இன்றைய (9 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 7:14-23)
மனிதருக்கு உள்ளேயிருந்து'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (திபா 4:23).
தூய்மை-தீட்டு என்பதை அடிப்படையாகக் கொண்ட யூத மரபில், வெளியிலிருந்து வருபவை தீட்டு அல்ல என்பதைத் தன் சீடர்களுக்கு அறிவுறுத்துகின்ற இயேசு, உள்ளத்திலிருந்து எழுபவற்றைக் குறித்துக் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கின்றார் இயேசு.
யூதர்கள் தங்களுக்கு வெளியே உள்ள அனைத்தையும் தூய்மை-தீட்டு என்று பிரித்துப் பார்த்தனர். வெளியில் தீட்டு எனத் தெரிபவற்றை ஒதுக்கிவிட்டு தங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள விரும்பினர். ஆனால், தங்கள் உள்ளத்தில் பேண வேண்டிய தூய்மையை மறந்தனர். அதை அவர்களுக்கு எடுத்துரைக்கின்றார் இயேசு.
நம் உள்ளத்தில் இருப்பவற்றைக் குறித்துக் கவனமாயிருத்தல் நலம்!
விழிப்பாயிருந்து நம் உள்ளத்தைக் காவல் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிக்கூறுகிறார் இயேசு. ‘தீட்டு’ என்பது வெளியேயிருந்து உள்ளே போவதா? இல்லை உள்ளேயிருந்து வெளியே வருவதா? என்று குழம்பிநின்ற மக்களிடம் மிகத்தெளிவுபடப் பேசுகிறார்.வெளியேயிருந்து வருபவை நம் உடலுக்குச்செய்ய வேண்டிய நல்லதைச் செய்து விட்டு தேவையற்ற கழிவுப்பொருளாக வெளியேறுகின்றன…நம் ஆன்மாவைக் களங்கப்படுத்தாமல். ஆனால் தேவையற்ற குணங்களான கோபம்,வெறுப்பு, அகங்காரம்,தீச்செயல் போன்றவை உள்ளே பிறப்பெடுத்து வெளியே வருவதுடன்,நம்மையும்,நம்மைச்சுற்றியுருப்போரையும் களங்கப்படுத்துகின்றன.ஆகவே
ReplyDelete“விழிப்பாயிருந்து உன் உள்ளத்தைக்காவல் செய்.ஏனெனில் அதனின்று பிறப்பவை
உன் வாழ்க்கையின் போக்கை உறுதி செய்யும்”
எனகிறார் இயேசு. கேட்பதற்கு எளிமை போன்று தெரியும் விவிஷயங்கள் ஒழுங்காக்க் கடைபிடிக்க வில்லையெனில் நம்மையே அழித்து விடுபவை.எனவே எச்சரிக்கையோடு விழித்திருப்போம்…..எனும் வாழ்வின் பெரிய விஷயங்கள் குறித்ததொரு பதிவிற்காகத் தந்தைக்கு நன்றிகள்!!!