Friday, April 1, 2022

நீங்களும் ஏமாந்து போனீர்களோ?

நாளின் (2 ஏப்ரல் 2022) நற்சொல்

நீங்களும் ஏமாந்து போனீர்களோ?

எருசலேமில் திருவிழாவுக்கு வந்திருக்கின்ற இயேசுவைப் பிடிக்கப் படைவீரர்களை அனுப்புகின்றனர் தலைமைக் குருக்களும் பரிசேயர்களும். கைது செய்யச் சென்ற காவலர்கள், 'அவரைப் போல எவரும் என்றுமே பேசியதில்லை' என்று வெறுங்கையராய்த் திரும்பி வருகின்றனர். 

நிக்கதேம் இயேசுவுக்காகப் பரிந்து பேசுகின்றார். 

இயேசுவின் கலிலேயப் பின்புலம் அவர்களுக்கு இடறலாக இருக்கின்றது.

இறுதியில், ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்.

இந்த நிகழ்வு இரு விடயங்களை நமக்குக் கற்றுத் தருகின்றது:

ஒன்று, இயேசுவைப் பற்றிய என் அறிவிக்கை எப்படி இருக்கிறது?

இரண்டு, வாழ்வில் பல பிரச்சினைகளுக்கு நம்மால் விடை காண இயல்வதில்லை. பொதுவான பிரச்சினைகளை நம்மால் எதிர்கொள்ள இயலாதபோது வீட்டுக்குத் திரும்புதல் நலம். ஏனெனில், வீட்டில்தான் தெளிவு பிறக்கும்.


1 comment:

  1. ஒரு மாசில்லாப் புறாவைப் பிடித்து வர படைவீரர்கள். “அவரைப் போல் எவரும் பேசியதில்லை;” கூடவே நிக்கதேமின் பரிந்துரை. முகத்தில் அடித்தாற்போன்ற உண்மை சுடுகிறது தலைமை குருக்களுக்கும்,பரிசேயர்களுக்கும்.கைகளைப் பிசைந்து நிற்கும் படைவீரர்கள் செய்வதென்னவென்று தெரியாமல் வீடு திரும்புகின்றனர்.
    தந்தையின் வரிகள் யோசிக்க வைக்கின்றன. பலமுறை நம் வீடுகளில் உள்ள சிறிய பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமல் அங்குமிங்கும் அலைந்து திரிந்து மீண்டும் வீட்டிற்கே வந்து சேருவோம்….தீர்வு கிடைக்குமிடம் நம் இல்லமே என்று.
    சிறிய விஷயமே எனினும் கிடைக்கும் அது கொடுக்கும் தீர்வு மாமலைக்கு ஈடாகும் என்றுணர்த்திய தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete