Tuesday, February 6, 2018

உள்ளேயிருந்து வருவது

நாளைய (7 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 7:14-23)

உள்ளேயிருந்து வருவது

தூய்மை - தீட்டு விவாதம் தொடர்கின்றது.

மனித உடலுக்குள் செல்லும் 'வெளியிலிருந்து உள்ளே'

மனித உள்ளத்திற்குளிருந்து வரும் 'உள்ளேயிருந்து வெளியே'

இந்த இரண்டு தளங்களில் 'தூய்மை - தீட்டு' விவாதத்தை நிறுத்துகிறார் இயேசு.

வெளியிருந்து உள்ளே செல்லும் உணவுப்பொருள்கள் - அவைகள் கழுவப்பட்டாலும், கழுவப்படாவில்லையென்றாலும் - அவைகள் மனிதர்களைத் தீட்டுப்படுத்துவதில்லை. ஏனெனில் அவைகள் உள்ளத்திற்குள் நுழையாமல் உடலுக்குள்தான் நுழைகின்றன.

ஆக, உடலில் தீட்டு என்பது கிடையாது. தீட்டான உறுப்பும் கிடையாது. ஒருவரின் உடலை வைத்து அவர் தீட்டானவர் என்ற சொல்வதும் தவறு என்பது இங்கே புலனாகிறது.

ஆனால் எதெல்லாம் உள்ளத்தைத் தொடுகிறதோ, அல்லது உள்ளத்திலிருந்து வெளிவருகிறதோ அது தீட்டாக இருக்க வாய்ப்பிருக்கிறது - பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்பரை, செருக்கு, மதிகேடு போன்றவை.

ஆக, உள்ளம் தீயவற்றை வெளிக்கொணர்கிறது.

இந்த உள்ளம் தானாகவே தீயவற்றைத் தோற்றுவிக்கிறதா? அல்லது வெளியிலிருந்து அது உள்ளே இழுக்கும் டேட்டாவை வைத்து தீயவற்றை தோற்றுவிக்கிறதா?

இரண்டும்தான் என நினைக்கிறேன்.

ஏனெனில், ஒரு இலட்ச ரூபாய் நோட்டுக்கட்டை இருவர் பார்க்கிறார்கள் என வைத்துக்கொள்வோம். பார்வை என்ற செயல் வழியாக டேட்டா இருவரின் உள்ளேயும் செல்கிறது. ஆனால், அதை ஒருவர் திருடுகின்றார். மற்றவர் அதைத் திருட மறுக்கின்றார். ஆக, பிராஸஸிங் செய்வது நம் மனம். ஆக, இந்த மனத்தை சரியான பிராஸஸிங்கில் வைத்திருக்க நாளைய நற்செய்தி நமக்கு அழைப்ப விடுக்கின்றது.

1 comment:

  1. நேற்றைய ‘ தூய்மை- தீட்டு’ எனும் விவாத்த்தின் தொடர்ச்சியாக, வெளியேயிருந்து்உள்ளே செல்வது எதுவும் ஒருவரை மாசு படுத்துவது இல்லை எனவும், மாறாக உள்ளே இருந்து வெளியே செல்வதுதான்்மாசுபடுத்தக்கூடியது என்றும், ஆகவே நாம் எதைக்கொடுக்கிறோம் என்பதில் கவனம் தேவை என்பதையும் உணர்ந்து செய்ய உணர்த்தப்படுகிறோம். நம் உள்ளம் தானாகவே பாழ்பட்டுக்கிடக்கிறதா இல்லை வெளியேயிருத்து்வரும் விடயங்கள் தான் காரணிகளா .... யோசிக்க வைக்கின்றன தந்தையின் வார்த்தைகள். என்றுமே நல்லவற்றை்மட்டுமே சிந்திக்கவும், அவற்றை மட்டுமே செயலாக்கவும் இறைவனிடம் வரம் கேட்போம். புரிந்து கொள்தல் கொஞ்சம் சிக்கலேயானாலும்்புரிந்து செயல்பட வேண்டிய விடயத்தைத் தந்த தந்தைக்கு நன்றிகள்!! இன்றைய நாள் இனிய நாளாகட்டும்!!!

    ReplyDelete