நாளை பேதுருவின் தலைமைப்பீட விழாவைக் கொண்டாடுகிறோம்.
உரோமை தூய பேதுரு பேராலயத்தில் நம் வலது புறத்தில் பேதுருவின் வெண்கலச்சிலை ஒன்று உண்டு. வழக்கமாக வைத்திருக்கும் சாவிகள் இல்லாமல் ஒரு நாற்காலி, ஒரு தொப்பி என ஒய்யாரமாக அமர்ந்திருப்பார். அவரின் பாதங்கள் பக்தர்களின் கரம் பட்டதால் சூம்பிப்போய் இருக்கும்.
பேதுருவின் வித்தியாசமான இந்த முகத்தையே நாளை திருநாளாகக் கொண்டாடுகிறோம்.
பேதுருவின் வாழ்க்கையை 'கண்ணீருக்கு முன்,' 'கண்ணீருக்கு பின்' என்று இரண்டாகப் பிரிக்கலாம். சேவல் கூவிய அந்த இளங்காலைப் பொழுதில் அவர் வடித்த கண்ணீர்த்துளிகள்தாம்.
தினமும் காலையில் சேவல் கூவும் சத்தம் கேட்கும்போதெல்லாம் இவருக்கு தான் செய்த பாவம்தானே நினைவிற்கு வந்திருக்கும்!
பழையது நல்லது என்றால் நாம் திரும்ப நினைத்து அசைபோடுகின்றோம்.
கெட்டது என்றால் அதைப்பற்றியே நினைக்க மறுக்கின்றோம்.
பேதுருவை தலைமைத்துவத்திற்கு உயர்த்தியது கடவுளின் அருள்தான் என்றாலும், அவரின் இந்த நல்ல குணமும்தான். அதாவது, தவறு செய்துவிட்டேன். கண்ணீர் வடித்துவிட்டேன். மாறிவிட்டேன். தன் குற்ற உணர்வு தன்னைக் கட்டிப்போட அவர் அனுமதிக்கவில்லை.
இந்தக் கட்டின்மையே எல்லா ஆன்மீகத்தின் ஆணிவேர்.
எந்த இடத்திலும் நாம் கட்டின்மையை அடையலாம்.
இறுதியாக,
'ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே!
எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?'
என்கிறார் பேதுரு.
தான் மறுதலித்ததையும் மறந்துவிட்டார் பேதுரு. அன்பின் வலிமை இதுவே.

" பேதுரு" ... 'தினமும் காலை சேவல் கூவும் சத்தம் கேட்கும் போதெல்லாம் தான் செய்த பாவம் தானே நினைவிற்கு வந்திருக்கும்?' திருச்சபையின் தலைவருக்கு ஏற்பட்ட இந்த நிலைமை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.அந்த சூழ்நிலையை மேற்கொள்ளவும் அவரே உதாரணமாக நிற்கிறார்.செய்த பாவத்திற்கு வருந்த வேண்டும்தான்; ஆனால் அந்தக் குற்ற உணர்வே நம்மைக்கட்டிப்போடக்கூடாது என்ற எண்ணமே அவரைத் தலைமைப்பீடத்திற்கு உயர்த்தி இருக்கவேண்டும்."நானும் பாவிதான்" என்று என்னைப்பற்றி நான் உணரும் இந்நேரத்தில் " ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?" என்று சொல்ல வேண்டும் போல் உள்ளது. இதுவும் அன்பின் வலிமையாக இருக்கலாம் அல்லவா? அன்பின் ஆழம் சொல்லும் அழகானதொரு பதிவிற்காகத் தந்தையை வாயாரப்பாராட்டலாம்!!!
ReplyDelete