Monday, April 4, 2022

அவருடைய நேரம்

நாளின் (4 ஏப்ரல் 2022) நற்சொல்

அவருடைய நேரம்

'இயேசு கற்பித்துக் கொண்டிருந்தபோது இவ்வாறு சொன்னார். அவரது நேரம் இன்னும் வராததால் யாரும் அவரைப் பிடிக்கவில்லை.'

கிறிஸ்தவர்களாகிய நாம் நேரம், காலம் பார்க்கலமா? பார்க்கக் கூடாது என்றால், 'ஒவ்வொன்றுக்கும் ஒரு காலம் உண்டு' என்று சபை உரையாளர் (3:1-10) சொல்வது ஏன்? 'எனது நேரம் இன்னும் வரவில்லை' என்று இயேசுவும் (யோவா 7:6), 'அவரது நேரம் இன்னும் வரவில்லை' என்று நற்செய்தியாளரும் பதிவு செய்வது ஏன்?

'ஆள் செய்யாததை நாள் செய்யும்' என்னும் சொலவடை நம் ஊர்களில் உண்டு.

விவிலியத்தில் நேரம் என்பது, 'காலண்டர் நேரம்' மற்றும் 'மீட்பு நேரம்' என்னும் இரு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை நேர அடிப்படையில் நம் செயல்களை நாம் வரையறுக்கின்றோம். இரண்டாம் வகை நேர அடிப்படையில் கடவுள் நம் வாழ்க்கை நிகழ்வுகளை நகர்த்துகிறார்.

முதல் வகை நேரம் நம்மைப் பரபரப்பாக வைத்திருக்கின்றது. இரண்டாம் வகை நேரம் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ நம்மைத் தூண்டுகிறது.

முதல் வகை நேரம் விடுத்து இரண்டாம் வகை நேரம் பற்றுதல் ஞானம்.

முதல் வாசகத்தில் சூசன்னாவைக் காப்பாற்ற, கடவுள் தகுந்த நேரத்தில் தானியேலை அனுப்புகின்றார். 


1 comment:

  1. “ஆம் காலங்களும்,நேரங்களும் அவருக்கு உட்பட்டவையே!”….. ஆனாலும் மனிதன் தன் புத்திக்குட்பட்டு…விஞ்ஞானத்தின் துணையையும்,கோள்களின் அசைவையும் கொண்டு கணிக்கும் நேரமே “காலண்டர் நேரம்” எனினும், அதுவும் மானிட மகனுக்குட்பட்டதே! நாம்வரையறுக்கும் நேரம் நம்மைப்பரபரப்பாக வைத்திடினும் சமயங்களில் நம்மைக்கைவிடலாம். ஆனால் ‘அவரின் நேரம் தெளிவானது; நம் பாதுகாப்பையும், நன்மையையுமே முதன்மைப்படுத்துவது.” அதுவே நம்மை நல்வழிக்கு இட்டுச்செல்வதும் கூட. அதுவே “ஞானம்” என்றும் சொல்கிறார் தந்தை.
    உண்மைதான்! இன்றும் கூட காலத்தின் கோரப்பிடியினாலும்,கயவர்களின் சூழ்ச்சியாலும் சிக்கித்தவிக்கும் ‘சூசன்னாக்கள்’ எத்தனையோ பேர் நம் கண் முன்னே . ஆனால் அவர்களைத்தக்க நேரத்தில் காப்பாற்றும் தானியல்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
    “இருள் சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நான் எதற்கும் அஞ்சிடேன்!”
    வாரத்தின் முதல்நாள்….நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்…தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete