ஆண்டவரின் கருவி
புனித இஞ்ஞாசியார் தன்னுடைய ஆன்மீகப் பயிற்சிகள் (The Spiritual Exercises) நூலின் ஒரு பகுதியில், 'கடவுள் பயன்படுத்தும் மருத்துவர் கத்தி' (surgeon's knife) என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகின்றார். மருத்துவரின் கத்தி அடுத்தவரை வெட்டிக் காயப்படுத்தும். ஆனால், அப்படி அந்தக் கத்தி வெட்டிக் காயத்தை ஏற்படுத்தினால்தான் மற்றவர் நலம் பெறுவார். ஆக, மருத்துவரின் கத்தி தரும் வலி எப்போதுமே நலமானது. சிறிது நேர துன்பத்தை அது தந்தாலும், நீண்ட நலனை அது பின்நாளில் ஒருவருக்குத் தரும்.
இன்றைய முதல் வாசகத்தில், கடவுளின் மருத்துவர் கத்தியாக அசீரியா நாடு இருக்கிறது. தன்னுடைய சொந்த இஸ்ரயேல் மக்களின் தவறுகளைக் கண்டிக்க, ஆண்டவராகிய கடவுள், அசீரியாவை மருத்துவர் கத்தியாகப் பயன்படுத்துகின்றார். ஆண்டவர் கொடுக்கும் மருந்து நோயைவிடக் கசப்பானதாக அவர்களுக்குத் தோன்றுகிறது.
ஆனால், அதே மருத்துவர் கத்தி, கொலை செய்யும் கத்தியாக மாறியபோது, ஆண்டவர் தன் மக்களைக் காப்பாற்ற இறங்கி வருகின்றார்.
இவ்வாறாக, 'கொல்வதும் நானே, உயிர்தருவதும் நானே' என்று தன்னை எல்லாம் வல்ல இறைவனாகக் காட்டுகின்றார்.
இதுவே மறைபொருள்.
எல்லாம் இறைவனிடமிருந்தே வருகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத் 11:25-27), விண்ணரசின் மறைபொருள் குழந்தைகளுக்கு (சீடர்களுக்கு) வெளிப்படுத்தப்பட்டது பற்றி மகிழ்கின்றார் இயேசு. வாழ்வில் நமக்கு நடப்பவை அனைத்திற்குமான பொருளை அறிந்திருப்பவர் இறைவனே. அவற்றை நாம் நம் அறிவால் அல்ல, அவருடைய வெளிப்பாட்டலே அறிந்துகொள்ள முடியும்.
நமக்குத் தேவையான மனநிலை என்ன?
குழந்தைகளைப் போல, நம் கைகளை விரித்து அவரிடம் நீட்டுவது.
நமக்கு வாழ்வில் முக்காலத்திலும் நடந்ததையும்… நடக்கவிருப்பவற்றையும் அறிந்து கொள்ள, கைகளை நீட்டி இறைவனைத் தேடும் ஒரு குழந்தை மனமும்……
ReplyDeleteநாம் தவறு செய்கையில் நம்மைக் கொல்லவும், நாம் நோய்வாய்ப் படுகையில் நம்மைக்காப்பாற்றவும் தேவை…. ஒரு கத்தி. அக்கத்தி இறங்கி வருகிறது இறைவன் உருவில்! ஆம்! உயிர்தரும் இறைவன் தான் உயிரையும் எடுக்கிறார்!
நான் யார்! என் அடுத்தவரின் புண்ணை சரிசெய்யும் கத்தியா? வெந்ந புண்ணை கீறிவிட்டு வேடிக்கை பார்க்கும் கத்தியா?
கண்டிப்பாக முன்னையதாக இருக்கவே என் விருப்பம்.
தந்தைக்கு நன்றி!