னு நடக்குறது எப்படியா இருந்தாலும் நடக்கும்!

'எந்த அரிசியில நம்ம பேரு எழுதியிருக்கோ அந்த அரிசிதான் நம்ம தட்டுக்கு சோறா வரும்!' அப்படின்னு எங்க அம்மா அடிக்கடி சொல்வாங்க.

ஆகஇ நமக்குன்னு இருக்கிற கழுதை நமக்குதான். அது உரிமையாளரிடம் இருந்தாலும் அது நம் பயன்பாட்டிற்காகவே படைக்கப்பட்டிருக்கிறது.

ஆகவேஇ இன்னைக்கு ஒன்னு கத்துகிட்டேன். லைஃப்ல நமக்கு எந்தக் கழுதை அல்லது எந்த வாய்ப்பு அல்லது எந்த ஆற்றல் அல்லது எந்த உறவு கிடைக்குமோ அது மட்;டும்தான் கிடைக்கும். நாமலா கழுதைகளைத் தேடிக்கொண்டிருக்கத் தேவையில்லை. நேரம் வரும்போது 'யாரும் ஏறாத கழுதை நம்மிடம் வரும்'. நாமும் பவனி செல்வோம்.

இதை இன்னொரு விதமாகப் பார்த்தால் அடுத்தவருக்குரிய கழுதையை நாம் வைத்திருக்க நினைப்பதும் சால்பன்று.


3 comments:

  1. எனக்குத்தெரிந்து 'கழுதை' என்ற சொல் ஒருவரைக் கொஞ்சவும், திட்டவும் பயன்படுத்தப்பட்டது.அத்துணை முக்கியத்துவம்(!)வாய்ந்த சொல் அது.நம் இன்றையப் பிஞ்சுகள்கழுதையைப் படங்களில் தான் பார்க்க இயலும்.இன்றையக் கதாநாயகன் 'கழுதை' பற்றிய பதிவை தனக்கே உரித்தான சொல் ஆற்றலோடும்,சுவையோடும் தந்துள்ளார் தந்தை.ஆம், கண்டிப்பாக நம் விண்ணகத்தந்தை எதையுமே 'கூட்டுப்பயன்பாடுக்கென்று' படைப்பதில்லை.தன் ' கண்ணின் கருவிழியென' நம் ஒவ்வொருவருக்கும், சேரவேண்டியதைப் பெயர் சொல்லி பட்டியலிட்டுத்தான் படைக்கிறார்.எனக்கெடுக்கென்று என் பெயர் பொறிக்கப்பட்ட அரிசி யார் தடுத்தாலும் என் தட்டில் 'சோறாக' கண்டிப்பாக வந்துவிழும்....உண்மைதான். அடுத்தவரின் 'கழுதை'க்கு ஆசைப்படக்கூடாதென்பது எத்துணை உண்மையோ, அதேபோல நமக்கென்று 'அவர்' அனுப்பும் கழுதையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் உண்மையே!.... புனித வாரத்தின் 'புனிதம்' காப்போம்.........

    ReplyDelete
  2. Anonymous4/01/2015

    Yes, excellent sermon

    ReplyDelete
  3. Very inspirational

    ReplyDelete