Monday, February 19, 2018

எனக்கே செய்தீர்கள்!

நாளைய (20.02.2018) நற்செய்தி (மத் 25:31-46)

எனக்கே செய்தீர்கள்!

'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள்!'

நாளைய நற்செய்தியில் வரும் மேற்காணும் வாக்கியம் எனக்கு எப்போதும் நெருடலாகவே இருக்கும்.

'மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் இவருக்கே செய்தீர்கள்' என இயேசு சொல்லியிருந்தால் நலமாய் இருந்திருக்கும் எனத் தோன்றுகிறது. எப்படி?

மனிதர்கள் இலக்குகள். அவர்கள் ஒருபோதும் இலக்குகளை அடையப் பயன்படுத்தப்படும் பொருள் அல்ல. மனிதர் என்பவர் ஒரு நிலவு. அவர் அந்த நிலவிற்குச் செல்லப் பயன்படும் ராக்கெட் அல்ல. ஆக, தங்களிலேயே நிறைவு பெற்றிருக்கின்ற மனிதர் ஒருவரைப் பயன்படுத்தி நான் மோட்சம் அல்லது நிறைவாழ்வு அடைய விரும்புவது தவறு. 'இவருக்கு நான் துணி கொடுத்தால், தண்ணீர் கொடுத்தால், எனக்கு மோட்சம் கிடைக்கும்' என்றால் நான் உண்மையில் இந்த நபரை என் தேவைக்காக பயன்படுத்துகிறேன் என்பதுதானே பொருள்.

'நான் உங்களுக்குச் செய்யவில்லை. கடவுளுக்கே செய்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு தொழுநோய் பிடித்தவரின் புண்களைத் துடைத்த அன்னை தெரசாவைப் பார்த்து அந்த மனிதர் சொன்னாராம்: 'நிறுத்திக்கொள்ளுங்கள். போதும். நீங்கள் செய்ததை எனக்காக செய்யவில்லை என்றால் உங்கள் உதவி எனக்குத் தேவையில்லை.'

இன்று நாம் செய்யும் எந்தச் செயல்களும் பிறரைப் பயன்படுத்தி நம் மோட்சத்தை அடைவதாக இருந்தால் அது தவறு என்பதை உணர்ந்துகொள்ளலாம்.

இங்கே ஒரே ஒரு ஆறதல்:

கடவுள் வலுக்குறைந்தவர்களோடு தன்னை ஒன்றிணைத்துக்கொள்கிறார்.

1 comment:

  1. ஆண்டாண்டு காலமாய் நாம் கேட்டு,நடைமுறுத்திப்படுத்தி வரும் பழக்கங்களை 'ஐயோ! நம்ப ஏதும் தப்பா செய்கிறோமோ' எனத்திரும்பிப்பார்க்க வைக்கும் குணம் தந்தையின் வரிகளுக்கு உண்டு.ஒரு வடைய வாங்கினோமா,பிச்சமா,வாயில போட்டமான்னு இல்லாம எல்லாத்துக்கும் இப்படிப் பார்க்க ஆரம்பித்தால் எந்த நல்ல செயலையும் நம்மால் செய்ய இயலாது. தேவைப்பட்ட நேரத்தில்,தேவைப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்றதைச் செய்த மகிழ்வு ஒன்றே போதும்....மீதி விஷயங்கள் தன்னைத்தானே பார்த்துக்கொள்ளும்.ஆனாலும் அந்தக் கடைசி வரி..." கடவுள் வலுக்குறைந்தவர்களோடு தன்னை ஒன்றித்துக்கொள்கிறார்!"... எனக்குமே ஆறுதலான வரிகள்தான். எப்படியாவது, இந்தத் தவக்காலத்திலாவது ஒரு நல்லதைச் செய்ய வேண்டுமெனும் உந்துதலைத் தந்த தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete