Friday, July 15, 2022

எளியோர்பக்கம் இறைவன்

இன்றைய (16 ஜூலை 2022) முதல் வாசகம் (மீக்கா 2:1-5)

எளியோர்பக்கம் இறைவன்

மீக்கா நூலிலிருந்து நாம் வாசிக்கத் தொடங்குகின்றோம். அநீதிகளும் வழிபாட்டுப் பிறழ்வுகளும் மேலோங்கி நின்ற காலத்தில் இறைவாக்குரைக்கின்றார் மீக்கா. 

தன் சமகாலத்து மக்கள் செய்த மூன்று தீச்செயல்களைச் சுட்டிக் காட்டுகின்றார்: (அ) வயல்கள்மேல் ஆசை, (ஆ) வீடுகள்மேல் இச்சை, (இ) ஆண்கள்மேல் (மனிதர்கள்மேல்) ஒடுக்குமுறை.

இத்தீச்செயல்களால் பாதிக்கப்படுகின்ற எளியோர்பக்கம் துணைநிற்கிறார் ஆண்டவராகிய கடவுள்.

நற்செய்தி வாசகத்தில் இயேசு ஆற்றுகின்ற நற்செயல்களைக் காண்கின்ற பரிசேயர்கள் அவரை அழித்துவிடத் துணிகின்றனர். ஆனால், இயேசுவோ தொடர்ந்து நன்மைகள் செய்துகொண்டே செல்கின்றார். மேலும், அவர் எளியோர் பக்கம் நிற்கின்றார். மற்றவர்களின் இகழ்ச்சி அல்லது புகழ்ச்சி கண்டு அவர் தன் பாதையை மாற்றிக்கொள்வில்லை.

இன்றைய வாசகங்கள் நமக்குத் தரும் பாடங்கள் எவை?

(அ) மீக்கா காலத்து மக்கள் போல படுக்கையில் படுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு நாம் தீங்கிழைக்க திட்டங்கள் தீட்டுதல் தவறு.

(ஆ) மற்றவர்களின் தீச்செயல் அல்லது தீய இயல்பு கண்டு நம் நற்செயலையும் நற்குணத்தையும் மாற்றிக்கொள்ளத் தேவையில்லை.

(இ) ஒவ்வொரு நிலையிலும் வலுவற்றவர்கள் அல்லது எளியவர்களைக் கண்டு அவர்கள்பக்கம் துணை நிற்றல்.


1 comment:

  1. Philomena Arockiasamy7/15/2022

    “ ஆசையே அனைத்து துன்பங்களுக்கும் காரணம்.” மனத்தில் எழும் தேவையற்ற ஆசைகளுக்கு வடிவம் கொடுக்க நினைக்கும் நேர்மையற்ற வர்க்கத்தால் பாதிக்கப்படும் எளியோர் பக்கம் நிற்கும் நம் இறைவன்!
    நம்மைச்சுற்றி நிற்கும் உலகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆனாலும் காளான்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கும் மரம் போல் தன் நற்குணத்தை மாற்றிக்கொள்ளாதவனே மனிதன்! வலுவற்றவரின் நிலை கண்டு அவர் பக்கம் நிற்கையில் நாம் கூட கடவுளே! எளியோரின் இறைவன் நம் பக்கமும் நிற்பாராக!

    ReplyDelete