Sunday, March 15, 2015

நான் உன்னை மறந்தால்

எருசலேமே! நான் உன்னை மறந்தால்
என் வலக்கை சூம்பிப்போவதாக!
உன்னை நான் நினையாவிடில்,
எனது மகிழ்ச்சியின் மகுடமாக
நான் எருசலேமைக் கருதாவிடில்,
என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
(திபா 137)

நேற்று எங்கள் பல்கலைக்கழகத்தில் சிறப்பு அமர்வு ஒன்று இருந்தது. 'எருசலேமின் அழிவும், சட்ட நூல்களின் எழுச்சியும்' என்ற தலைப்பில் இரண்டு வாரங்கள் கழித்து நடக்கவிருக்கும் ஒரு சிம்போசியத்திற்கான முன்னோட்டமாக அது இருந்தது.

இந்தத் தலைப்பைக் கேட்டவுடன் எனக்கு திபா 137தான் நினைவிற்கு வந்தது.

இதுதான் நாளைய பதிலுரைப்பாடல்.

மிகவும் சோகமான பாடல். நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வெறும் புலம்பல் மட்டுமல்ல. சோகம், கோபம், கையறுநிலை, அந்நியப்படுத்தப்பட்ட வாழ்க்கை, கடவுள் நம்பிக்கை, கடவுளின் மேல் உள்ள பற்று என எல்லாம் பிரதிபலிக்கிறது.

எருசலேமின் மதில்களையும், ஆலயத்தையும், நகரத்தையும் எதிரிகள் அழிக்க நேரிடலாம். ஆனால், எருசலேம் என்பது ஒரு நினைவு. அந்த நினைவை யாராலும் அழிக்க முடியாது.

கடவுளும் கூட ஒரு நினைவுதான். அவருக்காக நாம் எழுப்பும் ஆலயங்கள், செய்யும் வழிபாடுகள் அனைத்தும் இந்த நினைவிற்கு வலுசேர்க்கின்றன. அவ்வளவுதான்.


1 comment:

  1. ஆமாம்! இந்த 137 ம் திருப்பாடலை வாசிக்கும் போதே நம் மனத்தை சோகம் அப்பிக்கொள்வது உண்மைதான்.எல்லாம் தங்கள் கையை விட்டுப் போயினும் தங்களுக்கு, தங்கள் உணர்வுகளுக்கு அர்த்தம் தரும் எருசலேம் பற்றிய நினைவைத் தங்களிடமிருந்து யாரும் பிரிக்க இயலாது என்று கூறுகின்றனர்.நாமும் கூட இதை உணர்ந்திருப்போம்...துன்பத்தின் நடுவே துவள நேரிடினும் அதை சகித்துக்கொள்ள நமக்கு உந்துதல் சக்தி தரும் சில விஷயங்கள், நமக்கு நெருக்கமானவர்களின் நினைவுகள்...இவை இருக்கத்தான் செய்கின்றன.ஆனால் அதற்காக 'கடவுளும் கூட ஒரு நினைவுதான்' என்பதை எப்படி ஏற்க முடியும்? எல்லா நினைவுகளுமா நம்மை நற்கதிக்கு இட்டுச் செல்கின்றன? இல்லை..கடவுள் என்பது என் பிறப்போடு வந்தது.என் இரத்தத்தோடு, உயிரோடு,உணர்வோடு கலந்தது.என் உயிரும், என் நினைவுகளும் என்னிடமிருந்து பறிக்கப்படலாம்...ஆனால் என் கடவுளை யாராலும் அழிக்க முடியாது.இதுதான் என்னுடைய மிகச்சாதாரண ( simple) விசுவாசம் எனக்குக் கற்றுக்கொடுத்திருப்பது.அது சரியா,தவறா....தந்தைதான் விளக்கமளிக்க வேண்டும்....

    ReplyDelete