Thursday, February 24, 2022

கடின உள்ளம்

இன்றைய (25 பிப்ரவரி 2022) நற்செய்தி (மாற் 10:1-12)

கடின உள்ளம்

முதல் ஏற்பாட்டில், விடுதலைப் பயண நூலில், ஆண்டவராகிய கடவுள் பத்துக் கொள்ளை நோய்களை அனுப்பும் நிகழ்வில், ஒவ்வொரு முறையும் பாரவோனின் உள்ளம் கடினமாவதை வாசிக்கின்றோம். செங்கடலைக் கடந்து இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிப் பயணம் செய்யும்போது ஆண்டவர் தங்களோடு இருக்கிறாரா எனச் சோதித்தறியும் நிகழ்வில், 'உங்கள் இதயங்களைக் கடினப்படுத்த வேண்டாம்' என எச்சரிக்கின்றார் மோசே.

கடின உள்ளம் தன்மையம் கொண்டதாக மாறுகிறது. கடின உள்ளம் மற்றவர்களைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.

மணமுறிவு பற்றிய கேள்வி இயேசுவிடம் எழுப்பப்படுகின்றது. மணமுறிவு பற்றிய கேள்விக்கு விடை சொல்லும் இயேசு மணவுறவின் முக்கியத்துவம் பற்றி அவர்களுக்குச் சொல்கின்றார். மண உறவில் கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவரைச் சார்ந்தவர்களாக இருக்கின்றனர். ஆனால், மணமுறிவுக்கான காரணத்தைத் தேடும் போது அவர்கள் தன்மையம் கொண்டவர்களாக மாறிவிடுகின்றனர்.

இதையே இயேசு, 'கடின உள்ளம்' என்று சுட்டிக்காட்டுகின்றார்.

உறவுக்காக படைக்கப்பட்ட மனிதர்கள், முறிவைத் தேடும்போதெல்லாம் தன்னலம் நோக்கியே நகர்கிறார்கள்.


1 comment:

  1. “உறவு”…. அது எப்படிப்படதெனினும் “ஆண்டவரும் எங்களோடு உடனிருக்கிறார்” எனும் நினைப்பு நம்மைப் பிறர் மையம் கொண்டவர்களாகச் செய்கிறது.அதிலும் முக்கியமாக மணவுறவில் உள்ள கணவனும்,மனைவியும் இறைவனைத்தங்களிடேயே அனுமதிக்கையில் மனம் ஒத்தவராகவும்….அதையே இயேசுவை விடுத்து நிற்கையில் தன் மையம்கொண்டவராகவும்…..கடின உள்ளம் கொண்டவராகவும் மாறிவிடுகின்றனர்.
    எத்தகைய வாழ்வானாலும்….அதை வாழும் எத்தகைய மனிதரானாலும் இறைவன் தங்களுடன் பயனிப்பதை நம்பவேண்டும்; அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையேல் உறவுக்காகப் படைக்கப்பட்ட மனிதன் முறிவைத்தேடும்போதெல்லால் அவர்களில் மையம் கொண்டிருப்பது தன்னலமும்,கடின உள்ளமுமே!
    இந்தாளில் இறைவன் திருமண உறவில் இணைத்த அனைவருக்காகவும்….அவர்கள் தன்மையம் தவிர்த்துப்,பிறர் மையம் கோண்ட ஒரு வாழ்வை வாழவும் வரம் கேட்போம். கானாவூர் திருமணத்தின் புனிதம் காத்த அன்னைமரியாளும் இயேசுவும் இவர்களின் வாழ்வில் உடனிருந்து வளம் சேரக்க வரம் கேட்போம்.”குடும்பம் ஒரு கோவில்”…. “தமையனும்,தாயும் அங்கே இருக்கையில்” என்பதைப் புரிய வைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete